என் மலர்
விளையாட்டு
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அவர் ஜாவித் மியான்தத்துதான் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர் இன்சமாம் உல் ஹக். அதேபோல் அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஹனிஃப் முகமது, ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்பர், முகமது யூசுப், யூனிஸ் கான் போன்றோர் பாகிஸ்தான் நாட்டின் தலைசிறந்த பேட்மேஸ்களாக கருதப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஜாவித் மியான்தத்துதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘என்னைத் பொறுத்த வரைக்கும் பாகிஸ்தான் உருவாக்கிய தலைசிறந்த பேட்ஸ்மேன் ஜாவித் மியான்தத்துதான். நான் அவருடன் இணைந்து ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளேன. அவர் மீது அவருக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது, அது அவரை மிகவும் சிறப்பான வீரராக மாற்றியது.
நான் ஒருமுறை முஷ்டாக் அகமதுடன் பேசும்போது, அவர் என்னிடம் ஒருமுறை ஆஸ்திரேயாவுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது மியான்தத் இளம் வீரர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்க மற்ற வீரர்கள் பயந்தனர். ஆனால், மியாத்தத் களம் இறங்க தயாராக இருப்பதாக கூறியதாக கூறினார். அவர் எப்போதும் பயப்படாமல் அணுகக்கூடியவர்.
பேட்ஸ்மேன்கள் எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவார். அதுதான் அவருடைய கோச்சிங். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் எல்லோரும் டெக்னிக்கலை விட ரன்கள் அடிப்பதில்தான் கவனம் செலுத்துவார்கள்’’ என்றார்.
மேட்ச்-பிக்சிங் சம்பவத்தில் ஐந்தாண்டுகள் தடைபெற்ற சல்மான் பட், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் நேர்மையை பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்ட வழக்கில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் பட்டுக்கு ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.
தடைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் முகமது அமிர் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே வாழ்நாள் தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டவர்களுக்கு அணியில் இடம் கொடுக்கக்கூடாது என்று முகமது ஹபீஸ் தெரிவித்திருந்தார். அதற்குமேலாக ஜாவித் மியான்தத் தூக்கிலிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் நேர்மையை பற்றி பேசக்கூடாது என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சர்மான் பட் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் இந்த விஷயம் குறித்து (மேட்ச்-பிக்சிங்) ஏன் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஏனென்றால் இது ஒரு பிரச்சனையே கிடையாது. ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இரண்டும்தான் அவர்கள் வகுத்துள்ள விதியின்படி பேச வேண்டும்.
அவர்களின் தொடர்புடைய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டனர். இது ஊழலில் இருந்து வேறுப்பட்டதாகுமா?. பாகிஸ்தான் கிரிக்கெடில் நாம் நேர்மைப் பற்றிக்கூட பேசக்கூடாது’’ என்றார்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்யே இருக்கும் இந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது என சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ந்தேதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
சாஹல் இதுகுறித்து கூறுகையில் ‘‘லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று நீண்ட நாட்கள் இருக்க முடியாது. தற்போது வீட்டிற்குள் இருந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது. பக்கத்தில் உள்ள ஓட்டலில் வசிக்க முடியும். ஆனால் வீட்டில் தங்க முடியாது. இதுதான் தற்போது என்னுடைய நிலை. லாக்டவுன் நாட்களை இனிமேலும் தாங்க முடியாது’’ என்றார்.
பாகிஸ்தானின் இளம் நட்சத்திர வீரரான பாபர் அசாமால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக உள்ளார். இவரைப்போல் பாகிஸ்தானின் இளம் வீரரான பாபர் அசாமும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
தற்போது போன்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி சாதனையை முறியடிக்க பாபர் அசாமுக்கு வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறுகையில் ‘‘விராட் கோலியின் சாதனைக்கூட முறியடிக்கும் சாத்திக்கூறுகள் உள்ளது. ஆனால் பாபர் அசாம் அவரது மனதை எளிமையாக்கி, தோல்வி குறித்து சிந்திக்கக்கூடாது. அவர் வெற்றி, ரன்கள் குவிப்பது பற்றியே சிந்திக்க வேண்டும். அப்படி செய்தால் நீண்ட காலத்திற்கு சிறந்த வீரராக இருப்பார்’’ என்றார்.
இங்கிலாந்தின் விஸ்டன் இதழ் வெளியிட்டுள்ள சிறந்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்கும். அந்த வகையில் 2019-2020 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் ஜாப்ரா ஆர்சர், பேட் கம்மின்ஸ், மார்னஸ் லாபஸ்சேன், வீராங்கனைகள் எலிஸ் பெர்ரி, சிமோன் ஹார்மர் ஆகியோரையும் குறிப்பிட்டிருந்தது. இந்த பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என்று லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லக்ஷ்மண் கூறுகையில் ‘‘விஸ்டனின் ஐந்து போட்டிகள் கொண்ட பட்டியலில் ரோகிரத் சர்மா பெயர் இல்லாதது கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.
