என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை.
    • இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ளுவரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது.
    • கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.

    காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் இல்லை.

    • டி20 உலகக்கோப்பை தொடரில் இத்தாலி நாடு விளையாடி வருகிறது.
    • இத்தாலி வீரர் க்ரிஷன் கலுகமாகே பீட்சா தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் இத்தாலி நாடு விளையாடி வருகிறது.

    இந்நிலையில், இத்தாலியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் க்ரிஷன் கலுகமாகே பீட்சா தயாரிக்கும் வேலையை விட்டு விட்டு தற்போது டி20 உலக கோப்பையில் விளையாடி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதுகுறித்து பேசிய க்ரிஷன் கலுகமாகே, "தற்போது கிரிக்கெட்டுடன் அந்த வேலையில் கவனம் செலுத்தினாலும், வருங்காலத்தில் கிரிக்கெட் மட்டுமே விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • நேபாளம் அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • ஜஸ்டின், அந்தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரின் 17வது போட்டியில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசியது.

    நேபாளம் அணியின் துவக்க வீரர்கள் குஷல் புர்டெல் (5), ஆசிஃப் ஷேக் (20) ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் பௌடெல் 14 பந்துகளில் 23 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். நேபாளம் அணி 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இத்தாலி சார்பில் க்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், பென் மனென்டி 2 விக்கெட்டுகளையும், அலி ஹாசன், ஸ்மட்ஸ் மற்றும் ஜஸ்பிரித் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய இத்தாலி அணி தொடக்கம் முதலே ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. இத்தாலி அணியின் தொடக்க வீரர்களான ஜஸ்டின் மொஸ்கா மற்றும் அந்தோனி மொஸ்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஜஸ்டின் 44 பந்துகளில் 60 ரன்களை (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), அந்தோனி 32 பந்துகளில் 62 ரன்களை (3 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்), விளாசினர். இதன் மூலம் இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்களை குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • இத்தாலி அணி முதலில் பந்துவீசியது.
    • இத்தாலி சார்பில் க்ரிஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரின் 17வது போட்டியில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசியது.

    டாஸை தோற்று பேட்டிங்கை தொடங்கிய நேபாளம் அணி துவக்கம் முதலே ரன் குவிக்க தடுமாறியது. நேபாளம் அணியின் துவக்க வீரர்கள் குஷல் புர்டெல் (5), ஆசிஃப் ஷேக் (20) ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் பௌடெல் 14 பந்துகளில் 23 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்தடுத்து களமிறங்கிய தீபிந்திரா சிங் (17), ஆரிஃப் ஷேக் (27), லொகேஷ் பேம் (3), குல்சன் ஜா (3) சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். நேபாளம் அணி 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இத்தாலி சார்பில் க்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், பென் மனென்டி 2 விக்கெட்டுகளையும், அலி ஹாசன், ஸ்மட்ஸ் மற்றும் ஜஸ்பிரித் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • முகமது நதீம் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.
    • துஷ்மந்தா சமீரா, மஹேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரின் 16வது போட்டியில் இலங்கை மற்றும் ஓமன் அணிகள் மோதின. இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசியது.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் குசல் மென்டிஸ் மற்றும் பவன் ரதன்யாகே ஜோடி நிலையாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குசல் மென்டிஸ் 45 பந்துகளில் 61 ரன்கள் (7 பவுண்டரிகள்), பவன் 28 பந்துகளில் 60 ரன்கள் (8 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர்.

    பின்னர் களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். 20 பந்துகளில் 50 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்த நிலையில் தசுன் ஷனகா தனது விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்துள்ளது. ஓமன் சார்பில் ஜிதென் 2 விக்கெட்டுகளையும், ஜே ஒடெட்ரா, சுஃப்யான் மெஹ்மூத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய ஓமன் அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ஆமிர், கேப்டன் ஜதிந்தர் சிங் முறையே 6, 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹமத் மிர்ஸா 9 ரன்களில் நடையை கட்டினார். இவருடன் ஆடிய முகமது நதீம் நிதானமாக ஆடி ரன்குவிப்பில் கவனம் செலுத்தினார்.

