search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் தலைவர் ஆஷ்லே ஜைல்ஸ்
    X
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் தலைவர் ஆஷ்லே ஜைல்ஸ்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் நடைபெறுமா?

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 4-ந்தேதி ஓவலில் தொடங்கும் என இங்கிலாந்து அறிவித்திருந்தது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரைக்கும் எந்தவிதமாக விளையாட்டுகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் முதல் வாரத்தில் போட்டிகள் தொடங்க வாய்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் போட்டிகள் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஜூன் மாதம் 4-ந்தேதி ஓவலில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி நடைபெற வாய்ப்புகள் குறைவு என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் ஆஷ்லே ஜைல்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆஷ்லே ஜைல்ஸ் கூறுகையில் ‘‘மே 28-ந்தேதி வரை போட்டிகளை நடைபெறாது என்ற உத்தரவு அப்படியே நீட்டிக்கும். ஆனால், ஜூன் மாதத்தில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

    நாங்கள் அதற்கான மாற்று ஏற்பாடு குறித்து சிந்தித்து வருகிறோம். தற்போதுள்ள இந்த சூழ்நிலையில் எந்தவித கிரிக்கெட் போட்டிகளையும் இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம்.

    அனைத்து போட்டிகளையும் நடத்த வாய்ப்பு இல்லை என்றால், மற்ற நாட்டு கிரிக்கெட் போர்டுகளிடம் பேசி கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டியது முக்கியமானது. அதேவேளையில் மக்கள் பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×