ஆஷஸ் தொடர் முக்கியமானதுதான். அதைவிட உலக கோப்பை மிகப்பெரியது. ஒருவர் ஐந்து சதம் அடித்துள்ளார். இதில் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்காதபோது கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்தது ஞாபகத்தில் வைக்க வேண்டியது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தது முக்கியமானது. இதனால் அவரது பெயர் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் ஐபிஎல் 20 ஓவர் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதில் இருந்து வருடம் தோறும் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான 13வது ஐ.பி.எல் போட்டியை கடந்த மாதம் 29-ந் தேதி முதல் மே மாதம் 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு எந்த தேதியில் நடத்தலாம் என்றும், குறுகிய காலத்தில் நடத்தலாமா? என்றும் கிரிக்கெட் வாரியம் யோசனையில் இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதால் ஐ.பி.எல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது;-
பஞ்சாப், மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளன. ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டியை வழக்கமாக நடத்தும் காலத்தில் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆனால் நிச்சயமாக ஐ.பி.எல் போட்டியை ரத்து செய்ய மாட்டோம். இந்தப் போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் எங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்படும். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு கிரிக்கெட் வாரியம் தனது பங்கு தாரர்களுடன் இந்த விஷயத்தில் தீர்வு காணும்.
எந்த காலக்கட்டத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்பதில் கிரிக்கெட் வாரியத்திற்கு சவால் இருக் கலாம். இயல்புநிலை திரும்பிய பிறகுதான் இதுகுறித்து விவாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல் போட்டியை நடத்துவதற்கு கிரிக்கெட் வாரியம் 2 யோசனைகளை முன்வைத்துள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு செப்டம்பர் முதல் அக்டோபர் தொடக்கம் வரை ஐ.பி.எல்.லை நடத்தலாம். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டால் அந்த காலகட்டத்தில் நடத்தலாம் என்ற விருப்பமும் இருக்கிறது.

முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்எஸ் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்பது குறித்து எதுவும் சொல்லாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
இதற்கிடையே, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் டோனி சிறப்பாக ஆடினால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.
ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் ரத்தாகும் சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், எம்எஸ் டோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, நாசர் உசேன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒருமுறை டோனி ஓய்வு பெற்றுவிட்டால், அதன்பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக்கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள். அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலைமுறைக்கு ஒருவரைத் தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட டோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்.
நான் டோனியை பார்த்தவரையில் அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஒரு சில ஆட்டங்களில் இலக்கை விரட்டும் போது டோனி சோபிக்கத் தவறியிருக்கலாம். ஆனாலும் அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் முழுமையாக சீராகும் முன்பே அவசரப்பட்டு கால்பந்து லீக் போட்டிகளை தொடங்கி விட வேண்டாம் என்று ‘பிபா’ தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷூரிச்:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் விளையாட்டுத் துறையையே புரட்டி போட்டுவிட்டது. 2-3 மாதங்களுக்கு எந்த போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகி உள்ளது. கால்பந்து விளையாட்டில் குறிப்பிட்ட நாடுகளில் நடத்தப்படும் லீக் போட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும். இதில் ஸ்பெயினில் நடக்கும் லா லிகா, இங்கிலாந்தின் பிரிமீயர் லீக், ஜெர்மனியில் அரங்கேறும் பன்டெஸ்லிகா, இத்தாலியின் லிகா சிரி ஏ லீக், ஜெர்மனியின் லிகு-1 போன்ற கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. கொரோனா அச்சத்தால் இந்த போட்டிகள் எல்லாம் பாதியில் நிற்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. உலக கோப்பைக்கான கால்பந்து தகுதி சுற்று போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தாலும் போட்டியை எப்போது தொடங்குவது என்று ஒரு பக்கம் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். லா லிகா, பன்டெஸ்லிகா போட்டிகளை மே மாத இறுதியில் தொடங்கலாம் என்று அந்த நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் யோசனையில் உள்ளன.
இந்த நிலையில் கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டு தொடங்குவது ஆபத்தாகி விடும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘நாங்கள் நடத்தும் கால்பந்து போட்டிகளில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கிறோம். மனித உயிரை விட விளையாட்டு பெரிது கிடையாது. அது தான் எங்களது முன்னுரிமை, நோக்கம். கிளப் போட்டிகளை நடத்துபவர்களையும் இதை பின்பற்றும்படி அறிவுறுத்துகிறோம். அதை நான் எவ்வளவு வலியுறுத்தி சொன்னாலும் போதாது. எந்த ஒரு ஆட்டம் அல்லது லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் இந்த விஷயம் தெளிவாக இருக்க வேண்டும்.
நிலைமை 100 சதவீதம் பாதுகாப்பாக இல்லாதபட்சத்தில் போட்டிகளை மறுபடியும் தொடங்கினால் அது மிகவும் பொறுப்பற்ற செயலாகி விடும். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதை விட காத்திருப்பதே நல்லது’ என்றார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான ஓவர் குறித்து ரிக்கி பாண்டிங் ருசிகர தகவலை தெரிவித்துள்ளார்.
லண்டன்:
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை (165 ஆட்டத்தில் வெற்றி) தேடித்தந்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங். 2012-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன் பிறகு ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளர், ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகர், டி.வி. வர்ணனையாளர் என்று எப்போதும் பிசியாகவே இருக்கிறார். இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் ஒரு ஓவரில் திக்கி திணறும் வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டது. அந்த ஆட்டத்தை நினைவுகூர்ந்த ரிக்கிபாண்டிங், ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான ஓவர் அது தான். பிளின்டாப்பிடம் இருந்து மணிக்கு 90 மைல் வேகத்தில் தொடுக்கப்பட்ட தரமான ரிவர்ஸ் ஸ்விங்’ என்று கூறியுள்ளார்.
பாண்டிங் குறிப்பிட்ட அந்த போட்டி 2005-ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டாகும். அதில் 2-வது இன்னிங்சில் களம் இறங்கியதும் பிளின்டாப்பின் ஓவரை பாண்டிங் சந்தித்தார். 2 எல்.பி.டபிள்யூ. மற்றும் ஸ்லிப் கேட்ச் வாய்ப்பு என்று மூன்று முறை கண்டம் தப்பிய பாண்டிங், கடைசி பந்தை ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் அந்த பந்து நோ-பால் என்று நடுவர் அறிவிக்க, மறுபடியும் வீசப்பட்ட கடைசி பந்தில் பாண்டிங் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகிப்போனார். பிளின்டாப்பின் துல்லியமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் திகைத்து போன பாண்டிங் அந்த இன்னிங்சில் டக்-அவுட் ஆனார். இந்த டெஸ்டில் 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்க உதவி செய்துள்ளார் சச்சின் தெண்டுல்கர்.
ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள் ஊரடங்கு என்பதால் தினக்கூலி வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.
இவர்களுக்கு லாபம் நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி அவர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த உதவியை செய்து வரும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் தெண்டுல்கர் ஒரு மாதம் 5000 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். இதை அந்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
‘‘லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் தெண்டுல்கருக்கு நன்றி. ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார். மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு கொடுக்க வேண்டும்’’ என அப்னாலயா என்ற அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் வீரரான ரிஷி தவான், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 500 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்றவைகளுக்காக வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பொதுமக்கள் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல் வீதியில் உலா வருகின்றனர். இதனால் விதிமுறையை மீறும் நபர்கள் மீது அபராதம் விதிக்கின்றனர். மேலும் வெளியே செல்ல வேண்டும் என்றால் அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு வாங்குவது அவசியம்.
இமாச்சல பிரதேசத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ரிஷி தவான் தனது வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அனுமதி சீட்டு வாங்கவில்லை என்று தெரியவந்தது.
இதனால் போலீசார் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிஷி தவான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடிள்ளார்.
இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டின் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்வதாகும், சகோதரருடன் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடுவதாகவும் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்ட போட்டிகள் எப்போது தொடங்கும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.
உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலம் ஓய்வில் இருப்பது ஆட்டத்திறனை பாதிக்கும் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சந்தீப் சர்மா கூறுகையில் ‘‘உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாததால் வீட்டிற்குள்ளேயே முடிந்த அளவிற்கு புஷ்அப், கிரஞ்சஸ், ஸ்குவாட்ஸ், ஸ்டைர் கிளிம்பிங் என உடற்பயிற்சியை செய்து வருகிறேன். மேலும் ஸ்விஸ் பாலும் விளையாடி வருகிறேன்.
உடம்பை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதற்காக வீட்டில் உள்ள தோட்டத்தில் ரன்னிங் செல்கிறேன். எனது சகோதரருடன் டென்னிஸ் கிரிக்கெட் விளையாடுகிறேன். இந்த நீண்ட காலம் இடைவெளி பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். லாக்டவுனுக்கு பிறகு பயிற்சியின்போது மீண்டும் பழைய நிலைக்கு வருவது சவாலானது’’ என்றார்.