search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air fare hike"

    • கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில் இருந்த விமான கட்டணத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
    • பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் இல்லை. அனைத்தும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை விடுமுறை காலங்களில் விமான சுற்றுலா செல்பவர்கள் முன் கூட்டியே பயணத்தை திட்டமிடுகின்றனர்.

    சுற்றுலா முகவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற ஏற்பாட்டாளர்கள் மூலம் புக்கிங் செய்து சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள். தற்போது தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12-ந்தேதி வருகிறது. அதனால் 10 முதல் 16-ந்தேதி வரை உள்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில் இருந்த விமான கட்டணத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா உள்ளிட்ட பல நகரங்களுக்கு விமான கட்டணம் எகிரி உள்ளது. விமானங்களில் இடங்களும் நிரம்பிவிட்டன.

    மும்பை-டெல்லி ஒரு வழி விமான கட்டணம் சராசரியாக ரூ.6876. ஆனால் தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.8788 ஆக 27.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போல் புனே-டெல்லி விமான கட்டணம் கடந்த தீபாவளியை விட தற்போது 44.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    சென்னை-கொல்கத்தா ஒரு வழி கட்டணம் ரூ.6815-ல் இருந்து ரூ.8725 ஆக உயர்ந்துள்ளது. இது 28 சதவீதம் உயர்வாகும். பெங்களூரு-கொல்கத்தா ஒரு வழி விமான கட்டணம் ரூ.10195 ஆக அதிகரித்து உள்ளது. இது 40 சதவீதம் உயர்வாகும்.

    இது குறித்து டி.எம்.சி. லீசர் ஏஜென்சி இயக்குனர் ஷாம்நாத் கூறியதாவது:-

    இந்தியாவிற்குள் உள்ள நகரங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமான பயணம் தற்போது அதிகரித்து உள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்கு கோவா, அந்தமான், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் தாய்லாந்து, அரபு நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    ஆனால் அதற்கேற்ற அளவு இருக்கைகள் இல்லை. பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் இல்லை. அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதே போல் கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகளுக்கு செல்ல இடங்கள் விமானத்தில் இல்லை. இதனால் கட்டணம் இரு மடங்கு அதிகரித்து உள்ளது.

    மேலும் டிசம்பர் மாதம் 20-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதி வரை வெளி நாட்டு விமானங்களில் பெரும் பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. அந்தமானுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் கட்டணம் உயர்ந்தது.

    மும்பை-கோவாவுக்கு இண்டிகா விமானத்தில் ரூ.17 ஆயிரம் கட்டணம், விஸ்தாரா விமானத்தில் கட்டணம் ரூ.48 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சராசரியாக ரூ.8000 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

    கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்போதே முன்பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால் ஒரு சில நாடுகளுக்கு செல்ல விமானத்தில் இடம் இல்லை. இதே போல் தாய்லாந்துக்கு பயணம் செய்வோர் அதிகமாக இருப்பதால் இரு மடங்கு கட்டணம் அதிகரித்து உள்ளது. மும்பை, புனே நகரங்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால் கட்டணம் உயர்ந்து உள்ளது.

    புத்தாண்டு வரை விமானங்களில் பயணிக்க கட்டணம் அதிக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×