என் மலர்
விளையாட்டு
கடந்த 19-ந்தேதி நடந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஏலம் எடுக்கப்படாதது காயத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்ல முடியாது என நியூசிலாந்து தொடருக்கு தாயராகும் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘ஏலம் எடுக்கப்படாதது காயத்தை ஏற்படுத்தவில்லை என்று உண்மையிலேயே சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய மனநிலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முயற்சிப்பேன்.
ஆந்திரா அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய முழு மனதுடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். அதேபோல்தான் இந்தியாவுக்கும். ஆகவே, ஏன் ஏலம் எடுக்கப்படவில்லை என்பது குறித்து உண்மையிலேயே நான் யோசிக்கவில்லை.
ஐபிஎல் போட்டிக்கான பேட்டிங் தகுதி என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னுடைய ஆட்டத்தை நான் மாற்றமாட்டேன். ஏனென்றால் நான் எனது அணிக்காக விளையாடுகிறேன். நான் விளையாடும்போது என்னுடைய அணியை பற்றி மட்டும்தான் யோசிப்பேன். அப்படித்தான் பேட்டிங்கும் செய்வேன்’’ என்றார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடக்கிறது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்டுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் சிட்னி போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதில் 35 வயது சுழற்பந்து வீச்சாளரான சோமர்வில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சோமர்வில் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்துள்ளது நியூசிலாந்து.
ரன்கள் குவிக்க கடினமான ஆடுகளத்தில் ஆர்ச்சர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வாரி வழங்கினார். அவர் 17 ஓவர்களில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
குறிப்பாக டி காக் அவரது பந்தில் மூன்று சிக்சர்கள் விளாசினார். இங்கிலாந்தில் டியூக் பந்து பயன்படுத்தப்படும். அதேவேளையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கூக்கபுர்ரா பந்து பயன்படுத்தப்படும்.
ஆர்ச்சர் பந்து வீச்சு பற்றி வேகப்பந்து ஜாம்பவான் டேல் ஸ்டெயினிடம் கேட்கப்பட்டது. அப்போது, ‘‘கூக்கபுர்ரா பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆர்ச்சருக்கு தெரியவில்லை. அவருக்கு ஏற்ற சிறந்த பேட்ஸ்மேன் டி காக்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் சீன் அப்போட் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அப்போட் இந்தியா தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக டி'ஆர்கி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் உள்ளனர். இதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான டி'ஆர்சி ஷார்ட்-ஐ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் ஜனவரி 14-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி ஜனவரி 17-ந்தேதி ராஜ்கோட்டிலும், 3-வது போட்டி ஜனவரி 19-ந்தேதி பெங்களூருவிலும் நடக்கிறது.
அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியது வரலாம். ஆபரேஷன் செய்யப்பட்டால் அதன் பிறகு அணிக்கு திரும்புவதில் சிக்கல் உருவாகும். ஆனால் அவரது இந்த மோசமான நிலைமைக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிதான் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
2018-ம் ஆண்டில் புவனேஷ்வர் குமார் அடிக்கடி காயத்தில் சிக்கினார். அப்போதெல்லாம் அவர் கிரிக்கெட் அகாடமியில்தான் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டார். பலமுறை ஸ்கேன் எடுத்து பார்த்த போதிலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை, முழுமையாக குணமாகி விட்டார் என்று கூறி கிரிக்கெட் அகாடமி அனுப்பி வைத்தது. முன்கூட்டியே குடலிறக்க பிரச்சினையை தேசிய அகாடமி கண்டறியாதது இந்திய அணி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனால் நொந்து போயுள்ள புவனேஷ்வர்குமார் கூறுகையில், ‘‘இந்த பாதிப்பில் இருந்து நான் எப்போது குணமடைந்து உடல்தகுதியை எட்டி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்புவேன் என்பது தெரியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமி முடிந்த அளவுக்கு சிறந்தவற்றையே செய்கிறது.
ஆனால் எங்கு தவறு நடந்தது, ஏன் இந்த பாதிப்பை முன்கூட்டியே கண்டறியவில்லை என்பது தெரியவில்லை. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் பேச வேண்டும்’’ என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் லாபஸ்சாக்னே அரைசதமும், இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வீரர் குயிண்டான் டி காக் முதல் இன்னிங்சில் 95 ரன்களும் விளாசினர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த லாபஸ்சாக்னே ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
குயிண்டான் டி காக் 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் டேனிஷ் கனேரியா. இந்து மதத்தை சேர்ந்த இவர் பாகிஸ்தான் அணிக்காக 2000 முதல் 2010-ம் ஆண்டு வரை 61 டெஸ்ட், 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்துக்காக இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனேரியா விளையாடிய கால கட்டத்தில் மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டது என்றும், அவருடன் ஒன்றாக அமர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் சாப்பிட தயங்கினர் என்றும், அவர் அளித்த உணவை உண்ண மறுத்தனர் என்றும் அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் பரபரப்பான குற்றச் சாட்டை கூறி இருந்தார்.
