என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்
    X
    ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

    கேப் டவுன் டெஸ்டில் ஆண்டர்சன், பிராட் ஆகியோரில் ஒருவருக்குதான் இடம்: இங்கிலாந்து பயிற்சியாளர்

    சுழற்பந்து வீச்சாளரை களம் இறக்கம் நோக்கில், கேப் டவுன் டெஸ்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரில் ஒருவருக்குதான் இடம் என இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் கர்ரன் (வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்), ஜாப்ரா ஆர்ச்சர் (வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்), பென் ஸ்டோக்ஸ் (வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்) ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் இடம் பெறவில்லை. ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களால் மிகப்பெரிய அளவில் தாக்குதலை ஏற்படுத்த முடியவில்லை.

    2-வது போட்டி வருகிற 3-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது. கேப் டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம் என இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

    ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

    ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராட்  நீண்ட காலமாக இணைந்து பந்து வீசி வருகின்றனர். காயம் ஏற்பட்டால் மட்டுமே இணைந்து விளையாடாமல் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் முதன்முதலாக இருவரில் ஒருவர் வெளியில் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×