என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் லீக்கில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் உள்ள சஞ்சு சாம்சன், இவருடைய பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
    மிகவும் திறமை வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களில் இவரும் ஒருவர். தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு. ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்த போதிலும் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்வதுதான் மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையிலா் ‘‘சுனில் நரைன் பந்தை வீச்சு எதிர்கொள்வது மிகவும் கடினம். அவரது பந்தை நான் சிறப்பாக எதிர்கொண்டாலும் சிறந்த பந்து வீச்சாளர்’’ என்றார்.

    சுனில் நரைன்

    2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கினார். அப்போது ஒரு போட்டியில் அரைசதம் அடித்து மிகக் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

    2015-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். ஆனால் தொடர்ந்து அவரால் இடம் பிடிக்க இயலாமல் போனது.
    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய ஹாக்கி போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நமது நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவுக்கு வர இருந்த இந்த ஊரடங்கை அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமர் மோடி நேற்று காலை அறிவித்தார்.

    ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

    இதன்படி ராஞ்சியில் முறையே வருகிற 29-ந்தேதி முதல் மே 9-ந்தேதி வரையும், மே 7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும் நடைபெற இருந்த தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), சென்னையில் முறையே மே 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையும், மே 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் நடக்க இருந்த தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), அரியானா மாநிலத்தில் முறையே மே 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், மே 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும் நடைபெற இருந்த தேசிய சப்ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி மற்றும் ஏ டிவிசன்), மணிப்பூரில் முறையே மே 28-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரையும், ஜூன் 3-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும் நடக்க இருந்த தேசிய சப்ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி ( பி மற்றும் ஏ டிவிசன்), கவுகாத்தியில் ஜூன் 20-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை நடைபெற இருந்த தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி டிவிசன்) ஆகியவை மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன.

    இது குறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி அமைப்பாளர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் மற்றும் எங்களது பங்குதாரர்களின் நலன் கருதி இந்த ஆண்டுக்கான எஞ்சிய தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை தள்ளிவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் காலவரையின்றி தள்ளிபோடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு நிலைமை சரியானதும் ஆய்வு செய்து போட்டிக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும். போட்டி தள்ளிவைப்புக்கு ஒத்துழைப்பு அளித்த போட்டி அமைப்பாளர்களுக்கும், மாநில அமைப்பு நிர்வாகிகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

    இதேபோல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி முகாம்கள் தொடர்ந்து மே 3-ந்தேதி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெங்களூரு மற்றும் பாட்டியாலாவில் உள்ள சாய் பயிற்சி மையங்களில் இருக்கும் வீரர்கள் தொடர்ந்து அங்கு தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தங்களது அனைத்து கால்பந்து போட்டிகளும் தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது.
    கொரோனா நிவாரண நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற சாத்தியமில்லை என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தலாம் என்றும் அதில் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயிப் அக்தர் யோசனை தெரிவித்து இருந்தார். இது சாத்தியமில்லாத காரியம் என்றும் நலநிதி திரட்ட வேண்டிய நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதில் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுவதை காட்டிலும், லாகூரில் பனிப்பொழிவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் நேரடியாக மோதும். தற்போது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுவது என்பது சாத்தியமில்லாத விஷயமாகும்‘ என்றார். 
    என்னை பொறுத்தவரை ஆட்டத்தை வெற்றிகரமான முடிப்பதில் கிரிக்கெட் உலகம் உருவாக்கிய தலைச்சிறந்த வீரர் டோனி தான் என ஹஸ்சி புகழாரம் சூட்டியுள்ளார்.
    மும்பை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். சஞ்சய் மஞ்சரேக்கருடன் கலந்துரையாடலில் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ள ஹஸ்சி கூறியதாவது:

    ‘என்னை பொறுத்தவரை ஆட்டத்தை வெற்றிகரமான முடிப்பதில் (பினிஷர்) கிரிக்கெட் உலகம் உருவாக்கிய தலைச்சிறந்த வீரர் டோனி தான். எனது கருத்து கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தலாம். கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சிறந்த பினிஷர்கள் இருந்தனர். ஆனால் நெருக்கடியான கட்டத்தில் டோனி அளவுக்கு யாரும் அமைதியாக இருந்ததில்லை. நம்ப முடியாத சக்தி அவரிடம் இருக்கிறது. பந்தை எப்போது எல்லைக்கோட்டை தாண்டி விரட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அதை அவர் சரியாக செய்வார். அவருக்கு அந்த அளவுக்கு தன்னம்பிக்கை உண்டு. அத்தகைய தன்னம்பிக்கை என்னிடம் இருந்ததில்லை.

