என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்கி ஷார்ட், சீன் அப்போட்
    X
    ஆர்கி ஷார்ட், சீன் அப்போட்

    இந்திய தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் டி’ஆர்கி ஷார்ட் சேர்ப்பு

    இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் டி’ஆர்கி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் சீன் அப்போட் இடம் பிடித்திருந்தார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் சீன் அப்போட் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அப்போட் இந்தியா தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக டி'ஆர்கி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணியில் ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் உள்ளனர். இதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான டி'ஆர்சி ஷார்ட்-ஐ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் ஜனவரி 14-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி ஜனவரி 17-ந்தேதி ராஜ்கோட்டிலும், 3-வது போட்டி ஜனவரி 19-ந்தேதி பெங்களூருவிலும் நடக்கிறது.
    Next Story
    ×