search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர்
    X
    சச்சின் தெண்டுல்கர்

    ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்க உதவி செய்துள்ளார் சச்சின் தெண்டுல்கர்.
    ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள் ஊரடங்கு என்பதால் தினக்கூலி வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.

    இவர்களுக்கு லாபம் நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி அவர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த உதவியை செய்து வரும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் தெண்டுல்கர் ஒரு மாதம் 5000 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். இதை அந்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

    ‘‘லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் தெண்டுல்கருக்கு நன்றி. ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார். மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு கொடுக்க வேண்டும்’’ என அப்னாலயா என்ற அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×