என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா எங்களுடன் இருநாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட மறுத்து வருவதால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தன் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை அடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது இந்தியா - பகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர். அது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகை கிரிக்கெட் என்றாலும் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

    இதனால் ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும்.

    ஆனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் அதை நிறுத்தும் வரைக்கும் இரு நாடுகளுக்கிடையில் நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று இந்திய அரசு முடிவு எடுத்தது. 2008-ம் ஆண்டுக்குப்பின் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறாமல் உள்ளது.

    இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க பாகிஸ்தான் எவ்வளவோ முயற்சி எடுத்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி இல்லாமல் எங்களால் விளையாட முடியாது என்று பிசிசிஐ கைவிரித்து விட்டது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை டென்ஸ்போர்ட்ஸ் மற்றும் பிடிவி ஆகியவற்றிற்கு சுமார் 149 மில்லியன் டாலருக்கு கொடுத்திருந்தது. ஆனால் இரண்டு டிவி நிறுவனங்களும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான இரண்டு தொடர்களை நடத்தினால்தான் இந்தத் தொகையை தருவோம் என்று ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.

    தற்போது போட்டி நடைபெறாததால் 90 மில்லியன் டாலரை (இந்திய பண மதிப்பில் 688.40 கோடி ரூபாய்) குறைத்துள்ளன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஒளிபரப்பு உரிமம் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஸ்பான்சர், டிக்கெட் விற்பனை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு இன்றும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    ஒயிட்-பால் கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள குயிண்டன் டி காக், டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டன் இல்லை என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய முடிவு செய்தது.

    அதன்படி ஸ்மித் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    டு பிளிஸ்சிஸ் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    தற்போது ஸ்மித்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம் வரை அவர் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் தலைவராக இருப்பார்.

    இந்நிலையில் குயிண்டன் டி காக் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்படமாட்டார் என ஸ்மித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘குயிண்டன் டி காக் ஒயிட்-பால் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக செயல்படுவார். ஆனால், ஒர்க்லோடு மற்றும் மன திறன் அம்சத்தில் அவரை துடிப்பாக வைத்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக பணியாற்றுவது மிகவும் சவாலானது, நாங்கள் அவர்மீது சுமையை திணிக்க விரும்பவில்லை என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது.

    டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்று ஒருவர் பெயரை தற்போது குறிப்பிட முடியாது. நிறைய போர் ஒரு தரநிலையில் உள்ளனர்’’ என்றார்.
    தன்னிடம் வேலை செய்யும் நபர்களுக்கு எவ்வளவு நாட்கள் சம்பளம் கொடுக்க முடியும் என்று உறுதியாகத் தெரியவில்லை என மனோஜ் பிரபாகர் தனத கவலையை தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டுகள், தொழில்கள், பொருளாதாரம் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    சிறுகுறு தொழில்கள் நடத்துபவர்கள் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மனோஜ் பிரபாகர் அழகு பொருட்கள் தயாரிப்பது தொடர்பான தொழில் செய்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் தொழில் பாதித்துள்ளது.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘என்னுடைய தொழிற்சாலை ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். தொழிற்சாலையின் அருகில்தான் நான் வசித்து வருகிறேன். இதனால் என்னால் அவர்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். சம்பளம், சாப்பாடு உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறேன். எவ்வளவு நாள் இதை சரியாக செய்ய முடியும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை’’ என்றார்.
    ரசிகர்கள் இல்லாமல் அமெரிக்கா ஓபன் நடைபெற வாய்ப்பில்லை, ஜூன் மாதம் போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும் டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 13-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் லண்டனில் நடைபெற இருந்த விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டது.

    அப்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்திருந்தது.

    ஆனால் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் சுழற்றி அடித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஜூன் மாதம் போட்டி நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் தலைமை நிர்வாகி மைக் டவ்ஸ் கூறுகையில் ‘‘இறுதி முடிவு ஜூன் மாதத்தில் எடுக்கப்படும். ஆனால், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும் என்பது எங்களது இலக்கு அல்ல.

    ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது, போட்டியை ரத்து செய்வது போன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போது போட்டிக்கான சாத்தியம் இல்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது.

    அதிர்ஷ்டவசமாக நாங்கள் வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியை நடத்த உள்ளோம். அதற்கான நேரங்கள் இன்னும் உள்ளன. போட்டியை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம். இருந்தாலும் வீரர்கள், ரசிகர்கள், எங்களுடைய ஸ்டாஃப் ஆகியோரின் உடல்நலம் மிகமிக முக்கியம்.

    ஜூன் மாதம் முடிவை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். நாங்கள் மருத்துவ ஆலோசனைக்குழுவை அணுக இருக்கிறோம். ஐந்து அல்லது ஆறு மருத்துவர்களை கொண்ட குழுவை உருவாக்குவோம். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைப்படி நாங்கள் முடிவை எடுப்போம்’’ என்றார்.
    பாகிஸ்தானின் அதிவேக வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தரின் கிரிக்கெட் கேரியர் 2000-த்திலேயே முடிந்திருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் (வயது 44). ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்ட அக்தர், 100 மைல் வேகத்தில் பந்து வீசி உலக சாதனைப் படைத்தார். 1996-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன சோயிப் அக்தர் 2007-வரை விளையாடினார்.

    2000-த்தில் இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள சர்வதேச பேட்ஸ்மேன்கள் பயந்தனர். இந்த காலக்கட்டத்தில் அவரது பந்து வீச்சு குறித்து சர்ச்சை எழுந்தது. ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் என்பதுதான் அது.

    அந்த நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா ஐசிசி தலைவராக இருந்தார். இவரின் ஆதரவு இருந்ததால்தான் அக்தர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அவர் இல்லை என்றால் 2000-2001-க்கு முன்பே அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும் என பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் தவ்கிர் ஜியா தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் ஐசிசி தலைவர் ஜக்மோகன் டால்மியா

    இதுகுறித்து தவ்கிர் ஜியா கூறுகையில் ‘‘சோயிப் அக்தரின் பந்து வீச்சு ஆக்சன் குறித்த விவகாரத்தில் ஐசிசி-யின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ஐசிசி-யின் உறுப்பினர்கள் அக்தரின் பந்து வீச்சு முறைகேடானது என்று கூறியபோது, எங்களுக்கு ஆதரவான முடிவை டால்மியா எடுத்தார்.

    அக்தர் பிறந்ததில் இருந்தே வலது கையில் சற்று குறைபாடு இருக்கிறது. இதனால் ஐசிசி விதிமுறைக்கு (15 டிகிரிக்கு மேல் கையை வலைக்கக்கூடாது) சற்று கூடுதலாக பந்து வீச்சு ஆக்சனில் அனுமதி அளிக்கலாம் என நானும், டால்மியாவும் ஒரே நிலையில் இருந்ததால் ஐசிசி அவரை பந்து வீச அனுமதிக்கும் முடிவை எடுத்தது’’ என்றார்.
    இக்கட்டான சூழ்நிலை முடிந்து சகஜ நிலைக்கு திரும்பியதும் டி20 போட்டிகளில் விளையாட வீரர்கள் தயாராக உள்ளனர் என அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் அனைத்து வி்ளையாட்டு போட்டிகளிலும் முடங்கியுள்ளன. இனிமேல் கிரிக்கெட் எப்போதும் தொடங்கும் என்று யாராலும் தெளிவாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா ஆறு மாத காலத்திற்கு அதனுடைய எல்லையை மூடியுள்ளது. அதனடிப்படையில் பார்த்தால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை அந்நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை. அக்டோபர் - நவம்பர் மாதத்தில் அங்கு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    ஒருவேளை அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தால் உலக கோப்பை தொடருடன் தடைபட்ட கிரிக்கெட் விளையாட்டுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருவேளை நேரடியாக உலக கோப்பையில் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் எங்கள் அணி வீரர்கள் தயாராக உள்ளனர். ஏற்கனவே டி20-க்கான அணி கட்டமைக்கப்பட்டுவிட்டது என ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அலெக்ஸ் கேரி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி வீரர்கள் குழுவாகவும், நிலைத்தன்மையுடனும் இருக்கிறார்கள். எங்களுடைய தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் என்பது எங்களுக்குத் தெரியும். டாப் ஆர்டர் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்குவார். கடந்த 6 முதல் 12 மாதங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் லைன்-அப்பை வைத்துள்ளோம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கக்கூடியவர்கள்.

