என் மலர்
விளையாட்டு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டின் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்வதாகும், சகோதரருடன் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடுவதாகவும் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்ட போட்டிகள் எப்போது தொடங்கும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.
உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலம் ஓய்வில் இருப்பது ஆட்டத்திறனை பாதிக்கும் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சந்தீப் சர்மா கூறுகையில் ‘‘உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாததால் வீட்டிற்குள்ளேயே முடிந்த அளவிற்கு புஷ்அப், கிரஞ்சஸ், ஸ்குவாட்ஸ், ஸ்டைர் கிளிம்பிங் என உடற்பயிற்சியை செய்து வருகிறேன். மேலும் ஸ்விஸ் பாலும் விளையாடி வருகிறேன்.
உடம்பை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதற்காக வீட்டில் உள்ள தோட்டத்தில் ரன்னிங் செல்கிறேன். எனது சகோதரருடன் டென்னிஸ் கிரிக்கெட் விளையாடுகிறேன். இந்த நீண்ட காலம் இடைவெளி பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். லாக்டவுனுக்கு பிறகு பயிற்சியின்போது மீண்டும் பழைய நிலைக்கு வருவது சவாலானது’’ என்றார்.
இத்தாலியின் இன்டர் மிலன் அணிக்கு செல்ல உள்ளதாக வந்த செய்திகள் வதந்தி என அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சி தெரிவித்துள்ளார்.
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுபவர் அர்ஜென்டினாவில் லயோனல் மெஸ்சி. இவர் சிறு வயதில் இருந்தே ஸ்பெயின் லா லிகா கிளப் அணியான பார்சிலோனாவுக்காக விளையாடி வருகிறார். இவரின் அபார ஆட்டத்தால் பார்சிலோனா ஏராளமான வெற்றி வாகைகளை சூடியுள்ளது.
32 வயதாகும் மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வேறு அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற செய்து கடந்த ஆண்டில் இருந்து உலா வருகிறது. இப்படி செய்தி வரும்போதெல்லாம் மெஸ்சி அதை மருத்துள்ளார். கடந்த ஆண்டோடு அவருடனான ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால் பார்சிலோனா அணி அவரை யாரும் அணுகக்கூடாது என்பதற்காக டிரான்ஸ்பர் தொகையை மிக அதிகமாக காட்டியது. அத்துடன் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை நீட்டித்தது.
இந்நிலையில் இத்தாலியில் உள்ள இன்டர் மிலன் அணிக்கு செல்ல இருக்கிறார், ரொனால்டினோவின் ஜாமீனுக்கு பின்னால் இவர் இருந்தார் என்று செய்திகள் வெளியாகின.
இன்டர் மிலனுக்கு செல்ல இருப்பதாக வந்த செய்தி முதல் பொய், ரொனால்டினோவின் ஜாமீனுக்கு உதவியதாக வந்த செய்தி 2-வது பொய் என்று மெஸ்சி தெரிவித்துள்ளார்.
பார்சிலோனா - மெஸ்சி இடையிலான உறவை மான்செஸ்டர் சிட்டி அணி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும், தடைசெய்யப்பட்ட கனவாக இருக்கும் ஆறுமுறை பலோன் டி'ஆர் விருதை வென்றவரை ஒப்பந்தம் செய்வதற்கான காலம் வெகு தொலையில் இல்லை என்ற இன்டர் மில்ன் தலைவர் கூறியிருந்ததாக தவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வதந்தி களம்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்ட போதிலும் வீரர்களின் ஊதியத்தில் கை வைக்கமாட்டோம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் முற்றிலுமாக விளையாட்டு போட்டிகள் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருக்கிறது.
இதனால் முதல் மூன்று மாதத்திற்கான வீரர்களின் ஊதியத்தை குறைக்க ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பிசிசிஐ மத்திய ஒப்பந்த வீரர்களுக்கான ஊதியத்தை குறைக்கும் எண்ணத்தில் இல்லை என பெயரை தெரிவிக்க விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில் ‘‘மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான முடிவு வந்தாலும் பிசிசிஐ அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. மத்திய ஒப்பந்த வீரர்களுக்கான காலாண்டு தொகை அவர்களுக்கு கிடைத்தே தீரும்.
மேலும் போட்டிக்கான தொகை இந்தியா, இந்தியா ‘ஏ’ அணிகளுக்கான விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்படும். நிதி வருடத்திற்குள் இந்த தொகைகள் வீரர்களுக்கு சென்றடையும்’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் அடுத்த வருடமும் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது என சிஇஓ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்திட வேண்டும் என ஜப்பான் ஆர்வம் காட்டியது. ஆனால் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எங்கள் நாட்டின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் என அறிவித்தது.