சோயிப் அக்தர் பேசியது அனைத்தும் உண்மை. தன்னை பல வீரர்கள் பாகுபாடு காட்டி நடத்தினார்கள் என்றும், சில வீரர்கள் ஆதரவு அளித்தனர் என்றும் கனேரியா தெரிவித்து இருந்தார்.
கனேரியாவின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மறுத்து பதிலடி கொடுத்து உள்ளார். பாகிஸ்தானியர்களுக்கு பெரிய மனது இருக்கிறது என்றும், கிரிக்கெட்டில் மதம் கலக்கவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
கிரிக்கெட்டில் ஒருபோதும் மதம் கலக்கவில்லை. எனது தலைமையின் கீழ் கனேரியா பல போட்டிகளில் விளையாடி உள்ளார். சக்லைன் முஸ்தாக்கை அணியில் சேர்ப்பதை காட்டிலும் கனேரியாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அணி தேர்வாளர்களிடம் நான் கூறி இருக்கிறேன். பாகிஸ்தானின் எதிர்கால பந்து வீச்சாளர்களாக இருக்க போகிறார் என்று அவருக்கு வாய்ப்புகள் அளித்தோம்.
தற்போது அவர் கூறிய குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. எனக்கு தெரிந்து அது போன்று யாரும் அணியில் நடந்து கொண்டது இல்லை.
ஒருவீரர் முஸ்லிம் இல்லை என்பதற்காக அவரை பாகுபாடு காட்டி நடத்தவும் இல்லை. அது போன்ற சம்பவம் நடந்தது இல்லை. இதற்கு முன்பு விளையாடிய எந்த வீரர்களிடமும் பாகுபாடு காட்டியது இல்லை.
பாகிஸ்தான் மக்களுக்கு பெரிய மனது இருக்கிறது. ஒவ்வொருவரையும் திறந்த மனதுடன் ஏற்பார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு சிறிய இதயம். அதனால் தான் இவ்வாறு நடத்துகிறார்கள் என சிலர் கூறுவதை நான் ஏற்க மாட்டேன்.
இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு 2004-ம் ஆண்டு பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தான் மக்கள் இன்முகத்துடனும், அன்புடனும் வரவேற்றார்கள்.
எங்குவேண்டுமானாலும் சென்று இந்திய வீரர்கள் சாப்பிட்டார்கள். ஷாப்பிங் செய்தார்கள். டாக்சியில் சென்றார்கள். ஆனால் யாரும் இந்திய வீரர்களிடம் பணம் வாங்க வில்லை.
அடுத்த ஒரு ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்றது. அப்போது நான்தான் கேப்டனாக இருந்தேன். பாகிஸ்தான் மக்கள் எப்படி வரவேற்றார்களோ அது போன்று அன்புடனும், பாசத்துடனும் இந்திய மக்களும், ரசிகர்களும் நடந்து கொண்டார்கள்.
அவர்கள் வீட்டு கதவுகளை திறந்து வைத்து எங்களுக்கு வரவேற்பு அளித்தார்கள். விருந்தினராக தங்கி செல்ல வேண்டும் என்று அன்புடன் அழைத்தார்கள். நாங்கள் சாப்பிட்ட உணவுக்கு எங்களிடம் பணம் வாங்கவும் மறுத்து விட்டனர்.
இரு நாட்டு மக்களிடையே அன்பு நிறைந்துள்ளது. எனவே கனேரியா சொல்வது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. நான் கேப்டனாக இருந்த காலத்தில் அவர் மீது பாகுபாடு காட்டப்பட வில்லை.
2005-ம் ஆண்டு இந்திய பயணத்தின் போது கொல்கத்தாவில் கங்குலியின் ரெஸ்டாரண்டுக்கு சென்றோம். நானும், தெண்டுல்கரும் இந்த உணவு விடுதியை திறந்து வைத்தோம்.
எனக்காக கங்குலி அனுப்பி வைத்த உணவுகளை நான் சாப்பிட்டேன். கங்குலி அளித்த உணவுகளை நாங்கள் சாப்பிட்ட போது கனேரியா அளித்த உணவுகளை எவ்வாறு மறுத்து இருப்போம்.
இவ்வாறு இன்சமாம் கூறி உள்ளார்.
இதற்கிடையே தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று சோயிப் அக்தர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “கனேரியா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு சில வீரர்கள் மட்டுமே புறக்கணித்தனர். ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியையும் நான் குற்றம் சாட்டவில்லை. பாகிஸ்தானில் மத ரீதியான பாகுபாடு காட்டப்படுவதில்லை. சூதாட்டத்தில் ஈடுபட்டதால்தான் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது” என்றார்.