    அதேபோல் எங்களுடைய பந்து வீச்சாளர்களின் பலத்தையும் அறிந்திருப்பீர்கள். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, ஆஷ்டோன் அகர் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

    இனிமேல் எப்போது மைதானம் சென்று விளையாடுவோம் என்பது குறித்து என்னால் கூற இயலாது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இது பயன்தரக் கூடிய ஓய்வு. கோடைக்கால கிரிக்கெட் போட்டிகளை நாங்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டோம்.

    இதனால் வீரர்கள் புத்துணர்ச்சி பெற்று கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்தவுடன் விளையாட தயாராகிவிடுவார்கள். அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 உலக கோப்பை போட்டியாக இருந்தாலும் சரி’’ என்றார்.
    அடுத்த அறிவிப்பு வரும்வரை ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறிய நிலையில், எங்கள் நாட்டில் நடத்தலாம் என இலங்கை கிரிக்கெட வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் எந்தவொரு விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பும் முன் இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பி விடும். இதனால் எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு முன் இலங்கை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுவிடும். இதனால் ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த முடியும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறோம்’’ என்றார்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையில் 238 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
    தெண்டுல்கரைவிட வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு பந்துவீசுவதே கடினமாக இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார்.
    மும்பை:

    உலகின் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர், ஆஸ்திரேலியாவின் கிளைன் மெக்ராத். 50 வயதான மெக்ராத் 124 டெஸ்டுகளில் விளையாடி 563 விக்கெட்டுகளும், 250 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 381 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். தனது காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக மிரட்டிய அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த அதிவேக கேள்வி-பதில் வருமாறு:-

    கேள்வி: உங்களது வாழ்க்கையில் விடுபட்ட, செய்ய விரும்பிய ஏதாவது ஒரு பந்து வீச்சு?

    பதில்: மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்துவீச வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு.

    கேள்வி: சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), பிரையன் லாரா ( வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய இரு ஜாம்பவான்களில் யாருக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது?

    சச்சின் - லாரா

    பதில்: சவாலான கேள்வி. இருப்பினும் எனது அனுபவத்தில் லாராவுக்கு பந்து வீசுவது கொஞ்சம் கடினம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

    கேள்வி: இது உலக கோப்பை இறுதி ஆட்டம். நீங்கள் தான் கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டிய நெருக்கடி. எதிரணியின் வெற்றிக்கு 2 ரன் தேவை. இந்த மாதிரியான சூழலில் மன்கட் முறையில் ரன்அவுட் செய்வீர்களா?

    பதில்: ஒரு போதும் செய்யமாட்டேன்.

    கேள்வி: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய பவுலர்களில் முழுமையான ஒரு வேகப்பந்து வீச்சாளர் யார்?

    பதில்: ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ். அவர் பந்து வீசும் விதம் எனக்கு பிடிக்கும்.

    கேள்வி: உங்களது கனவு ஹாட்ரிக் விக்கெட்டில் (தொடர்ச்சியாக 3 வீரர்களை வீழ்த்துவது) எந்த பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

    பதில்: பிரையன் லாரா, சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட்.

