என் மலர்
விளையாட்டு

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அபாட்
அபாட் பொறுப்பான ஆட்டம் - பிக்பாஷ் லீக்கில் பிரிஸ்பேனை வீழ்த்தியது சிட்னி
பிக்பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் அணிக்கு எதிரான போட்டியில் சிட்னி வீரர் அபாட் பந்து வீச்சில் 4 விக்கெட்டும், பேட்டிங்கில் 37 ரன்னும் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
சிட்னி:
பிக்பாஷ் லீக் 2021 போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
சிட்னியில் நேற்று நடந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 19.1 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜேக் வில்டர்மூத் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.
சிட்னி சிக்சர்ஸ் சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஹைடன் கெர், பென் வார்ஷுஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது. ஆனால் பிரிஸ்பேன் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சிட்னி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
சிட்னி அணி 47 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 9வது விக்கெட்டுக்கு இறங்கிய பந்துவீச்சாளர்கள் அபாட்டும், வார்ஷும் நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், சிட்னி அணி 20வது கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து வென்றது. அபாட் 37 ரன்னும், வார்ஷுஸ் 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையும் படியுங்கள்...4ம் நாள் ஆட்ட முடிவில் 94/4 - தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 211 ரன்கள் தேவை
Next Story