பெரும்பாலான நாடுகள் அது கருத்தை வலியுறுத்தின. இதனால் ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் கூட ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? என்பதை உறுதியாக கூற இயலாது என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சிஇஓ தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சிஒஓ தோசிரோ முடோ இதுகுறித்து கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றை அடுத்த வருடம் ஜூலை மாத்திற்குள் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வந்திட முடியும் என்று யாரும் உறுதியாக சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு உறுதியான நிலையில் இருந்து தெளிவான பதிலை எங்களால் கொடுக்க முடியவில்லை.
ஒரு வருடத்திற்கு போட்டியை ஒத்தி வைத்துள்ளோம். ஆகவே, அடுத்த வருடம் போட்டி நடைபெறுவதற்கான வேலைகளை கடுமையான வகையில் செய்ய முடியும். அடுத்த வருடத்திற்குள் இந்த கொடிய வைரசை மனித இனம் வெற்றிக் கொள்ளும் என நம்புகிறோம்’’ என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தயாராகுவதற்கு கூடுதலாக நேரம் கிடைத்துள்ளது என இந்திய தடகள வீரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பிற்கு சில வீரர்கள் வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்து வந்தாலும், சில வீரர்கள் வீராங்கனைகள் வரவேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய நடை ஓட்டப்பந்தயத்தில் (Race Walking) 20 கிலோ மீட்டர் பிரிவில் நான்காவது இடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றவர் இந்திய வீரர் கே.டி. இர்பான்.
போட்டி தள்ளிவைப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக கூடுதலான நேரத்தை கொடுத்துள்ளது என்று கே.டி. இர்பான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.டி. இர்பான் கூறுகையில் ‘‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது நல்லதுதான். அதிக அளவில் பயிற்சி மேற்கொண்டு பதக்கத்தை வெல்லக்கூடிய அளவிற்கு நெருங்க முடியும். நடஓட்டப்பந்தயம் டெக்னிக்கல் போட்டி. ஆகவே இந்த நேரத்தை எடுத்துக் கொண்டு அதிக அளவில் கவனம் செலுத்துவேன். இந்த நேரம் அடுத்த வருடம் போட்டிக்கு மிகச் சிறப்பாக தயாராக உதவி செய்யும்’’என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 4-ந்தேதி ஓவலில் தொடங்கும் என இங்கிலாந்து அறிவித்திருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரைக்கும் எந்தவிதமாக விளையாட்டுகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் போட்டிகள் தொடங்க வாய்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் போட்டிகள் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜூன் மாதம் 4-ந்தேதி ஓவலில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி நடைபெற வாய்ப்புகள் குறைவு என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் ஆஷ்லே ஜைல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஷ்லே ஜைல்ஸ் கூறுகையில் ‘‘மே 28-ந்தேதி வரை போட்டிகளை நடைபெறாது என்ற உத்தரவு அப்படியே நீட்டிக்கும். ஆனால், ஜூன் மாதத்தில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
நாங்கள் அதற்கான மாற்று ஏற்பாடு குறித்து சிந்தித்து வருகிறோம். தற்போதுள்ள இந்த சூழ்நிலையில் எந்தவித கிரிக்கெட் போட்டிகளையும் இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம்.
அனைத்து போட்டிகளையும் நடத்த வாய்ப்பு இல்லை என்றால், மற்ற நாட்டு கிரிக்கெட் போர்டுகளிடம் பேசி கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டியது முக்கியமானது. அதேவேளையில் மக்கள் பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’’ என்றார்.
இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் இருப்பதால் போன் பேசுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்.
இந்திய கிரிக்கெட் நடுவர்களில் ஒருவர் அனில் சவுத்ரி. இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பிரிவில் நடுவராக உள்ளார். இதுவரை 20 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிராமத்திலேயே தங்கியுள்ளார். குக்கிராமம் என்பதால் மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லையாம். இதனால் நெட்வொர்க் கிடைப்பதற்காக மரத்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மார்ச் 16-ந்தேதியில் இருந்து என்னுடைய இரண்டு மகன்களுடன் இங்கு இருக்கிறேன். இந்த கிராமத்தில் சில நாட்கள் இருப்பதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் தற்போது அதை பின்பற்றி இங்கேயே இருக்கிறேன். என்னுடைய அம்மா மற்றும் மனைவி டெல்லியில் இருக்கிறார்கள்.