    கேள்வி: 1990-களில் 20 ஓவர் கிரிக்கெட் போன்று அதிரடியாக ஆடிய வீரர் யார்?

    பதில்: மார்க்வாக் (ஆஸ்திரேலியா).

    கேள்வி: உங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு போட்டியின் முடிவை மாற்ற வேண்டும் என்று இருந்தால் உங்களது தேர்வு எந்த ஆட்டமாக இருக்கும்?

    பதில்: 1994-ம் ஆண்டு சிட்னியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டை (கடைசி விக்கெட்டாக மெக்ராத் ஆட்டம் இழந்த இந்த டெஸ்டில் 5 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது) சொல்வேன். அந்த போட்டியின் முடிவை மாற்றினால் மகிழ்ச்சி அடைவேன்.

    கேள்வி: ஒரு விளையாட்டு வீரராக கிரிக்கெட்டை தவிர்த்து வேறு விளையாட்டுகளில் யாரை சந்தித்து பேச ஆசைப்படுகிறீர்கள்?

    பதில்: உசேன் போல்ட் (தடகளம்), ரோஜர் பெடரர் (டென்னிஸ்), ஸ்டீவ் ரெட்கிராவ் (துடுப்பு படகு வீரர்).

    கேள்வி: உங்களது கிரிக்கெட் பயணம் சினிமாவாக எடுக்கப்பட்டால், உங்களது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்?

    பதில்: பிராட் பிட் (ஹாலிவுட் நடிகர்), ஹக் ஜாக்மன் (ஆஸ்திரேலிய நடிகர்), ஜிம் கேரி (கனடா நகைச்சுவை நடிகர்) ஆகியோரில் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு மெக்ராத் கூறியுள்ளார். 
    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், டி20 போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனவர் தினேஷ் கார்த்திக். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதாலும், எம்எஸ் டோனி அணியில் காலடி எடுத்து வைத்ததாலும் இந்திய அணியில் நீண்ட காலமாக இடம் பிடிக்க முடியாமல் தவறினார்.

    கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் பேட்ஸ்மேன் வரிசையில் இடம் கிடைத்தது. இலங்கையில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின்போது கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததால் உறுதியாக காலூன்றினார்.

    ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    ஒருநாள் போட்டியில் இருந்து தூக்குவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் டி20 போட்டியில் இருந்து தூக்குவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில் என்று கூறும் தினேஷ் கார்த்திக், மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் எனது ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது கூட டி20 அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.

    சமீபத்தில் நான் ஆடிய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடியுள்ளேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப மாட்டேன் என்று சந்தேகப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை’’ என்றார்.
    எம்எஸ் டோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பதை முடிவு செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எம்எஸ் டோனி விளையாடவில்லை. ஐபிஎல் 2020 சீசனில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் டோனிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டோனி அணிக்கு வேண்டும் என்று நினைத்தால் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘டோனியை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதை பார்ப்பீர்களா? அல்லது அவருக்கு மரியாதை கொடுப்பீர்களா? அவர் இந்தியாவின் தலைசிறந்த வீர்ரகள் ஒருவரும் மற்றும் கேப்டன் என்பதை குறித்து பரிசீலனை செய்வீர்களா?. அவர் இந்தியா அணிக்காக பாடுபட்டுள்ளார்.

    எம்எஸ் டோனி மிகமிக பெரிய வீரர். அவருக்கு விளையாடக்கூடிய திறமை இருக்கிறதா? அல்ல இல்லையா? என்பது குறித்து அவர் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இதுகுறித்து மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை. உங்களுக்கு எம்எஸ் டோனி வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர் தயாராக இருந்தால், அவரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார்.
    ஐபிஎல் போட்டியில் பணம் அதிகமாக கிடைப்பதால் விராட் கோலி அணி வீரர்களிடம் ஆஸி. வீரர்கள் வார்த்தைப் போரில் ஈடுபடவில்லை என்ற கிளார்க்கின் கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதில் அளித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் எதிரணி வீரர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு அவர்களின் கவனத்தை திசைதிருப்புவதில் வல்லவர்கள். ஆஷஸ் தொடர், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இதை மிகப்பெரிய அளவில் பார்க்கலாம்.

