என் மலர்
விளையாட்டு
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்கு முன் சில அரசு சார்ந்த அமைச்சகங்கள் முக்கிய அலுவலக கட்டடங்களை மூடியது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டில் இருந்து வேலை செய்யக் கூறியது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் முன்னெச்சரிக்கை காரணமாக கடந்த மாதம் 21-ந்தேதி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று இந்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தலைமை அலுவலகம் சென்றார்.
அங்கு அவர் முகக்கவசம் அணிந்து சென்றார். தலைமை அலுவலகத்தை திறந்தது குறித்து கிரண் ரிஜிஜு கூறுகையில் ‘‘விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த அலுவலகத்தை குறைந்த ஸ்டாஃப்கள் வைத்து நடத்த இருக்கிறது. ஏனென்றால் அலுவலக பணி நடைபெற வேண்டியுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் போன்றவை உறுதி செய்யப்படும்’’ என்றார்.
அனைத்து அமைச்சர்களும் அவர்களுடைய அலுவலகத்தை இணைச் செயலாளருக்கு இணையாக அதிகாரிகள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஸ்டாஃப்களுடன் திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத நிலையில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற இன்னும் ஒரு வருடம் ஆகும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டி தொடங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் என் மதிப்பீட்டின்படி கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்க ஒரு வருடம் ஆகும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியடைந்தாலும், இந்தியா மிகவும் சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால், கடந்த முறை போன்று மீண்டும் சிறந்த அணி என்பதை நிரூபிக்க வேண்டும்.
எனினும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறும் என நான் பார்க்கவில்லை. என்னுடைய மதிப்பீட்டின்படி அடுத்த ஓராண்டுக்கு எந்தவித கிரிக்கெட்டும் நடைபெறும். டி20 உலக கோப்பையில் நடைபெறாது.
தற்போது நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறோம். மக்கள் கூட்டமாக கூடும் அனைத்து தொழில் துறைகளும் தடைபட்டுள்ளது. ’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் டி20 உலக கோப்பை ரசிகர்கள் இல்லாமல் நடக்கக் கூடாது என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நாளைமறுதினம் (15-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் போட்டி நடைபெறும் என ரசிகர்கள் மட்டுமல்ல, வீரர்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.
ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்பது உறுதியாகிவிட்டது, அதேபோல் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்று சில வீரர்கள் தங்களது விருப்பதை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கோப்பை நடைபெற்றால் நன்றாக இருக்காது என ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை வேண்டுமென்றால் நடத்தலாம், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை என்னால் பார்க்க முடியாது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது ரசிகர்கள் மைதானத்தில் இல்லாதது என்பதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது. வருங்காலத்தில் இப்படி நடக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவருடைய உடல்நலத்திலும் அக்கறை செலுத்துவது முக்கியமானது’’ என்றார்.
ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதற்கு தடையாக உள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு தென்ஆப்பிரிக்கா அணி தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன்பின் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் விளையாட விருப்பம் தெரிவித்ததாக விமர்சனம் எழும்பியது. பின்னர் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது. இதனால் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் டி வில்லியர்ஸ் விளையாட விருப்பம் தெரிவித்தார்.
டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி திறமையை நிரூபித்தால் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆதரவு தெரிவித்திருந்தார். சுமார் இரண்டு மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் திறமையை நிரூபித்து அணியில் இடம் பிடிக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டி20 உலக கோப்பை போட்டியும் நடைபெறுமா? என்று தெரியவில்லை.
இது ஏபி டி வில்லியர்ஸ்க்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்த விரும்பவில்லை என்ற ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ஆறு மாதங்களை எதிர்காலத்திற்கு என என்னால் பார்க்க முடியவில்லை. இந்த தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டால் எல்லாவிதமான விஷயங்களும் மாறிவிடும். தற்போது அணியில் விளையாடுவதற்கான தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் என்னுடைய உடல்நிலை எப்படி ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை.
நான் விளையாட விரும்புகிறேன். ஆனால், நானாகவே அணியில் இடம்பிடிக்க முடியாது. பொறுப்பேற்றுக் கொண்டு பொய்யான நம்பிக்கையை உருவாக்க பயமாக உள்ளது’’ என்றார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் எம்எஸ் டோனி இந்திய அணிக்கு திரும்புவது கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவர் தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்குப் பிறகு சர்வதேச போட்டியில் விளையாடாமல் உள்ளார்.
ஏறக்குறைய அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று கூறினாலும், எம்எஸ் டோனி தனது ஓய்வு குறித்து வாய்திறக்கவில்லை.
அவர் டி20 உலக கோப்பையில் விளையாட விரும்புவதாக தெரிகிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் அவருக்கு இடமுண்டு என்று எனச் சொல்லப்படுகிறது.
