என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்கில் இரண்டு அணிகளைச் சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 5-ந்தேதி இத்தொடர் தொடங்கியது.  உருமாற்றம் அடைந்த ஒமைக்கரான் வைரஸ் அச்சுறுத்தல் இருந்த போதிலும், பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் பாதுகாப்பான வகையில் இருந்த வண்ணம் விளையாடி வந்தனர்.

    இந்த நிலையில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த 4 வீரர்களுக்கும், மெல்போர்ன் ஸ்டார்ஸ அணியைச் சேர்ந்த 7 வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்போர்ட் ஸ்டாஃப் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இன்று அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்- சிட்னி தண்டர்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. சிட்னி தண்டர்ஸ் அணியின் நான்கு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இன்றும் போட்டி நடைபெறுமா? என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

    இதனால் தொடர் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 113 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி  தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த ஓய்வு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டெஸ்ட் போட்டிகளில் 3,300 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5,355 ரன்களும், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1,827 ரன்களும் குவித்துள்ளார்.

    குயின்டன் டி காக்கின் மனைவி சாஷாவுக்கு  விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. எனவே அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறார். இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, அதிக வெற்றி பெற்ற அணியாக இருந்தாலும் 4-வது இடத்தில்தான் உள்ளது.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

    இந்தியா இதுவரை 3 டெஸ்ட் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. இரண்டில் டிரா செய்துள்ளது. இதன்மூலம் 54 புள்ளிகள் பெற்றுள்ளது. இரண்டு புள்ளிகள் பெனால்டி மூலம் இழந்தது. வெற்றி சாராசரி 64.28 ஆகும். இதனால் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அதிக வெற்றி பெற்ற அணிகளில் முதல் இடம் பிடித்தாலும், தரவரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

    டீம் இந்தியா

    ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 100 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இலங்கை 2 போட்டிகளில் வெற்றி பெற்று 100 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 36 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், 75 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளது.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என அழைக்கப்படுகிறது.

    இந்தியா இதற்கு முன் 2018 மற்றும் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் விளையாடியது.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் புஜாரா சதத்தால் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    2-வது இன்னிங்சில் இந்தியா 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 399 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி வீரர்கள்

    கடந்த ஆண்டு (2020) ரகானோ தலைமையில் இந்திய அணி ‘பாக்சிங் டே’ டெஸ்டில் மெர்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் ரகானே சதம் அடிக்க இந்தியா 326 ரன்கள் குவித்தது.

    பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 200 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 70 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 2 விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இன்றுடன் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து மூன்று ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
    துபாயில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
    சார்ஜா:

    19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாயிக் ரஷீத் 90 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மஹ்பிஜுல் இஸ்லாம் (26), ஆரிபுல் இஸ்லாம் (42) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 38.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 140 ரன்களில் சுருண்டது.

    இதனால் இந்திய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் நாளை நடக்கிறது.
    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    செஞ்சூரியன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123 ரன்களும் மயங்க் அகர்வால் 60 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்னில் சுருண்டது. அதிகப்பட்சமாக பவுமா 52 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
     
    130 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ரி‌ஷப்பண்ட் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். ரபடா, மார்கோ ஜான்சென் தலா 4 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    305 ரன் இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. கேப்டன் எல்கர் 52 ரன்னுடன் களத்தில் இருந்தார். பும்ரா 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பும்ராவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் (77) ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்த வந்த டி காக்(21) சிராஜ் பந்து வீச்சிலும் முல்டர் (1) சமி பந்து வீச்சிலும் வெளியேறினார். 

    உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிகா அணி 182 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து ஆடி வந்தது. பவுமா 34 ரன்னிலும் ஜன்சன் 5 ரன்னில் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை முடிந்த சிறிது நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஒரே ஓவரில் அஸ்வின் கடைசி 2 (ரபாடா நிகிடி) விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. 
    ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் கேப்டன் பதவியில் நீட்டிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி குரூப் ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

    தமிழக அணி ‘டி’ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ரெயில்வே, கோவா, ஜார்கண்ட் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் கேப்டன் பதவியில் நீட்டிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இளம் பேட்ஸ்மேன் சாய் சுதர்‌ஷன், ஆல்ரவுண்டர் சரவணகுமார், வேகப்பந்து வீரர் ஆர்.சிலம்பரசன் ஆகிய புதுமுக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    விஜய்சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், பாபா அபராஜித், ஜெகதீசன், ஷாருக்கான், சாய் சுதர்சன், ரஞ்சன் பவுல், சூரிய பிரகாஷ், கவுசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர்ராஜூ, சந்தீப் வாரியர், எம்.முகமது, சிலம்பரசன், சரவணகுமார், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், கவின்.
    ராஸ் டெய்லர் இதுவரை 445 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 18,074 ரன்கள் எடுத்துள்ளார். 40 சதங்களை விளாசியுள்ளார்.
    வெல்லிங்டன்:

    பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

    வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான நியூசிலாந்தின் டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான நியூசிலாந்தின் ஒருநாள் தொடருக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

    37 வயதாகும் ராஸ் டெய்லர் இதுவரை 445 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 18,074 ரன்கள் எடுத்த அவர் 40 சதங்களை விளாசியுள்ளார். மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையையும் ராஸ் டெய்லர் பெற்றுள்ளார்.
    செஞ்சூரியனில் இன்று பிற்பகலில் மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    செஞ்சூரியன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங் சில் 197 ரன்னில் சுருண்டது.

    130 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ரி‌ஷப்பண்ட் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். ரபடா, மார்கோ ஜான்சென் தலா 4 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    305 ரன் இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. கேப்டன் எல்கர் 52 ரன்னுடன் களத்தில் உள்ளார். பும்ரா 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் எஞ்சிய 6 விக்கெட்டை கைப்பற்றினால் இந்தியா வெற்றி பெறும். தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு மேலும் 211 ரன் தேவை. கைவசம் 6 விக்கெட் உள்ளது.

    இந்த டெஸ்ட் பரபரப்பான நிலையில் இருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்திய வேகப்பந்து வீரர்கள் மிக சிறப்பாக வீசி வருகிறார்கள்.

    முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோர் நேர்த்தியுடன் பந்து வீசி வருவதால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மழையால் பாதிக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. செஞ்சூரியனில் இன்று பிற்பகலில் மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதனால் சில மணி நேரங்களே போட்டி நடைபெறலாம். அதற்குள் இந்திய பவுலர்கள் எஞ்சிய விக்கெட்டுகளை கைபற்றினால் வெற்றி பெறலாம். ஏற்கனவே 2-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டு இருந்தது.

    இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அந்த அணியின் வேகப்பந்து வீரர் ரபடா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “எங்கள் அணியின் கேப்டன் எல்கர் களத்தில் இருப்பதால் எங்களுக்கு இன்னும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார். 
    கங்குலியின் உடல்நிலையை மருத்துவ குழு உன்னிப்பாக கண்காணிக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான 49 வயதான சவுரவ் கங்குலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ருபாலி பாசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கங்குலியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. காய்ச்சல் இல்லை. ஆக்சிஜன் அளவு 99 சதவீதம் இருக்கிறது. முந்தைய நாள் இரவில் நன்றாக தூங்கினார். காலை, மதிய வேளையில் உணவு சாப்பிட்டார். மருத்துவ குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

    கங்குலிக்கு ஏற்பட்டுள்ள தொற்று ஒமைக்ரான் வைரசா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
    பிக்பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் அணிக்கு எதிரான போட்டியில் சிட்னி வீரர் அபாட் பந்து வீச்சில் 4 விக்கெட்டும், பேட்டிங்கில் 37 ரன்னும் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    சிட்னி:

    பிக்பாஷ் லீக் 2021 போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    சிட்னியில் நேற்று நடந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 19.1 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜேக் வில்டர்மூத் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.

    சிட்னி சிக்சர்ஸ் சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஹைடன் கெர், பென் வார்ஷுஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது. ஆனால் பிரிஸ்பேன் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சிட்னி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    சிட்னி அணி 47 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 9வது விக்கெட்டுக்கு இறங்கிய பந்துவீச்சாளர்கள் அபாட்டும், வார்ஷும் நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், சிட்னி அணி 20வது கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து வென்றது. அபாட் 37 ரன்னும், வார்ஷுஸ் 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    நேற்று நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
    பெங்களூரு:

    8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

    ஆட்டத்தின் தொடக்கம் முதல் டெல்லி அணி சிறப்பாக ஆடியது. இறுதியில், தபாங் டெல்லி அணி 52 - 35 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 
    ×