இங்கு எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே நெட்வொர்க்குதான். என்னால் யாருடன் பேசவும் முடியவில்லை. இண்டர்நெட் தொடர்பும் இல்லை. நெட்வொர்க் கிடைக்க வேண்டுமென்றால் கிராமத்தில் இருந்து சற்று வெளியேறி மரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்படி இருந்தாலும் எப்பொழுதும் நெட்வொர்க் கிடைப்பதில்லை’’ என்றார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிராமத்திலேயே தங்கியுள்ளார். குக்கிராமம் என்பதால் மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லையாம். இதனால் நெட்வொர்க் கிடைப்பதற்காக மரத்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மார்ச் 16-ந்தேதியில் இருந்து என்னுடைய இரண்டு மகன்களுடன் இங்கு இருக்கிறேன். இந்த கிராமத்தில் சில நாட்கள் இருப்பதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் தற்போது அதை பின்பற்றி இங்கேயே இருக்கிறேன். என்னுடைய அம்மா மற்றும் மனைவி டெல்லியில் இருக்கிறார்கள்.
இங்கு எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே நெட்வொர்க்குதான். என்னால் யாருடன் பேசவும் முடியவில்லை. இண்டர்நெட் தொடர்பும் இல்லை. நெட்வொர்க் கிடைக்க வேண்டுமென்றால் கிராமத்தில் இருந்து சற்று வெளியேறி மரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்படி இருந்தாலும் எப்பொழுதும் நெட்வொர்க் கிடைப்பதில்லை’’ என்றார்.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களிடம் வார்த்தைப் போரில் ஈடுபடுவதில்லை என்ற கிளார்க்கின் குற்றச்சாட்டை டிம் பெய்ன் மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களிடம் போட்டியின்போது வார்த்தைப் போரில் ஈடுபட பயப்படுகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் பதில் அளிக்கையில் ‘‘விராட் கோலிக்கு ஆதரவாகவோ, அல்லது அவரை அவுட்டாக்க முயற்சி செய்யக்கூடாது என்றோ, அல்லது வேறு மாதிரியோ நாங்கள் சிந்தித்ததே கிடையாது.
அவருக்கு ஆதரவாக நாங்கள் செல்கிறோமா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. நாங்கள் நிச்சயமாக அவருடன் எந்தவொரு வார்த்தைப்போரில் ஈடுபட விரும்பவில்லை என்பதை விட, விராட் கோலி அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதில் உறுதியாக நினைக்கிறோம்.
வருகின்ற தொடரில் எப்படி இருக்கம் என்று யாருக்கும் தெரியாது. கடந்த தொடரில் ஏராளமான வார்த்தை போர் இருக்கத்தான் செய்தது. என்ன இருந்தாலும் பழைய ஆட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்க விரும்பில்லை. தற்போதைய நிலையில் ஐபிஎல் எனக்கு மிகப்பெரிய பின்னடைவு இல்லை. அதனால் நான் இழப்பதற்கு ஏதும் இல்லை’’ என்றார்.
இதற்கு தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் பதில் அளிக்கையில் ‘‘விராட் கோலிக்கு ஆதரவாகவோ, அல்லது அவரை அவுட்டாக்க முயற்சி செய்யக்கூடாது என்றோ, அல்லது வேறு மாதிரியோ நாங்கள் சிந்தித்ததே கிடையாது.
அவருக்கு ஆதரவாக நாங்கள் செல்கிறோமா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. நாங்கள் நிச்சயமாக அவருடன் எந்தவொரு வார்த்தைப்போரில் ஈடுபட விரும்பவில்லை என்பதை விட, விராட் கோலி அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதில் உறுதியாக நினைக்கிறோம்.
வருகின்ற தொடரில் எப்படி இருக்கம் என்று யாருக்கும் தெரியாது. கடந்த தொடரில் ஏராளமான வார்த்தை போர் இருக்கத்தான் செய்தது. என்ன இருந்தாலும் பழைய ஆட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்க விரும்பில்லை. தற்போதைய நிலையில் ஐபிஎல் எனக்கு மிகப்பெரிய பின்னடைவு இல்லை. அதனால் நான் இழப்பதற்கு ஏதும் இல்லை’’ என்றார்.
டெக்னிக்கலாக சச்சின் தெண்டுல்கரை போன்ற சிறந்த பேட்ஸ்மேனை நான் பார்த்ததில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருக்கிறது. இந்த நேரத்தில் முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தற்போதைய கேப்டன் கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 100 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி சதத்தில் சச்சின் தெண்டுல்கரை விரட்டி வருகிறார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘டெக்னிக்கலாக சச்சின் தெண்டுல்கரை போன்ற சிறந்த பேட்ஸ்மேனை நான் பார்த்ததில்லை. அவுட்டாக்குவதற்கு மிகவும் கஷ்டமான பேட்ஸ்மேன். டெக்னிக்கலை பொறுத்தவரைக்கும் அவரிடம் பலவீனம் இல்லை. அவரால் தவறு செய்தால் மட்டுமே அவுட்டாக்க முடியும்.
தற்போது மூன்று வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். அவரது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் சாதனை நம்பமுடியாத வகையில் உள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை அதிக சதங்கள் அடிப்பதுதான்’’ என்றார்.
சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் அடித்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் 15921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களும் அடித்துள்ளார்.
விராட் கோலி ஒருநாள் போட்டியில் 43 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களும் அடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது க்ளோசெஸ்டர்ஷைர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு போட்டியில்லாத போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுவது வழக்கம். ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும்.
இந்த காலக்கட்டத்தில் அவர் இங்கிலாந்து சென்று விளையாடுவார். க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணி புஜாராவை விளையாட ஒப்பந்தம் செய்திருந்தது.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது. இதனால் மே 28-ந்தேதி வரை எந்தவொரு போட்டியையும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புஜாரா உடனான ஒப்பந்தத்தை க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணி ரத்து செய்துள்ளது. க்ளோசெஸ்டர்ஷைர் அணிக்காக புஜாரா ஆறு போட்டிகளில் விளையாட இருந்தார்.
பாகிஸ்தான் கிரக்கெட் அணி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை வீடியோ மூலம் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்வில் தோல்வியடைந்தால் அணியில் இடமில்லை என்ற கொள்கையை வைத்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் முடிந்த பின்னர் மார்ச் 23-ந்தேதி மற்றும் 24-ந்தேதிகளில் வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை நடத்த இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்ததால் போட்டிகள் நிறுத்தப்பட்டு நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் மைதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வருகிற 20-ந்தேதி மற்றும் 21-ந்தேதி வரை வீடியோ மூலம் வீரர்களிடம் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை அமைப்பிற்கு உதவும் வகையில் பிரிமீயர் லீக் கிளப் அணி கேப்டன்கள் நிதி திரட்டுவதற்காக அறக்கட்டளையை தொடங்கியுள்ளனர்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக பரவியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளது.
அதன்பின் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்சில் ருத்ர தாண்டவம் ஆடியது. தற்போது இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து லீக்குகள் மிகவும் பிரபலம். இதில் விளையாடும் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள்.
தற்போது விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். மேலும் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு நிதி வழங்கி உதவியுள்ளனர்.
இதன்அடிப்படையில் இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் 20 கிளப்புகளின் கேப்டன்கள் இணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டி தேசிய சுகாதார அமைப்புக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.
இந்த அமைப்புக்கு லிவர்பூல் அணியின் ஜோர்டன் ஹெண்டர்சன் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். இவருடன் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஹாரி மாகுயிர், வாட்போர்டின் டிரோய் டீனி, வெஸ்ட் ஹாம் அணியின் மர்க் நோபிள் ஆகியோரும் நிர்வாகியாக உள்ளனர். இவர்கள் #PlayersTogether மூலம் பிரிமீயர் லீக்கில் விளையாடும் அனைத்து வீரர்களையும் ஒன்று திரட்டி அவர்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு அணிக்கும் தலைமை ஏற்றுள்ள வீரர்கள் அணியுடன் சக வீரர்களுன் பேசி நிதியை சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அப்போது ஒரு அணியைவிட மற்ற அணி அதிகமான தொகையை கொடுத்தால் அதை எப்படி நிர்வகிப்பது போன்ற சந்தேகங்கள் வீரர்களுக்கு ஏற்பட்ட போதிலும், இது மத்திய நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்டு உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும் பகிர்ந்து அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் தாங்கள் வழங்கும் தொகை அவர்கள் கிளப் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு செலவிட வேண்டும். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டிற்கு உதவ விரும்புவார்கள். அப்படி இருக்கும்போது நிதியை எப்படி பகிர்ந்து அளிப்பது போன்ற விவாதங்களும் ஏற்பட்டன.
இறுதியாக ஒவ்வொரு அணி கேப்டன்களும் அவர்களது அணி வீரர்களும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முயன்றனர். அவர்கள் நிர்ணயித்த தொகைக்கு மேல் கொடுக்க முயன்றால் சந்தோசமாக வாங்கப்படும் என்றனர்.