இந்த சர்ச்சை குறித்து 23 வயதான நிகாத் ஜரீன் நேற்று கூறுகையில், ‘மேரிகோம் இந்த அளவுக்கு கோபம் அடைவார் என்று எதிர்பார்க்கவில்லை. தகுதி போட்டி நேர்மையாக, முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று தான் போராடினேன். முன்பு கடைபிடிக்கப்பட்ட இதற்கான நடைமுறையைத்தான் நான் எதிர்த்தேனே தவிர மேரிகோமை அல்ல. மேரிகோம் ஒரு ஜாம்பவான். எனவே அவர் தகுதி போட்டியை கண்டு பயப்படக்கூடாது. அவர் முன் நாங்கள் எல்லாம் கத்துகுட்டிகள். அவர் எப்போதும் தகுதி போட்டிக்கு தயாராக இருந்து, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.’ என்றார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா டி காக்கின் (95) சிறப்பான ஆட்டத்தால் 284 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது. ஜோ டென்லி அதிகபட்சமாக 50 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிலாண்டர் நான்கு விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், நார்ஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. வான் டெர் துஸ்சென் 51 ரன்னும், நார்ஜ் 40 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 272 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்சில் 103 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக 385 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 386 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா.
சுமார் இரண்டரை நாட்கள் மீதமிருந்ததால் நிலைத்து நின்றுவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. ரோரி பேர்ன்ஸ் 77 ரன்களுடனும், ஜோ டென்லி 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.சிறப்பாக விளையாடிய ரோரி பேர்ன்ஸ் களத்தில் நின்றதால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அதேவேளையில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்களையும் வீழ்த்திவிடும் என்றும் கருதப்பட்டது.

அதன்பின் வந்த கேப்டன் ஜோ ரூட் கவுரவமான ஸ்கோரை எட்ட போராடினார். ஆனால் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 9 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 22 ரன்னிலும், சாம் கர்ரன் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 268 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரபாடா நான்கு விக்கெட்டும், நார்ஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 95 ரன்கள் அடித்த குயிண்டான் டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் வரும் 3-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.
தேவங் காந்தி, ஜத்தின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த வருடம் வரை இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தேர்வுக்குழுவினர் நீக்கப்பட்டு புதிதான தேர்வுக்குழு நியமிக்கப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் பதவிக்காலம் முடிவடையும் எம்எஸ்கே பிரசாத், ககன்கோடா ஆகியோருக்கான மாற்று நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என கங்குலி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஆலோசனைக்குழு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். குழுவில் இடம் பெறும் வீரர்கள் பெயரை அறிவிக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் அதற்கான வீரர்களை அணுகும்போது அவர்கள் முடிவை தெரிவிக்க ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் கேட்பார்கள். இதுகுறித்து நாங்கள் விரைவில் அறிவிப்போம்’’ என்றார்.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 46 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்ததால், சர்வீசஸ் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் எளிதில் சேசிங் செய்தது.
10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி படுதோல்வியை சந்தித்ததை முன்னாள் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
மும்பை அணியைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினர்.
அதன்பின் இந்திய அணி வரும் ஐந்தாம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. சுமார் இரண்டு வார விடுமுறை இருந்தும் 25-ந்தேதி தொடங்கிய ரஞ்சி டிராபியை நிராகித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த மும்பை கிரிக்கெட் சங்கம் ‘‘இது மும்பை கிரிக்கெட்டிற்கு துரதிருஷ்டவசமானது. நாங்கள் இருவரிடமும் பேசினோம். அப்போது பிசிசிஐ எங்களை ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளது என்று கூறினார்கள்.
எனினும், நாங்கள் தேர்வுக்குழுவினருடன் பேசி உறுதி செய்தபோது, நாங்கள் அதுபோன்ற இந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றனர். அப்படியென்றால் அவர்களை ஓய்வு எடுக்கச் சொன்னது யார்?. இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோவா? அல்லது டிரைனரா? அல்லது அவர்களே ஓய்வு எடுக்க முடிவு செய்தனரா? பிசிசிஐ பின்புறத்தில் இருந்து இப்படி செய்கிறார்களா?.
தேர்வாளர்கள் உள்பட மும்பை கிரிக்கெட் சங்கம் இதை விரும்பவில்லை. அடுத்த உயர்மட்டக்குழுவில் இதுகுறித்து உறுதியாக விவாதிப்போம். முதல்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம்’’ என விளக்கம் அளித்துள்ளது.
என்றாலும் அந்த அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இரண்டு போட்டிகளின் நான்கு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.

நீல் வாக்னர் 46-வது டெஸ்டில் 200-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிச்சார்ட் ஹெட்லீ 40 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
டிரென்ட் போல்ட் 52 டெஸ்ட் போட்டிகளிலும், டிம் சவுத்தி 56 டெஸ்ட் போட்டிகளிலும் 200-வது விக்கெட்டை தொட்டனர்.