    ஆனால் ஐபிஎல் போட்டி வந்த பிறகு இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிபணிந்து செல்கிறார்கள். இதனால் ஸ்லெட்ஜிங் செய்ய தயங்குகிறார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஸ்லெட்ஜிங்கால் ஜெயிக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘வெறும் ஸ்லெட்ஜிங்கை மட்டுமே வைத்து நீங்கள் போட்டியை ஜெயிக்க முடியாது. ஆஸ்திரேலியாவின் தோல்வி தோல்விதான். அவருடைய கருத்து கேலிக்கூத்தானது என்று சொல்வேன்.

    நீங்கள் நசீர் ஹுசைன் அல்லது சர் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற அனுபவ வீரர்களிடம் கேட்டால் ஸ்லெட்ஜிங்கால்  ஒருபோதும் ரன்கள் அடிக்க முடியாது, விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது என்று சொல்வார்கள்.

    நீங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். விக்கெட்டுகள் வீழ்த்த சிறப்பாக பந்து வீச வேண்டும். டார்கெட்டை எட்ட சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். என்னுடைய கருத்தின்படி ஸ்லெட்ஜிங் உதவியாக இருக்காது’’ என்றார்.
    இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் கேப்டன் பதவியில் கங்குலி - டோனிக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து விவரித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர்கான். 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவர். அதேபோல் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற அணியிலும் இடம் பிடித்தவர்.

    2000-த்தில் இருந்து 2014 வரை சுமார் 14 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடிய அவர் டெஸ்ட் (92) போட்டியில் 311 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட் (200) போட்டியில் 282 விக்கெட்டுகளும், 17 டி20 போட்டியில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    இந்த காலக்கட்டத்தில் ஜாகீர்கான் கங்குலி தலைமையிலும், எம்எஸ் டோனி தலைமையிலும் விளையாடியுள்ளார். அணிக்கு அறிமுகம் ஆன போது கங்குலி கேப்டனாக இருந்தார். ஓய்வு பெறும் காலத்தில் எம்எஸ் டோனி கேப்டனாக இருந்தார்.

    இருவருக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து ஜாகீர்கான் கூறுகையில் ‘‘நான் கங்குலி கேப்டனாக இருக்கும்போது அணியில் அறிமுகம் ஆனேன். சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகும்போது அனைத்து வகையிலும் ஆதரவு தேவை. அப்போதுதான் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முடியும். தொடக்க கால ஆதரவு மிகமிக முக்கியம். எனக்கு அது கிடைத்தது.

    இரண்டு பேரும் இந்திய அணியை நீண்ட காலம் வழிநடத்தினர். டோனி காலத்தில் மாற்றம் அதிகமான நடந்ததை பார்க்க முடிந்தது.

    ஜாகீர்கான் - எம்எஸ் டோனி

    எம்எஸ் டோனி கேப்டன் பதவியை ஏற்கும்போது அணியில் சர்வதேச போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய அனுபவ வீரர்கள் இருந்தனர். அதனால் அவர் நினைக்கும் வேகத்திற்கு அவர்களை கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஓய்வை நோக்கி நகரும் வேலையில், ஏராளமான இளம் வீரர்கள் அணிகளுக்குள் நுழைந்தனர். அப்போது கங்குலி என்ன செய்தாரோ, அதை எம்எஸ் டோனியும் செய்தார்.

    கங்குலி ஆதராவால் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சில மேட்ச் வின்னராக திகழ்ந்தனர். டோனி வழிக்காட்டுதலில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் சிறந்த வீரர்களாக உருவாகினர்’’ என்றார்.
    ×