என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் போட்டியில் பணம் அதிகமாக கிடைப்பதால் விராட் கோலி அணி வீரர்களிடம் ஆஸி. வீரர்கள் வார்த்தைப் போரில் ஈடுபடவில்லை என்ற கிளார்க்கின் கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதில் அளித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் எதிரணி வீரர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு அவர்களின் கவனத்தை திசைதிருப்புவதில் வல்லவர்கள். ஆஷஸ் தொடர், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இதை மிகப்பெரிய அளவில் பார்க்கலாம்.

    ஆனால் ஐபிஎல் போட்டி வந்த பிறகு இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிபணிந்து செல்கிறார்கள். இதனால் ஸ்லெட்ஜிங் செய்ய தயங்குகிறார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஸ்லெட்ஜிங்கால் ஜெயிக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘வெறும் ஸ்லெட்ஜிங்கை மட்டுமே வைத்து நீங்கள் போட்டியை ஜெயிக்க முடியாது. ஆஸ்திரேலியாவின் தோல்வி தோல்விதான். அவருடைய கருத்து கேலிக்கூத்தானது என்று சொல்வேன்.

    நீங்கள் நசீர் ஹுசைன் அல்லது சர் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற அனுபவ வீரர்களிடம் கேட்டால் ஸ்லெட்ஜிங்கால்  ஒருபோதும் ரன்கள் அடிக்க முடியாது, விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது என்று சொல்வார்கள்.

    நீங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். விக்கெட்டுகள் வீழ்த்த சிறப்பாக பந்து வீச வேண்டும். டார்கெட்டை எட்ட சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். என்னுடைய கருத்தின்படி ஸ்லெட்ஜிங் உதவியாக இருக்காது’’ என்றார்.
    இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் கேப்டன் பதவியில் கங்குலி - டோனிக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து விவரித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர்கான். 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவர். அதேபோல் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற அணியிலும் இடம் பிடித்தவர்.

    2000-த்தில் இருந்து 2014 வரை சுமார் 14 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடிய அவர் டெஸ்ட் (92) போட்டியில் 311 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட் (200) போட்டியில் 282 விக்கெட்டுகளும், 17 டி20 போட்டியில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    இந்த காலக்கட்டத்தில் ஜாகீர்கான் கங்குலி தலைமையிலும், எம்எஸ் டோனி தலைமையிலும் விளையாடியுள்ளார். அணிக்கு அறிமுகம் ஆன போது கங்குலி கேப்டனாக இருந்தார். ஓய்வு பெறும் காலத்தில் எம்எஸ் டோனி கேப்டனாக இருந்தார்.

    இருவருக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து ஜாகீர்கான் கூறுகையில் ‘‘நான் கங்குலி கேப்டனாக இருக்கும்போது அணியில் அறிமுகம் ஆனேன். சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகும்போது அனைத்து வகையிலும் ஆதரவு தேவை. அப்போதுதான் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முடியும். தொடக்க கால ஆதரவு மிகமிக முக்கியம். எனக்கு அது கிடைத்தது.

    இரண்டு பேரும் இந்திய அணியை நீண்ட காலம் வழிநடத்தினர். டோனி காலத்தில் மாற்றம் அதிகமான நடந்ததை பார்க்க முடிந்தது.

    ஜாகீர்கான் - எம்எஸ் டோனி

    எம்எஸ் டோனி கேப்டன் பதவியை ஏற்கும்போது அணியில் சர்வதேச போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய அனுபவ வீரர்கள் இருந்தனர். அதனால் அவர் நினைக்கும் வேகத்திற்கு அவர்களை கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஓய்வை நோக்கி நகரும் வேலையில், ஏராளமான இளம் வீரர்கள் அணிகளுக்குள் நுழைந்தனர். அப்போது கங்குலி என்ன செய்தாரோ, அதை எம்எஸ் டோனியும் செய்தார்.

