என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவ் வாட்மோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது பரோடா ரஞ்சி கோப்பை அணி.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர். கடந்த மூன்று ரஞ்சி கோப்பை சீசனில் இவர் கேரள அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் பரோடா அணி வாட்மோரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான அனைத்து வேலைகளையும் பரோடா கிரிக்கெட் அணி செய்து முடித்துள்ளது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவில் விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், வாட்மோர் ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திடவில்லை.
66 வயதாகும் வாட்மோர் தலைமையில்தான் 1996-ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை கைப்பற்றியது. மேலும், வங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
எம்எஸ் டோனி இன்னும் புதுமையாகவே தோன்றுகிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நம்பியிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கான சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.
ஆனால் எம்எஸ் டோனிக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளது. அவர் புதுமையாக தோன்றுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி ஆட்டத்தில் அவர் அடித்த சில சிக்சர்கள் மிகப்பெரியதாக இருந்தது. சென்னையில் அடித்த வெயிலுக்கு தொடர்ந்து மூன்று மணி நேரம் பேட்டிங் செய்வது எளிதானது அல்லை. நாங்கள் பயிற்சியின்போது பேட்டிங் செய்தோம்’’என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் சீசன் 2020 காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அணிகளிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2020 சீசன் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் முதல் வாரத்திலேயே ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்தியாவில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளிடம் தெரிவித்து விட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘‘ஆம், பிசிசிஐ எங்களிடம், ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக கூறியது. மேலும், தற்போதுள்ள சூழ்நிலை சகஜ நிலைக்கு வந்த பின்னர் போட்டிக்கான காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தது’’ என்று ஐபிஎல் அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் பிடிஐ தெரிவித்துள்ளது.
ஒருவேளை அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கடெ் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் போட்டியை நடத்த வாய்புள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட லீக்-1 கால்பந்து லீக்கை ஜூன் மாதத்தில் தொடங்க அமைப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டதில் பிரான்சும் ஒன்று. கடந்த மாதம் முதல் வாரம் லீக்-1 கால்பந்து போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராததால் மே மாதம் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லீக்-1 கால்பந்து போட்டிகள் ஜூன் 3-ந்தேதி அல்லது ஜூன் 17-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக லீக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டிகள் ஜூன் 17-ந்தேதி தொடங்கினால் ஒவ்வொரு அணிகளும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மோதவேண்டும். அப்படி நடந்தால் ஜூலை 25-ந்தேதிக்குள் லீக்கை முடித்து விடலாம். ஆகஸ்ட் 2-ந்தேதிக்குள் வெளியேற்றுதல், பிளே-ஆஃப்ஸ்-க்கு முன்னேறுதல் ஆகியவற்றை முடித்துவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளது.
அதன்பின் ஆகஸ்ட் 23-ந்தேதி 2020-21 சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் கால்பந்து பெட்ரேசன்தான் இதுகுறித்து முடிவு செய்யும்.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - செயின்ட் எத்தியன் இடையிலான பிரெஞ்ச் கோப்பை இறுதி போட்டியை ஜூன் 27-ந்தேதியும், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - ஒலிம்பிக் லியோனைஸ் இடையிலான லீக் கோப்பை இறுதிப் போட்டியை ஜூலை 11-ல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
எம்எஸ் டோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு ஐபிஎல் முக்கிய துருப்புச் சீட்டாக கருதப்பட்ட நிலையில், கொரோனா வில்லனாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்குப்பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய பின்னர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எம்எஸ் டோனி இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஐபிஎல் 2020 சீசனில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்ப பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவில் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் உலக கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை என்றால், எம்எஸ் டோனிக்கு சிக்கல் அதிகமாகிவிடும் என முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
மதன் லால் இதுகுறித்து கூறுகையில் ‘‘எம்எஸ் டோனிக்கான சிக்கல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். உலக கோப்பைக்குப்பின் அவர் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை என்றால், அவருக்கான சிக்கல் மேலும் அதிகமாகிவிடும். அணி நிர்வாகம், ரவி சாஸ்திரி, விராட் கோலி அல்லது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
டோனி முதலில் விளையாட வேண்டும். அதன்பின் தேர்வு செய்யலாம் என தேர்வுக்குழுவினர் விரும்புவார்கள். அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள்தான் மிகப்பெரிய பொறுப்பு. சிக்கல் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன். அவர் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி விட்டார். சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர்தான் தேர்வாளர்களுக்கு சொல்ல வேண்டும். அப்போதுதான் தேர்வாளர்கள் அவருடைய எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியும்’’ என்றார்.
கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர், தனது தாயார் 22 வயது வாலிபருடன் கொண்டுள்ள உறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டில் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் நெய்மர். இவரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே. நெய்மருக்கு ஏஜென்டாகவும் உள்ளார். தாயார் நடின் கான்கேல்வ்ஸ். 52 வயதாகும் நடின் கான்கேல்வ்ஸ் கடந்த 2016-ம் ஆண்டு வாக்னருடன் உள்ள உறவை முறித்துக் கொண்டார்.
இந்நிலையில் நெய்மரின் தாயார் நடினுக்கும் 22 வயதான இளைஞர் டியாகோ ரமோஸ் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் அரவணைத்து நிற்பது போன்ற படத்தை நெய்மரின் தாயார் நடின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெய்மர் ஏதும் கூறாமல் இருந்தால் இந்நிலையில் அந்த படத்திற்கு‘‘மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்’’என்று கருத்து தெரிவித்துள்ளார்.
டியாகோ ரமோஸ் நெய்மரின் தீவிர ரசிகர். ஏற்கனவே டியாகோ நெய்மரை சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரரான ஜாபர் சர்பராஸ் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரர் ஜாபர் சர்பராஸ் (வயது 50). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக பெஷாவர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜாபர் சர்பராஸ் பெஷாவர் அணிக்காக 15 முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடி 616 ரன்கள் அடித்துள்ளார். 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி விளையாடி 96 ரன்கள் அடித்துள்ளார். 1988-ம் ஆண்டு அறிமுகம் ஆன ஜாபர் 1994-ல் ஓய்வு பெற்றார். அதன்பின் 2000-த்தில் பெஷாவர் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
இவர் பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக விளையாடிய அக்தர் சர்பராசின் சகோதரர் ஆவார். அக்தர் சர்பராஸ் கடந்த 10 மாதங்களுக்கு முன் புற்றுநோயால் மரணமடைந்தார்.
பாகிஸ்தானில் 5500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர்.
டெஸ்ட் போட்டி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் தயாரிக்க வேண்டும் என நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்த பின்னர் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு குறைந்து வருகிறது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை தெரிந்து கொள்ள டெஸ்ட் போட்டிதான் சிறந்தது என கூறப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் ஐந்து நாட்கள் மைதானத்திற்கு வருவதை விரும்பவில்லை.
டி20 கிரிக்கெட் போட்டி மூன்று மணி நேரத்திற்குள் முடிந்து விடுவதால் ரசிகர்கள் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் போட்டிக்கு வரவேண்டிய அவசியமில்லை. மாலை வேலை முடிந்து போட்டிக்கு வந்தால் போதுமானது.
கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் குறைவதால் ஐசிசி-க்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மைதானங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காப்பாற்ற பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக வகையில் ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நசீர் ஹுசைன் கூறுகையில் ‘‘கேம்பிரிட்ஜ் ஆடுகளத்தில் ஜிம்மி ஆண்டர்சன் 600 பந்துகளை சந்தித்து 90 ரன்கள் சேர்த்தார். இதுபோன்று ஆடுகளம் அமைக்கப்பட்டால் போட்டி ஆர்வமாக இருக்காது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் 300 ரன்களைத் தொட்டுதான் எடுக்கப்படுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஆதரவாக இருப்பதால் பார்ப்பது சிறப்பாகவும், ரசிகர்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கும். இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகவும். அதற்கு உண்டான மதிப்பை இந்த போட்டி கொடுக்கும்’’ என்றார்.
‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் மாற்றம் கொண்டு வரக்கூடாது. அதுபோல் ரசிகர்களிடம் ஆர்வத்தை கூட்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறார்கள். இதுவும் டெஸ்ட் போட்டியை ஊக்குவிப்பதாக இருக்காது’’ என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று சோயிப் அக்தர் கூறிய ஆலோசனைக்கு கபில்தேவ் தெரிவித்த பதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருப்பதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று ஒரு பக்கம் அச்சுறுத்த மறுமக்கள் பொருளாதாரம் அச்சுறுத்தி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்தி கொரோனாவை ஒழிப்பதற்கு நிதி திரட்டலாம் என்று சோயிப் அக்தர் தெரிவித்திருந்தார்.
