search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக்கேல் கிளார்க் - சச்சின்
    X
    மைக்கேல் கிளார்க் - சச்சின்

    தெண்டுல்கரை போன்ற ஒரு பேட்ஸ்மேனை நான் பார்த்ததே இல்லை: மைக்கேல் கிளார்க்

    டெக்னிக்கலாக சச்சின் தெண்டுல்கரை போன்ற சிறந்த பேட்ஸ்மேனை நான் பார்த்ததில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருக்கிறது. இந்த நேரத்தில் முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தற்போதைய கேப்டன் கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 100 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி சதத்தில் சச்சின் தெண்டுல்கரை விரட்டி வருகிறார்.

    இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘டெக்னிக்கலாக சச்சின் தெண்டுல்கரை போன்ற சிறந்த பேட்ஸ்மேனை நான் பார்த்ததில்லை. அவுட்டாக்குவதற்கு மிகவும் கஷ்டமான பேட்ஸ்மேன். டெக்னிக்கலை பொறுத்தவரைக்கும் அவரிடம் பலவீனம் இல்லை. அவரால் தவறு செய்தால் மட்டுமே அவுட்டாக்க முடியும்.

    தற்போது மூன்று வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். அவரது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் சாதனை நம்பமுடியாத வகையில் உள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை அதிக சதங்கள் அடிப்பதுதான்’’ என்றார்.

    சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் அடித்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் 15921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களும் அடித்துள்ளார்.

    விராட் கோலி ஒருநாள் போட்டியில் 43 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களும் அடித்துள்ளார்.
    Next Story
    ×