இதனால் ஐபிஎல் போட்டிக்கு விளையாடும் வகையில் சென்னையில் பயிற்சி மேற்கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றால் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதனால் காலவரையின்றி ஐபிஎல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றால் எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘இந்த வருடம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறாவிட்டால், எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதும் மிகவும் கடினமானதாகிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாடாமல் இருக்கும் எம்எஸ் டோனியை எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.
உண்மையிலேயே கேஎல் ராகுலின் விக்கெட் கீப்பர் திறமை டோனிக்கு இணையாக இல்லைதான். ஆனால், டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரைக்கும் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபிஎல் நடைபெறாவிட்டால் டோனிக்கான வாய்ப்பு குறைவுதான்.
இறுதியாக இந்திய அணிக்காக தேர்வு செய்யும்போது யாராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அவரது ஓய்வு என்பது அவரின் தனிப்பட்ட முடிவு’’ என்றார்.
கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நேரத்தை குழந்தைகளுடனும், வீட்டு வேலைகள் செய்தும் கழித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். சில வீரர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் லைவ் செசனில் உரையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறர். இவர் வீட்டில் இருக்கும் நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்து வருகிறார்.
வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுக்கு ரொட்டி தயார் செய்து கொடுத்தார். இதை சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா ஆடுவார்கள் என விம்பிள்டன் டென்னிஸ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் உயரிய அந்தஸ்து பெற்றது விம்பிள்டன் டென்னிஸ். கொரோனா அச்சம் காரணமாக லண்டனில் நடக்க இருந்த இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டி ரத்தானது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இப்போது தான் விம்பிள்டன் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் மகுடத்தை அதிக முறை சூடியவர் என்ற பெருமை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (8 முறை) வசம் உள்ளது. கால் முட்டி காயத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆபரேஷன் செய்திருந்த பெடரர், புல்தரை போட்டியான விம்பிள்டனில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருந்தார். விம்பிள்டன் ரத்தானதும் அதிர்ச்சிக்குள்ளானார். இதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை விம்பிள்டனை ருசித்துள்ள முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். 38 வயதான இருவரும் ஓய்வு காலத்தை நெருங்கி வருகிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு விம்பிள்டனில் கால்பதிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விம்பிள்டன் டென்னிஸ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் லீவிஸ் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா இருவரின் ஆட்டத்தையும் மீண்டும் பார்க்க விரும்புகிறோம். அவர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2021-ம் ஆண்டு விம்பிள்டன் இன்னும் ஜாலியாக, உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். தற்போதைய நிலைமையில் இந்த ஆண்டு இறுதிவரை டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க தலைமை செயல் அதிகாரி கிரேக் டிலே கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் நினைப்பதை விட சீக்கிரமாகவே டென்னிஸ் போட்டிகள் தொடங்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஐ.பி.எல். உள்ளிட்ட எந்த விளையாட்டு நடத்துவதற்கும் சாதனமான சூழ்நிலை இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா பீதியால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா நோய் தொற்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போவதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்தாகுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்கப்பட்டதற்கு அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
‘நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய சூழலில் ஐ.பி.எல். குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். யாரும் எங்கும் செல்ல முடியவில்லை. இதே நிலைமை மே மாதத்தின் இறுதிவரை போகும் என்று தோன்றுகிறது.
இத்தகைய நிலைமையில் வீரர்கள் எங்கிருந்து வருவார்கள். அவர்கள் எப்படி பயணம் மேற்கொள்வார்கள். இது போன்ற விஷயங்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உலகின் எந்த விளையாட்டுக்கும் இப்போது சாதகமான சூழ்நிலை இல்லை. ஐ.பி.எல். போட்டியை மறந்து விடுங்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மற்ற நிர்வாகிகள், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஐ.பி.எல். தொடர் குறித்த உறுதியான தகவலை இன்று வழங்குகிறேன். யதார்த்தமாக பேச வேண்டும் என்றால் கொரோனாவினால் உலகில் எல்லோருடைய வாழ்க்கையும் நிர்கதியாகி இருக்கும் போது, விளையாட்டுக்கு ஏது எதிர்காலம்?
இவ்வாறு கங்குலி கூறினார்.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்து ஐ.பி.எல். குறித்து நாங்கள் முடிவு செய்வோம்’ என்றார். ஐ.பி.எல். ரத்தானால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணி வீரர் டோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் டோனி 72 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த போட்டிக்கு பிறகு டோனி இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவில்லை. அத்துடன் அவர் இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 38 வயதான டோனி தனது திறமையை நிரூபித்து, ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல். போட்டி நாளை மறுநாள் (15-ந் தேதி) வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட இருப்பதால் இந்த போட்டி காலவரையின்றி ஒத்திப்போடப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
‘டோனி தனது திறமைக்கு ஏற்ப இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார். அவர் உரிய மரியாதையுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும். ஓய்வு விஷயத்தில் அவர் நீண்ட நாட்கள் இழுத்தடித்து வருவது ஏன்? என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருடைய இடத்தில் நான் இருந்து இருந்தால், அப்போதே ஓய்வு பெற்று இருப்பேன். நான் குறுகிய வடிவிலான போட்டியில் மேலும் 3 முதல் 4 ஆண்டுகள் விளை யாடி இருக்கலாம். ஆனாலும் நான் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியுடன் விலகினேன். 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முடி யாது என்பதை உணர்ந்த தால் ஏன் இழுத்தடிக்க வேண்டும் என நினைத்து ஓய்வு முடிவுக்கு வந்தேன்.
இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று கொடுத்து இருப்பதுடன் பல்வேறு மகத்தான சாதனைகளை டோனி செய்து இருக்கிறார். ஒருநாடாக சிறந்த வீரரான அவரை மதிப்புடனும், மரியாதையுடனும் அனுப்ப வேண்டியது அவசியம். உரிய மரியாதையுடன் அவருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டும். அவர் அருமையான மனிதநேயம் மிக்கவர். தற்போது அவர் திணறுகிறார். உலக கோப்பை அரைஇறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனபோதே அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதனை ஏன் செய்யவில்லை என்பதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஒரு பிரியா விடை போட்டி தொடரில் விளையாடி விடைபெற்று இருந்தால் கூட பொருத்தமானதாக இருந்து இருக்கும்.
2018-19-ம் ஆண்டில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றியது. இந்த ஆண்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் நல்ல நிலையில் தான் உள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்திய அணியின், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முந்தைய ஆண்டில் விளையாடாத ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். முந்தைய ஆண்டை போல இந்த முறையும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டு தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அவர் ஜாவித் மியான்தத்துதான் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர் இன்சமாம் உல் ஹக். அதேபோல் அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஹனிஃப் முகமது, ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்பர், முகமது யூசுப், யூனிஸ் கான் போன்றோர் பாகிஸ்தான் நாட்டின் தலைசிறந்த பேட்மேஸ்களாக கருதப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஜாவித் மியான்தத்துதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘என்னைத் பொறுத்த வரைக்கும் பாகிஸ்தான் உருவாக்கிய தலைசிறந்த பேட்ஸ்மேன் ஜாவித் மியான்தத்துதான். நான் அவருடன் இணைந்து ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளேன. அவர் மீது அவருக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது, அது அவரை மிகவும் சிறப்பான வீரராக மாற்றியது.
நான் ஒருமுறை முஷ்டாக் அகமதுடன் பேசும்போது, அவர் என்னிடம் ஒருமுறை ஆஸ்திரேயாவுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது மியான்தத் இளம் வீரர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்க மற்ற வீரர்கள் பயந்தனர். ஆனால், மியாத்தத் களம் இறங்க தயாராக இருப்பதாக கூறியதாக கூறினார். அவர் எப்போதும் பயப்படாமல் அணுகக்கூடியவர்.
பேட்ஸ்மேன்கள் எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவார். அதுதான் அவருடைய கோச்சிங். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் எல்லோரும் டெக்னிக்கலை விட ரன்கள் அடிப்பதில்தான் கவனம் செலுத்துவார்கள்’’ என்றார்.
மேட்ச்-பிக்சிங் சம்பவத்தில் ஐந்தாண்டுகள் தடைபெற்ற சல்மான் பட், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் நேர்மையை பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்ட வழக்கில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் பட்டுக்கு ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.
தடைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் முகமது அமிர் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே வாழ்நாள் தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டவர்களுக்கு அணியில் இடம் கொடுக்கக்கூடாது என்று முகமது ஹபீஸ் தெரிவித்திருந்தார். அதற்குமேலாக ஜாவித் மியான்தத் தூக்கிலிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் நேர்மையை பற்றி பேசக்கூடாது என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சர்மான் பட் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் இந்த விஷயம் குறித்து (மேட்ச்-பிக்சிங்) ஏன் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஏனென்றால் இது ஒரு பிரச்சனையே கிடையாது. ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இரண்டும்தான் அவர்கள் வகுத்துள்ள விதியின்படி பேச வேண்டும்.
அவர்களின் தொடர்புடைய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டனர். இது ஊழலில் இருந்து வேறுப்பட்டதாகுமா?. பாகிஸ்தான் கிரிக்கெடில் நாம் நேர்மைப் பற்றிக்கூட பேசக்கூடாது’’ என்றார்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்யே இருக்கும் இந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது என சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ந்தேதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
சாஹல் இதுகுறித்து கூறுகையில் ‘‘லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று நீண்ட நாட்கள் இருக்க முடியாது. தற்போது வீட்டிற்குள் இருந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது. பக்கத்தில் உள்ள ஓட்டலில் வசிக்க முடியும். ஆனால் வீட்டில் தங்க முடியாது. இதுதான் தற்போது என்னுடைய நிலை. லாக்டவுன் நாட்களை இனிமேலும் தாங்க முடியாது’’ என்றார்.