அதற்கு கபில்தேவ் ‘‘இந்த நேரத்தில் இந்தியாவுக்கு பணம் தேவையில்லை. போதுமான அளவிற்கு பணம் இருக்கிறது. கிரிக்கெட் போட்டிக்காக உயிரை பணயம் வைப்பது தகுதியானது அல்ல’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கபில்தேவின் கருத்து ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது என்று அதிரடி பேட்ஸ்மேன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுவான எதிரியை தோற்கடிக்க வேண்டும். இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்கள் அதற்கு உதவாது.
சோயிப் அக்தர் கூறியதில் தவறு இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஆனால் கபில்தேவின் பதில் ஆச்சர்யமாக இருந்தது. அவரிடம் இருந்து சிறந்த பதில் வரு் என்று எதிர்பார்த்தேன். இந்த இக்கட்டான நிலையில் யாரும் இதுபோன்ற பேசமாட்டார்கள்’’ என்றார்.
ஐபிஎல் லீக்கில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் உள்ள சஞ்சு சாம்சன், இவருடைய பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
மிகவும் திறமை வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களில் இவரும் ஒருவர். தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு. ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்த போதிலும் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்வதுதான் மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையிலா் ‘‘சுனில் நரைன் பந்தை வீச்சு எதிர்கொள்வது மிகவும் கடினம். அவரது பந்தை நான் சிறப்பாக எதிர்கொண்டாலும் சிறந்த பந்து வீச்சாளர்’’ என்றார்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கினார். அப்போது ஒரு போட்டியில் அரைசதம் அடித்து மிகக் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
2015-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். ஆனால் தொடர்ந்து அவரால் இடம் பிடிக்க இயலாமல் போனது.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய ஹாக்கி போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நமது நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவுக்கு வர இருந்த இந்த ஊரடங்கை அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமர் மோடி நேற்று காலை அறிவித்தார்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.
இதன்படி ராஞ்சியில் முறையே வருகிற 29-ந்தேதி முதல் மே 9-ந்தேதி வரையும், மே 7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும் நடைபெற இருந்த தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), சென்னையில் முறையே மே 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையும், மே 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் நடக்க இருந்த தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), அரியானா மாநிலத்தில் முறையே மே 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், மே 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும் நடைபெற இருந்த தேசிய சப்ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), மணிப்பூரில் முறையே மே 28-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரையும், ஜூன் 3-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும் நடக்க இருந்த தேசிய சப்ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி ( பி மற்றும் ஏ டிவிசன்), கவுகாத்தியில் ஜூன் 20-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை நடைபெற இருந்த தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி டிவிசன்) ஆகியவை மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன.
இது குறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி அமைப்பாளர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் மற்றும் எங்களது பங்குதாரர்களின் நலன் கருதி இந்த ஆண்டுக்கான எஞ்சிய தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை தள்ளிவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் காலவரையின்றி தள்ளிபோடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு நிலைமை சரியானதும் ஆய்வு செய்து போட்டிக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும். போட்டி தள்ளிவைப்புக்கு ஒத்துழைப்பு அளித்த போட்டி அமைப்பாளர்களுக்கும், மாநில அமைப்பு நிர்வாகிகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
இதேபோல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி முகாம்கள் தொடர்ந்து மே 3-ந்தேதி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெங்களூரு மற்றும் பாட்டியாலாவில் உள்ள சாய் பயிற்சி மையங்களில் இருக்கும் வீரர்கள் தொடர்ந்து அங்கு தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தங்களது அனைத்து கால்பந்து போட்டிகளும் தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

கொரோனா நிவாரண நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற சாத்தியமில்லை என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை:
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தலாம் என்றும் அதில் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயிப் அக்தர் யோசனை தெரிவித்து இருந்தார். இது சாத்தியமில்லாத காரியம் என்றும் நலநிதி திரட்ட வேண்டிய நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதில் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுவதை காட்டிலும், லாகூரில் பனிப்பொழிவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் நேரடியாக மோதும். தற்போது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுவது என்பது சாத்தியமில்லாத விஷயமாகும்‘ என்றார்.