என் மலர்
விளையாட்டு

பிக் பாஷ் லீக்
11 வீரர்களுக்கு கொரோனா: சிக்கலில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்கில் இரண்டு அணிகளைச் சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 5-ந்தேதி இத்தொடர் தொடங்கியது. உருமாற்றம் அடைந்த ஒமைக்கரான் வைரஸ் அச்சுறுத்தல் இருந்த போதிலும், பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் பாதுகாப்பான வகையில் இருந்த வண்ணம் விளையாடி வந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த 4 வீரர்களுக்கும், மெல்போர்ன் ஸ்டார்ஸ அணியைச் சேர்ந்த 7 வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்போர்ட் ஸ்டாஃப் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்- சிட்னி தண்டர்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. சிட்னி தண்டர்ஸ் அணியின் நான்கு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இன்றும் போட்டி நடைபெறுமா? என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.
இதனால் தொடர் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... அபாட் பொறுப்பான ஆட்டம் - பிக்பாஷ் லீக்கில் பிரிஸ்பேனை வீழ்த்தியது சிட்னி
Next Story






