என் மலர்
விளையாட்டு
- ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
- ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் 2வது இடத்திலும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 3வது இடத்திலும் உள்ளனர்.
சமீபத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் சிக்கந்தர் ராசா பந்துவீச்சில் 1 விக்கெட்டும், பேட்டிங்கில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிக்கந்தர் ராசா ஒருநாள் போட்டியின் ஆல் ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. ரூதர்போர்டு அதிரடியாக ஆடி 42 பந்தில் 76 ரன்கள் குவித்தார். ரோஸ்டன் சேஸ் 34 ரன்னும், ஹோல்டர் 33 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்தின் அடில் ரஷித், ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேக்கப் பெத்தேல் 33 ரன்னும், பிலிப் சால்ட் 31 ரன்னும் எடுத்தனர். கடைசி வரை போராடிய சாம் கர்ரன் 43 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 19 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடே 3 விக்கெட்டும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் முன்னணி வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டோனெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய போட்டியில் வேஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரான்டன் கிங் 1 ரன்னிலும் ஹோப் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் 23 ரன்னிலும் ரோஸ்டன் சேஸ் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 33 ரன்கள் அடித்து அவுட்டானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரூதர்போர்ட் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.
- நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற நிலையில், பாகிஸ்தான் U-Turn ஆனதால் வருகிற 15-ந்தேதி திட்டமிட்டபடி கொழும்பில் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்காக உற்சாகமாகவும், தயாராகவும் இருக்கிறோம் என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது என்று ஒருநாளைக்கு முன்னர்தான் தெரியவந்துள்ளது. நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
நாங்கள் அனைத்து அணிகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். வீரர்களும், அணி ஸ்டாஃப்களும் தயார். தற்போது நாங்கள் போட்டிக்கான பகுதியில் இருக்கிறோம். திட்டங்கள் தொடங்கப்படும்.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றவர் திலக் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிட்டனைச் சேர்ந்த ஜெய் கிளார்க் முதல் சுற்றில் 4-6, 4-6 எனத் தோல்வியடைந்தார்.
- இந்திய வீரர்கள் முகுந்த் சசிகுமார், ஆர்யன் லட்சுமணன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
ஏ.டி.பி. சேலஞ்சர் ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பான சென்னை ஓபன் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தத் தொடருக்கான முதல் நிலை வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஜெய் கிளார்க் முதல் சுற்றில் கீரிஸ் நாட்டைச் சேர்ந்த ஐயோனிஸ் சிலாஸை எதிர்கொண்டார். இதில் ஜெய் கிளார்க் 4-6, 4-6 என நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 183-வது இடத்தில் இருக்கும் கிளார்க் முதல் செட்டில் 3-0 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 4-6 எனத் தோல்வியைத் தழுவினார்.
இந்திய வீரர் ஆர்யன் லட்சுமணன் போலந்து வீரர் மேக்ஸ் காஸ்னிகவ்ஸ்கியிடம் 5-7, 2-6 எனத் தோல்வியடைந்தார்.
2-வது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த முகுந்த் சசிகுமார் கஜகஸ்தான் வீரர் டெனிஸ் யெவ்செயெவ்-யிடம் 6-3, 2-6, 3-6 எனத் தோல்வியடைந்தார்.
- ஆஸ்திரேலியா 182 ரன்கள் குவித்தது.
- அயர்லாந்து 115 ரன்னில் சுருண்டது.
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா இன்று தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 29 பந்தில் 45 ரன்கள் விளாசினார்.
பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அயர்லாந்து 115 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா வீரர் எல்லீஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா வெற்றியுடன் டி20 உலகக் கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.
- இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது.
- இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தது.
இதையடுத்து இரு அணிகளும் திட்டமிட்டப்படி விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை பலரும் எதிர் நோக்கி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து கொழும்பு செல்ல வழக்கமாக ரூ.30,000 செலவாகும் இருவழிக் கட்டணம், தற்போது ரூ. 1 லட்சம் வரை உயர்வு. சென்னையில் இருந்து ரூ.50,000, மும்பையில் இருந்து ரூ.70,000ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார்.
- அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வருகிறார்
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் விலகிய நிலையில், அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வரும் நிலையில், மீதமுள்ள போட்டிகளில் ஸ்மித் அணியை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
- மார்கஸ் ஸ்டொய்னிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 14வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. கொலம்போவில் நடந்த இந்தப் போட்டியி் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டிராவிஸ் ஹெட் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் 17 பந்துகளில் 37 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்), அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 11 பந்துகளில் 21 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்தனர்.
மேட் ரென்ஷா 33 பந்துகளில் 37 ரன்கள் (2 பவுண்டரிகள்), கிளென் மேக்ஸ்வெல் 9 ரன்கள் (1 பவுண்டரி), மார்கஸ் ஸ்டொய்னிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தனர். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது.
- 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் ஹாட் ட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.
- கடைசி வரை போராடிய குர்பாஸ்-க்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது.
இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 2 ஆவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் கேசவ் மஹாராஜ் வீசிய 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் ஹாட் ட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் டிரா என்ற நிலையில் இருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த பிறகு குர்பாஸ் முகத்தை மூடி அழுத்த காட்சிகள் அனைவரையும் கலங்கவைத்தது. கடைசி வரை களத்தில் நின்ற அவரின் விடாமுயற்சிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- முதல் சூப்பர் ஓவர் போட்டியாக இது மாறியது.
- தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 13ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது.
கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 187 ரன்களை எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரில் மீண்டும் இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சூப்பர் ஓவர் போட்டியாக இது மாறியது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்களை அடித்தது. இதைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்களை சேர்த்தது. இதனால் போட்டி மீண்டும் சமனில் முடிய 2வது சூப்பர் ஓவருக்கு சென்றது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இது மாறியது.
2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்களை விளாசியது. இதைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன்களை எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.