    இவ்வாறு ஹஸ்சி கூறினார்.
    ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டி நடந்தால் விராட் கோலியின் நடவடிக்கை எந்த மாதிரி இருக்கும் என்பதை காண ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா அச்சத்தால் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்துவது குறித்து அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பட்டாளம் இன்றி வெறிச்சோடிய மைதானங்களில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எப்படி செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அப்போது ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த வேண்டிய சூழல் இருந்தால் களத்தில் ஆக்ரோஷமாக மல்லுகட்டும் கோலியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நாதன் லயன் பதில் அளித்து கூறியதாவது:-

    எந்த ஒரு சூழலுக்கும் தக்கபடி தன்னை திறம்பட மாற்றிக்கொள்ளக்கூடியவர் கோலி. ஆனால் ரசிகர்கள் இன்றி விளையாடும் பட்சத்தில், கோலி, காலி இருக்கைகளை நோக்கி எந்த மாதிரியான சைகைகளை காட்ட முயற்சிப்பார் என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக, புதிய அனுபவமாக இருக்கும். இது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கப்போகிறது. ஆனால் கோலி ஒரு சூப்பர் ஸ்டார். நாம் எத்தகைய சீதோஷ்ண நிலையில் விளையாடுகிறமோ அதற்கு ஏற்ப அவரால் மாற்றிக்கொள்ள இயலும்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஆஷஸ் போல் இதுவும் மிகப்பெரிய தொடர். கிரிக்கெட் உலகில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக விளங்குகிறது. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாட இருப்பது சிறப்பானதாக இருக்கும். ரசிகர்களுக்கு அனுமதியோ அல்லது காலி மைதானமோ அது பற்றி நான் கவலைப்படவில்லை.

    இந்திய அணியை மீண்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பு கனிய வேண்டும். அந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். கடந்த முறை இந்திய அணி எங்களை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனால் தற்போது மிகவும் வலுவான அணியாக உள்ளோம்.

    இந்திய அணியை பார்க்கும் போது, புஜாராவை நாம் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. விராட் கோலி, ரஹானே போன்றவர்கள் பற்றி தான் அதிகம் பேசுகிறோம். ஆனால் புஜாரா ஒரு சுவர். இந்திய கிரிக்கெட்டின் புதிய சுவர் என்று அவரை வர்ணிப்பேன். கடந்த முறை அவரை அதிகமாக கண்டுகொள்ளாததால் நெருக்கடி இன்றி விளையாடி ஆஸ்திரேலிய தொடரில் (மொத்தம் 521 ரன்கள் குவித்தார்) பிரமாதப்படுத்தி விட்டார். ஆனால் இனி அவரது விக்கெட்டை வீழ்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு நாதன் லயன் கூறினார்.
    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மஹிம் வர்மா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளார். துணைத் தலைவராக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதுகுறித்து மஹிம் வர்மா கூறுகையில் ‘‘தற்போது சீராக சென்று கொண்டிருக்காத எனது மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. இதனால் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சிஇஓ ராகுல் ஜோரிக்கு அனுப்பியுள்ளேன். என்னுடைய ராஜினாமா ஏற்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    நான் ஏற்கனவே இதுகுறித்து செயலாளர் ஜெய் ஷாவிடம் பேசிவிட்டேன். நான் தற்போது உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு செல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும். இதனால்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன்’’ என்றார்.
    வீட்டில் முடங்கி இருக்கும் இந்த தருணத்தில் உடற்பயிற்சி மற்றும் சமையல் வேலைகளை செய்து நேரத்தை போக்குகிறேன் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை மந்தனா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ருத்ரதாண்டவம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் வீரர், வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கிறார்கள்.

    கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி யாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்த சிரமமான நேரத்தை எப்படி செலவிடுகிறார் என்பது குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனையான மராட்டியத்தை சேர்ந்த 23 வயது ஸ்மிரிதி மந்தனா பேசி இருக்கும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

    ‘நாங்கள் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் மூலமாக பகடைக்காய் விளையாட்டு விளையாடி வருகிறோம். அது எங்கள் அணியினர் இடையிலான பிணைப்பை தொடர வைக்கிறது. இந்த காலகட்டத்தில் உடல் தகுதியுடன் நிலைத்து இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எனவே நான் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தொடர்ந்து டிரெய்னருடன் பேசி அவரது கருத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி உடற்தகுதி விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன். அவர் தாங்கள் பின்பற்ற வேண்டிய பயிற்சிகள் குறித்து தொடர்ந்து தகவல் அளித்து வருகிறார்.

    மற்றபடி குடும்பத்தினருடன் எனது நேரத்தை செலவழித்து வருகிறேன். நாங்கள் ஒன்றாக இணைந்து பலவகையான சீட்டாட்டத்தில் ஈடுபடுகிறோம். என் அம்மாவின் சமையல் பணிகளில் உதவுகிறேன். பாத்திரங்களை கழுவிக் கொடுப்பது எனது அன்றாட வேலைகளில் ஒரு அங்கமாகி விட்டதாக நான் நினைக்கிறேன். எனது சகோதரனுக்கு அன்பு தொல்லை கொடுத்து வருகிறேன். இது எனக்கு பிடித்தமான ஒரு பொழுது போக் காகும்.

    அடுத்தபடியாக எனக்கு சினிமா படங்கள் பார்ப்பது பிடிக்கும். சினிமா பார்ப்பதில் நான் அதிகம் ஆர்வம் காட்டுவேன். ஒரு வாரத்தில் இரண்டு முதல், மூன்று சினிமா படங்கள் பார்த்து விடுவேன். அதற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக அதற்கு அதிகமாக படங்கள் பார்ப்பது கிடையாது. எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடவே விரும்புகிறேன்.

    வீட்டில் இருக்கும் போது முக்கியமாக நான் செய்வது நன்கு தூங்குவது தான். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது தூங்கி, அந்த நாள் முழுக்க என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உங்களை தகுதியுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை இந்தியாவில் நடைபெறும் என இந்திய குத்துச்சண்டை பெடரேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்று யாருக்கும் தெரியாத நிலை உள்ளது.

    இந்நிலையில் நவம்பர்-டிசம்பர் மாதம் நடத்த திட்டமிள்ள ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை இந்தியாவில் நடக்கும் என்று இந்திய குத்துச்சண்டை பெடரேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இந்திய குத்துச்சண்டை பெடரேசனின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே. சாசேத்ரி இதுகுறித்து கூறுகையில் ‘‘ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு கூட்டத்திற்குப்பின் கடந்த பிப்ரவரி மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையை நடத்த அனுமதி பெற்றோம். இந்தத் தொடர் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. எந்த நகரில் நடைபெறும் என்பது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் முடிவு செய்யப்படும்.

    தற்போது மிகவும் கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஜூன் மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என நாம் எல்லோரும் நம்புகிறோம். அதன்பின் நான்கு மாதங்களில் அனைத்து நடவடிக்கைகளும் இயல்பு நிலைக்கு வந்துவிடும்’’ என்றார்.

    இந்தியா 1980-ம் ஆண்டு மும்பையில் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையை நடத்தியது, பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பை 2003-ல் ஹிசாரில் நடத்தியது. கடந்த ஆண்டில் இருந்து ஆண்கள், பெண்களுக்கான தொடர் சேர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
    ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில், எப்படி பொழுதை போக்குகிறேன் என்பது குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் விவரித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 25-ந்தேதியில் இருந்து இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர்.

    இந்த நேரத்தை எப்படி செலவிடுகிறேன் என்பதை விவிஎஸ் லக்‌ஷ்மண் விவரித்துள்ளார். இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘துரதிருஷ்டவசமான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருப்பது நல்ல விஷயமாக இருக்கிறது. இந்த நேரத்தில் வீட்டில் டேபிள் டென்னிஸ், செஸ், கேரம் போர்டு போன்றவற்றை நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். வீட்டிற்குள்ளேயே இருக்கும்போது சுறுசுறுப்பாக வைக்க இது முக்கியமானது.

    இந்த நேரத்தில் புத்தகங்களை வாசிப்பது, படங்கள் பார்ப்பது, கிரிக்கெட்டின் அற்புதமான காட்சிகளை மீண்டும் பார்ப்பது ஆகியவற்றிலும் நேரத்தை செலவிடுகிறேன். குறிப்பாக நான் அடித்த சில அற்புதமான இன்னிங்ஸ்களையும் பார்க்கிறேன்.

    ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் விளாசிய டெஸ்ட் போட்டி இன்னிங்சை ஒட்டுமொத்த குடும்பத்துடன் மீண்டும் பார்த்தோம். தற்போது குழந்தைகள் வளர்ந்து அவர்களுடன் பார்ப்பது தனித்தன்மையான உணர்வு.

    லாகூரில் 2004-ல் அடித்த ஒருநாள் போட்டி சதம், ஜோகன்னஸ்பர்க்கில் வெற்றி பெற்ற டெஸ்ட் (2-வது இன்னிங்சில் இக்கட்டான நிலையில் 73 ரன்கள் அடித்தார்.) ஆகியவற்றுடன் 1997-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் குறைந்த ரன்னில் சுருண்டதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

    எனது மகன் இடது கை பேட்ஸ்மேன். டேவிட் வார்னரின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவான். பேட்டிங் குறித்து அவனுக்கு சில ஆலோசனைகள் வழங்க முயற்சி செய்து வருகிறேன். குடும்பத்துடன் இருந்து குழந்தைகள் அவர்களது அம்மாவுக்கு அவர்களால் முடிந்த உதவிகளை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உலக வழிமுறைப்படி விட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்பது மிகவும் கடினமானது. இதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் இதுவல்ல. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். வைரசுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகயில் நாம் அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
    கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

    நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்கு முன் சில அரசு சார்ந்த அமைச்சகங்கள் முக்கிய அலுவலக கட்டடங்களை மூடியது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டில் இருந்து வேலை செய்யக் கூறியது.

    இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் முன்னெச்சரிக்கை காரணமாக கடந்த மாதம் 21-ந்தேதி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று இந்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தலைமை அலுவலகம் சென்றார்.

    அங்கு அவர் முகக்கவசம் அணிந்து சென்றார். தலைமை அலுவலகத்தை திறந்தது குறித்து கிரண் ரிஜிஜு கூறுகையில் ‘‘விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த அலுவலகத்தை குறைந்த ஸ்டாஃப்கள் வைத்து நடத்த இருக்கிறது. ஏனென்றால் அலுவலக பணி நடைபெற வேண்டியுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் போன்றவை உறுதி செய்யப்படும்’’ என்றார்.

    அனைத்து அமைச்சர்களும் அவர்களுடைய அலுவலகத்தை இணைச் செயலாளருக்கு இணையாக அதிகாரிகள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஸ்டாஃப்களுடன் திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
    கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத நிலையில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற இன்னும் ஒரு வருடம் ஆகும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டி தொடங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது.

    இந்நிலையில் என் மதிப்பீட்டின்படி கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்க ஒரு வருடம் ஆகும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியடைந்தாலும், இந்தியா மிகவும் சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால், கடந்த முறை போன்று மீண்டும் சிறந்த அணி என்பதை நிரூபிக்க வேண்டும்.

    எனினும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறும் என நான் பார்க்கவில்லை. என்னுடைய மதிப்பீட்டின்படி அடுத்த ஓராண்டுக்கு எந்தவித கிரிக்கெட்டும் நடைபெறும். டி20 உலக கோப்பையில் நடைபெறாது.

    தற்போது நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறோம். மக்கள் கூட்டமாக கூடும் அனைத்து தொழில் துறைகளும் தடைபட்டுள்ளது. ’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் டி20 உலக கோப்பை ரசிகர்கள் இல்லாமல் நடக்கக் கூடாது என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நாளைமறுதினம் (15-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் போட்டி நடைபெறும் என ரசிகர்கள் மட்டுமல்ல, வீரர்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.

    ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்பது உறுதியாகிவிட்டது, அதேபோல் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்று சில வீரர்கள் தங்களது விருப்பதை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கோப்பை நடைபெற்றால் நன்றாக இருக்காது என ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை வேண்டுமென்றால் நடத்தலாம், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை என்னால் பார்க்க முடியாது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது ரசிகர்கள் மைதானத்தில் இல்லாதது என்பதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது. வருங்காலத்தில் இப்படி நடக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவருடைய உடல்நலத்திலும் அக்கறை செலுத்துவது முக்கியமானது’’ என்றார்.
    ×