    கங்குலி ஆதராவால் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சில மேட்ச் வின்னராக திகழ்ந்தனர். டோனி வழிக்காட்டுதலில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் சிறந்த வீரர்களாக உருவாகினர்’’ என்றார்.
    2023-ல் இருந்து 2031 வரை நடைபெற இருக்கின்ற சுமார் 20 ஐசிசி கிரிக்கெட் தொடர்களின் பொரும்பாலானவற்றை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது,
    ஐசிசி 2023 முதல் 2031 வரையிலான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 20 சர்வதேச தொடர்கள் அடங்கும். இதில் பெரும்பாலான உலக கோப்பை தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி கூறுகையில் ‘‘உண்மையிலேயே ஐந்து முதல் ஆறு தொடர்களை நடத்த ஆர்வமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். ஒன்று அல்லது இரண்டிற்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்த ஏலத்தில் கேட்ட வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து நான் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு உடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளேன். ஆனால், ஒன்றிணைந்து நடத்துவற்கு ஒத்துழைப்பு அவசியம்.

    சில தொடர்கள் 16 போட்டிகளை கொண்டது. சில தொடர்கள் 30 முதல் 40 தொடர்களை கொண்டது. ஆகவே, அளவு மற்றும் ஒர்க் லோடு ஆகியவற்றை கொண்டு பகிர்ந்து கொள்ள முடியும்.

    மார்ச் 15-ந்தேதிக்குள் போட்டியை நடத்த ஆர்வம் உள்ளவர்கள் அதற்கு ஏல விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரசால் ஐசிசி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

    பாகிஸ்தானில் ஐசிசி தொடர்கள் நடைபெற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு மிகக்பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.

    1996-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரை ஆசிய நாடுகள் இணைந்து நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
    2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் உடைந்த முழங்காலுடன் விளையாடியது குறித்து முகமது ஷமி விவரித்துள்ளார்.
    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் முகமது ஷமி. 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். உமேஷ் யாதவுக்குப்பின் (17 விக்கெட்) அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர் இவர்தான்.

    இந்த தொடரின்போது இவருக்கு முழங்காலில் முறிவு ஏற்பட்டது. விளையாட முடியாத சூழ்நிலையில் விளையாடினேன். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டோனி கொடுத்த நம்பிக்கையால்தான் விளையாட முடிந்தது என்று விவரித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘2015 உலக கோப்பை போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. தொடர் முழுவதும் காயத்துடன் விளையாடிய பின்னர் என்னால் நடக்கக் கூடிய முடியவில்லை. 2015 உலக கோப்பையில் விளையாடுவதற்கு காரணம் நிதின் பட்டேலின் நம்பிக்கைதான்.

    முதல் போட்டியில் விளையாடும்போது முழங்கால் உடைந்துவிட்டது. மூட்டும் தசையும் ஒரே அளவில் இருந்தது. ஒவ்வொரு நாளும் அதில் இருந்த கெட்ட நீரை வெளியே எடுத்தனர். மூன்று வலி நிவாரணம் ஊசி போட்டுக்கொண்டேன்.

    அரையிறுதி போட்டிக்கு முன் சக வீரர்களுடன் என்னால் இனிமேல் விளையாட முடியாது என்று கூறினேன். போட்டி நடைபெற்ற நாளில் எனக்கு வலி அதிகமாக இருந்தது. அணி நிர்வாகத்துடன் பேசினேன். ஆனால் அவர்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றனர்.

    கேப்டன் எம்எஸ் டோனி, அணி நிர்வாகம் என்மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தனர். இது அரையிறுதி. இந்த நேரத்தில் புதிய பந்து வீச்சாளருடம் களம் இறங்க முடியாது என்றனர். முதல் ஐந்து ஓவரில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தேன். ஆரோன் பிஞ்ச், வார்னர் ஆகியோர் திணறிய போதும், பந்து எட்ஜ் ஆகி கேட்ச் ஆகவில்லை. அதன்பின் டோனி என்னிடம் கூறியதால் நான் வெளியேறினேன்.

    வலி நிவாரணத்திற்கான ஊசி போட்ட பின்னர் நிலைமை மிகவும் மோசமானது. என்னால் நீண்ட தூரம் ஓட முடியாது. அதனால் பந்து வீச இயலாது என்று கேப்டன் எம்எஸ் டோனியிடம் கூறினேன். ஆனால் எங்கள் மீது நம்பிக்கை உள்ளது. மாற்று வீரரை ஓடுவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

    60 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் பந்து வீசுங்கள் என்றார். இதைவிட மோசமான நிலையில் நான் பந்து வீசியது கிடையாது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக சிலர் கூறினார்கள். சிலர் என்னால் விளையாட முடியாது என்றார்கள். ஆனால் துணிச்சலுடன் தற்போது இங்கே இருக்கிறேன்’’ என்றார்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர் ஆபரேசன் செய்து கொண்ட முகமது ஷமி, சுமார் ஒன்றரை ஆண்டுகள் விளையாடாமல் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    துபாயை மையமாக கொண்டு செயல்படும் பயிற்சி அகாடமியான கிரிக்கிங்டம் இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.
    துபாயை மையமாக வைத்து செயல்படும் பயிற்சி அகாடமி கிரிக்கிங்டம். மாணவர்கள், வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள், மாணவர்கள், வீரர்கள் ஆகியோர் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

    இந்நிலையில் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.

    5 வயது முதல் 8 வயது, 8 வயது முதல் 13 வயது வரை, 13 வயதிற்கு மேல் கிளப் மற்றும் முதன்மை லெவலுக்கான கிரிக்கெட்டர்கள் என வகைப்படுத்தி பயிற்சி அளிக்கிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 2021 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
    ஐசிசி பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் படுத்தியுள்ளது. பெரும்பாலான சுற்று ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் சில சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

    இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டே விளையாட வேண்டியது. ஆனால் இந்திய அரசு அனுமதி மறுத்ததால் தொடர் நடைபெறாமல் உள்ளது. அதன்பின் தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா சென்றும், இலங்கை நியூசிலாந்து சென்றும் விளையாட இருந்தது.

    இந்தத் தொடர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் புள்ளிகள் அணிகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கப்பட்டன. இதனடிப்படையில் இந்தியா அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

    முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 3-வது இத்தில் உள்ள் தென்ஆப்பிரிக்கா, 4-வது இடத்தில் உள்ள இந்தியா ஆகிய அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. நியூசிலாந்து போட்டியை நடத்துவதால் அந்த அணியும் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள மூன்று இடங்களுக்கான தகுதிச்சுற்று தொடர் இங்கிலாந்தில் ஜூலை 3 -ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    12-வது உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி 23 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.
    துபாய்:

    உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து கோப்பையை வென்றது.

    12-வது உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7 -ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது.

    இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் நியூசிலாந்து நேரடியாக தகுதி பெற்றது. 4 இடங்களுக்கு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 7 சுற்றுகள் நடந்தன.

    தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா, இலங்கை நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ரத்தானது. இதையடுத்து முதல் 3 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா (37 புள்ளி), இங்கிலாந்து ( 29), தென் ஆப்பிரிக்கா (25) அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெற்றன.

    மீதமுள்ள ஒரு இடத்துக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு இருந்தது. கடந்த ஆண்டு இரு அணிகள் மோத இருந்த கடைசி சுற்று அரசியல் பிரச்சினை காரணமாக ரத்தானது. இதனால் இரு அணிளுக்கும் சமமாக புள்ளிகள் வழங்கப்பட்டன.

    இதன்படி இந்திய அணி 23 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானுக்கு( 19 புள்ளி) 5-வது இடம் கிடைத்தது.

    உலக கோப்பை மகளிர் போட்டிக்கு இதுவரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 5 அணிகள் தகுதி பெற்றன.

    மீதமுள்ள 3 இடங்களுக்கான தகுதி சுற்று போட்டி ஜூலை மாதம் இலங்கையில் நடக்கிறது.

    இதில் இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, அமெரிக்கா, தாய்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூகினியா ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பையை கைப்பற்றி உள்ளன. இந்திய அணி இரண்டு முறை 2 வது இடத்தைப் பிடித்ததே சிறந்த நிலையாகும்.
    வாருங்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை செயல்படுத்தி கொரோனாவை வீழ்த்துவோம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனாவுக்கு எதிரான போராட்டம் குறித்து நேற்று தனது டுவிட்டர் மூலம் வெளியிட்ட வீடியோ பதிவில், 

    ‘கொரோனா வைரஸ் இன்று நம்மை சுவருக்கு பின்னால் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் என்பது உலக கோப்பையை வெல்ல வீரர்கள் தங்களது எல்லா சக்திகளையும் வெளிப்படுத்தி இறுதி வரை போராடுவது போன்றதாகும். நம்மை உற்றுநோக்குவது (கொரோனா) சாதாரண உலக கோப்பை அல்ல. அனைத்து உலக கோப்பைகளுக்கும் தாய். இது வெறும் 11 பேர் பங்கேற்கும் விளையாட்டல்ல. இந்த போராட்ட களத்தில் 140 கோடி மக்கள் நிற்கிறார்கள். 

    வாருங்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை செயல்படுத்தி கொரோனாவை வீழ்த்துவோம். இந்த விஷயத்தில் பிரதமர், மத்திய-மாநில அரசுகள் மற்றும் நமக்காக உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளுக்கு நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

    சைக்கிள் பந்தயங்களில் பிரபலமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    பாரீஸ்:

    சைக்கிள் பந்தயங்களில் பிரபலமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜூலை மாதத்தின் பிற்பகுதி வரை பிரான்ஸ் அதிபர் தடை விதித்துள்ளார். அதை மனதில் கொண்டு ஆலோசித்த போட்டி அமைப்பாளர்கள், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் ஆகஸ்டு 29-ந்தேதி முதல் செப்டம்பர் 20-ந்தேதி வரை நடைபெறும் என்று நேற்று அறிவித்தனர்.

    புதிய தேதி அறிவிப்பு, தொழில்முறை சைக்கிள் பந்தய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகம் அளித்துள்ளது. பிரான்சின் நைஸ் நகரில் தொடங்கி பாரீசில் போட்டி நிறைவடையும். மொத்தம் 21 கட்டமாக 3,470 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். மலைப்பாதை, கரடுமுரடான பாதை, பிரதான சாலைகளில் மின்னல் வேகத்தில் சைக்கிளில் வீரர்கள் சீறிப்பாய்வார்கள். 3 வார காலம் நடக்கும் இந்த போட்டியை சாலையின் இருபுறமும் நின்றபடி ஒரு கோடி மக்களுக்கு மேல் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஊழியர்கள் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ள நிலையில், முகமது ஷமி அப்படி ஒருவரை சந்தித்ததை விவரிக்கிறார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்கத்து மாநிலத்தில் வேலைப்பார்த்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    நீண்ட நாள் ஊரடங்கு என்பதால் குஜராத், ராஜஸ்தான், டெல்லியில் வேலைப்பார்க்கும் உத்தர பிரததேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்தனர். வாகனங்கள் ஏதும் இல்லாததால் நடந்தே சொந்த ஊர் திரும்ப முடிவு செய்தனர்.

    சில ஊழியர்கள் பசியால் மயக்கம் அடைந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சந்தித்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘பீகாரைச் சேர்ந்த ஒருவர் ராஜஸ்தானில் இருந்து நடந்து வந்திருக்கிறார். லக்னோவில் இருந்து இன்னும் பீகாருக்கு அவர் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அவருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை குறித்து ஏதும் தெரியவில்லை.

    என்னுடைய வீட்டில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை நான் பார்த்தபோது அவர் பசியால் எனது வீட்டின் வாசல் பக்கத்தில் மயங்கி கிடந்தார். ஆகவே, நான் அவருக்கு உணவு வழங்கி அனுப்பி வைத்தேன்.

    இதுபோன்று தவிக்கும் சிலருக்கு உதவி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். புலம்பெயர்ந்த வீரர்கள் சிலர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனது வீடு நெடுஞ்சாலை அருகில் உள்ளதால், இதுபோன்ற மக்களை பார்க்க முடிகிறது. என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவ் வாட்மோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது பரோடா ரஞ்சி கோப்பை அணி.
    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர். கடந்த மூன்று ரஞ்சி கோப்பை சீசனில் இவர் கேரள அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் பரோடா அணி வாட்மோரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது.

    இதற்கான அனைத்து வேலைகளையும் பரோடா கிரிக்கெட் அணி செய்து முடித்துள்ளது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவில் விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், வாட்மோர் ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திடவில்லை.

    66 வயதாகும் வாட்மோர் தலைமையில்தான் 1996-ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை கைப்பற்றியது. மேலும், வங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    எம்எஸ் டோனி இன்னும் புதுமையாகவே தோன்றுகிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
    எம்எஸ் டோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நம்பியிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கான சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.

    ஆனால் எம்எஸ் டோனிக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளது. அவர் புதுமையாக தோன்றுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி ஆட்டத்தில் அவர் அடித்த சில சிக்சர்கள் மிகப்பெரியதாக இருந்தது. சென்னையில் அடித்த வெயிலுக்கு தொடர்ந்து மூன்று மணி நேரம் பேட்டிங் செய்வது எளிதானது அல்லை. நாங்கள் பயிற்சியின்போது பேட்டிங் செய்தோம்’’என்றார்.
    ×