என் மலர்
விளையாட்டு
துவக்க வீரர் மார்க் ராம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் டீன் எல்கர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
செஞ்சூரியன்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களும் சேர்த்தன. இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாளான இன்று 174 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர் மார்க் ராம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் டீன் எல்கர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்.
ஆனால், மறுமுனையில் கீகன் பீட்டர்சன் (17), துசன் (11), கேசவ் மகராஜ் (8) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 4ம்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்துள்ளது. டீன் எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற மேலும் 211 ரன்கள் தேவை. நாளை ஒருநாள் ஆட்டம் மீதமுள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத நிலையில், இந்த இலக்கை தென் ஆப்பிரிக்கா எட்டுவது மிகவும் கடினமாகும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2ம் இன்னிங்சில் 174 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
செஞ்சூரியன்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, மூன்றாம் நாள் முடிவில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய இந்தியா, உணவு இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 174 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 34 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, மார்கோ ஜான்சென் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாடி வருகிறது. நாளை ஒருநாள் ஆட்டம் மீதமுள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத நிலையில், இந்த இலக்கை தென் ஆப்பிரிக்கா எட்டிப்பிடிப்பது சாத்தியம் இல்லை. மழை பெய்தால் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்படலாம்.
இரண்டாவதாக பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு சுலைமான் கான் என பெயரிட்டுள்ளனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான். இவர், மாடல் அழகியான சஃபா பாயிக் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இர்பான் கான் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். தற்போது அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு சுலைமான் கான் என பெயரிட்டுள்ளனர். குழந்தையை கையில் ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை பகிர்ந்த இர்பான் பதான், குழந்தையும், மனைவியும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி பெறுவது சிறந்த பழக்கம். ஆரோக்கியமாக இருக்க அனைவரும் விளையாடுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் திருப்பதியில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட உள்ளது.
இதில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணி என 40 அணிகள் பங்கு பெறுகின்றன. வருகிற 5-ந் தேதி போட்டி தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது.
போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், போட்டிகள் நடைபேற இருக்கும் இந்திரா மைதானத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இது நம் அனைவருக்கும் ஒரு திருவிழா போன்றது.
கபடி என்பது நமது மாநில அரசால் அதிகாரபூர்வ விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி பெறுவது சிறந்த பழக்கம். ஆரோக்கியமாக இருக்க அனைவரும் விளையாடுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
நாட்டிலேயே எந்த மாநகராட்சியிலும் நடைபெறாத வகையில் திருப்பதியில் முதன் முதலாக கபடி போட்டியை நடத்துவது நமது திருப்பதியின் அதிர்ஷ்டமாக கருதுவதாக தெரிவித்தனர்.
இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் சிலை நிறுவப்பட்டுள்ளது என மந்திரி தெரிவித்துள்ளார்.
கால்பந்து என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடற்தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவாவில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இந்தியாவை கிரிக்கெட் ஆக்கிரமித்த போதிலும், இங்கு கால்பந்து விளையாட்டுக்கு இன்னும் மவுசு குறையவில்லை.

இந்த நிலையில் கோவா மாநிலம் பனாஜியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரமாண்ட சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா மாநில மந்திரி மைக்கேல் லோபோ கூறுகையில் ‘‘இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை கோவா மாநிலம், இந்தியாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

நம்முடைய குழந்தைகள் இதுபோன்ற உலகளவிலான ஜாம்பவான்கள் போன்று வர வேண்டும் என விரும்புகிறோம்’’ என்றார்.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு:
8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி, புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. இதில் 38-26 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.டோனி இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
கேப் டவுன்:
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவர் பேட்ஸ்மேனை 101 முறை (93 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 26 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார்.
முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ் டோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து படுதோல்வி - வாகனுக்கு பதிலடி கொடுத்த வாசிம் ஜாபர்
இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மேலும், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்னும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பின்னடைவை சந்திக்கும் போதெல்லாம் கடுமையாக விமர்சிக்கும் போக்கை கடைபிடித்து வந்தவர் வாகன்.
கடந்த 2019-ல் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இன்றைய காலகட்டத்தில் ஒரு அணி 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாவதை நம்ப முடியவில்லை என அப்போது வாகன் டுவிட் செய்திருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின்பழைய டுவிட் ஒன்றை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாசிம் ஜாபர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜாபரின் இந்த டுவிட் சுமார் 83 ஆயிரம் லைக்குகளை கடந்து வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா தரப்பில் முகமது சமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
செஞ்சுரியன்:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, மூன்றாம் நாள் முடிவில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணி வீரர்கள் தேம்பா பவுமா 52 ரன்கள், டி காக் 34 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தரப்பில் முகமது சமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணி 130 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
பும்ராவுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
செஞ்சுரியன்:
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய வீரர்கள் சார்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த போட்டியில் பந்துவீச்சின் போது இந்திய வீரர் பும்ராவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவ குழு பரிசோதித்து வருகிறது. பும்ராவுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
செஞ்சுரியன்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 60 ரன் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரோகேஷ் ராகுல் சதம் எடுத்து அசத்தினார். இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் நேற்று ரத்தானது.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெரிதும் எதிர்பார்த்த ரிஷப் பண்ட் 4 ரன்கள், ஷர்துல் தாகூர் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கவுள்ளது.
சவுரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கங்குலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
சவுரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கங்குலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
சவுரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கங்குலி குடும்பத்தினர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






