என் மலர்
டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நிலை வீரர் அதிர்ச்சி தோல்வி
- பிரிட்டனைச் சேர்ந்த ஜெய் கிளார்க் முதல் சுற்றில் 4-6, 4-6 எனத் தோல்வியடைந்தார்.
- இந்திய வீரர்கள் முகுந்த் சசிகுமார், ஆர்யன் லட்சுமணன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
ஏ.டி.பி. சேலஞ்சர் ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பான சென்னை ஓபன் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தத் தொடருக்கான முதல் நிலை வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஜெய் கிளார்க் முதல் சுற்றில் கீரிஸ் நாட்டைச் சேர்ந்த ஐயோனிஸ் சிலாஸை எதிர்கொண்டார். இதில் ஜெய் கிளார்க் 4-6, 4-6 என நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 183-வது இடத்தில் இருக்கும் கிளார்க் முதல் செட்டில் 3-0 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 4-6 எனத் தோல்வியைத் தழுவினார்.
இந்திய வீரர் ஆர்யன் லட்சுமணன் போலந்து வீரர் மேக்ஸ் காஸ்னிகவ்ஸ்கியிடம் 5-7, 2-6 எனத் தோல்வியடைந்தார்.
2-வது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த முகுந்த் சசிகுமார் கஜகஸ்தான் வீரர் டெனிஸ் யெவ்செயெவ்-யிடம் 6-3, 2-6, 3-6 எனத் தோல்வியடைந்தார்.
Next Story






