என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சி
    X
    மெஸ்சி

    பார்சிலோனாவில் இருந்து வெளியேறுகிறேனா?- வதந்தி என்கிறார் மெஸ்சி

    இத்தாலியின் இன்டர் மிலன் அணிக்கு செல்ல உள்ளதாக வந்த செய்திகள் வதந்தி என அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சி தெரிவித்துள்ளார்.
    கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுபவர் அர்ஜென்டினாவில் லயோனல் மெஸ்சி. இவர் சிறு வயதில் இருந்தே ஸ்பெயின் லா லிகா கிளப் அணியான பார்சிலோனாவுக்காக விளையாடி வருகிறார். இவரின் அபார ஆட்டத்தால் பார்சிலோனா ஏராளமான வெற்றி வாகைகளை சூடியுள்ளது.

    32 வயதாகும் மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வேறு அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற செய்து கடந்த ஆண்டில் இருந்து உலா வருகிறது. இப்படி செய்தி வரும்போதெல்லாம் மெஸ்சி அதை மருத்துள்ளார். கடந்த ஆண்டோடு அவருடனான ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால் பார்சிலோனா அணி அவரை யாரும் அணுகக்கூடாது என்பதற்காக டிரான்ஸ்பர் தொகையை மிக அதிகமாக காட்டியது. அத்துடன் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை நீட்டித்தது.

    இந்நிலையில் இத்தாலியில் உள்ள இன்டர் மிலன் அணிக்கு செல்ல இருக்கிறார், ரொனால்டினோவின் ஜாமீனுக்கு பின்னால் இவர் இருந்தார் என்று செய்திகள் வெளியாகின.

    இன்டர் மிலனுக்கு செல்ல இருப்பதாக வந்த செய்தி முதல் பொய், ரொனால்டினோவின் ஜாமீனுக்கு உதவியதாக வந்த செய்தி 2-வது பொய் என்று மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    பார்சிலோனா - மெஸ்சி இடையிலான உறவை மான்செஸ்டர் சிட்டி அணி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும், தடைசெய்யப்பட்ட கனவாக இருக்கும் ஆறுமுறை பலோன் டி'ஆர் விருதை வென்றவரை ஒப்பந்தம் செய்வதற்கான காலம் வெகு தொலையில் இல்லை என்ற இன்டர் மில்ன் தலைவர் கூறியிருந்ததாக தவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வதந்தி களம்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.
    Next Story
    ×