    எனினும், இலங்கை அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து வந்தனர். இதனால் ஓமன் அணியின் வாசிம் அலி, விநாயக் ஷுக்லா, ஜிதென் ரமணந்தி, நதீம் கான், சுஃப்யான், ஷா ஃபைசல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    ஓமன் சார்பில் முகமது நதீம் ஆட்டமிழக்காமல் 53 ரன்களை சேர்த்தார். இதனால் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா, மஹேஷ் தீக்ஷனா தலா இரண்டு விக்கெட்டுகளையும், துனித் வெல்லலகே, துஷன் ஹேமந்தா மற்றும் கமிந்து மென்டிஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

    • 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12-ந் தேதிக்குள் டோனி செலுத்த வேண்டும்.
    • ரூ.100 கோடியை மான நஷ்ட ஈடு கோரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி மனு தாக்கல் செய்திருந்தார்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திரசிங் டோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

    இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க மொழிபெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழுநேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு 3 முதல் 4 மாதங்களாகும். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.

    இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12-ந் தேதிக்குள் டோனி செலுத்த வேண்டும்.

    மேலும், மொழியாக்க பணிகளை மார்ச் 3-வது வாரத்துக்குள் மொழி பெயர்ப்பாளர், தட்டச்சர் முடிக்க வேண்டும். விசாரணையை மார்ச் 12-ந் தேதிக்கு தள்ளிவைகிறேன் என்று உத்தரவிட்டார்.

    • ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
    • ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6 லீக் ஆட்டம் மற்றும் ஒரு சூப்பர் 8 சுற்று போட்டி என ஆக மொத்தம் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

    அதன்படி, கடந்த 8-ந்தேதி நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் (டி பிரிவு), நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் (டி பிரிவு) தோற்கடித்தன.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3-வது போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நெதர்லாந்து அணி அமெரிக்காவை தோற் கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் (3 விக்கெட்) தோற்றது. 2-வது போட்டியில் நமீபியாவை (7 விக்கெட்) வீழ்த்தியது. அமெரிக்க அணி இந்தியாவிடம் 29 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 32 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இந்திய அணி ஆடாவிட்டாலும் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது. இதேபோல நாளையும் ரசிகர்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை நடைபெறும் மற்ற போட்டிகளில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே (கொழும்பு, காலை 11 மணி), கனடா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (டெல்லி, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் போட்டியில் அயர்லாந்தை 67 ரன்னில் வீழ்த்தி இருந்தது. ஜிம்பாப்வேயும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஓமனை (8 விக்கெட்) தோற்கடித்தது.

    இத்தாலி, நேபாளம் அணிகள் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    • டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்து வீசியது.
    • கேப்டன் தசுன் ஷனகா அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார்.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரின் 16வது போட்டியில் இலங்கை மற்றும் ஓமன் அணிகள் மோதின. இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசியது.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷ்ரா முறையயே 13 மற்றும் 8 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய குசல் மென்டிஸ் மற்றும் பவன் ரதன்யாகே ஜோடி நிலையாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    குசல் மென்டிஸ் 45 பந்துகளில் 61 ரன்கள் (7 பவுண்டரிகள்), பவன் 28 பந்துகளில் 60 ரன்கள் (8 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். 20 பந்துகளில் 50 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்த நிலையில் தசுன் ஷனகா தனது விக்கெட்டை இழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்துள்ளது. ஓமன் சார்பில் ஜிதென் 2 விக்கெட்டுகளையும், ஜே ஒடெட்ரா, சுஃப்யான் மெஹ்மூத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேரடியாக களமிறங்கிய இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, அமெரிக்காவின் வாசில் கிர்கோவ்-நெதர்லாந்தின் பர்ட் ஸ்டீவன்ஸ் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்கலாம்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்நிலையில், இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவை இன்று (12-ம் தேதி) எதிர் கொள்கிறது. டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் புதிய சாதனை படைக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

    கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை . அவர் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுவார்.

    காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுகிறார். முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.

    டி 20 போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2-வது முறையாகும். இதற்கு முன் 2021 உலகக் கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    நமீபியா அணி முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    முன்னதாக நாளை காலை 11 மணிக்கு பல்லேகலேவில் நடக்கும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமன் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2வது சுற்றில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் முன்னேறினர்.

    இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

    மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் குயின்வென் ஜெங்குவை 2-6, 6-2,

    7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ×