search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மழையால் பாதிக்குமா?

    செஞ்சூரியனில் இன்று பிற்பகலில் மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    செஞ்சூரியன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங் சில் 197 ரன்னில் சுருண்டது.

    130 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ரி‌ஷப்பண்ட் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். ரபடா, மார்கோ ஜான்சென் தலா 4 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    305 ரன் இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. கேப்டன் எல்கர் 52 ரன்னுடன் களத்தில் உள்ளார். பும்ரா 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் எஞ்சிய 6 விக்கெட்டை கைப்பற்றினால் இந்தியா வெற்றி பெறும். தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு மேலும் 211 ரன் தேவை. கைவசம் 6 விக்கெட் உள்ளது.

    இந்த டெஸ்ட் பரபரப்பான நிலையில் இருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்திய வேகப்பந்து வீரர்கள் மிக சிறப்பாக வீசி வருகிறார்கள்.

    முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோர் நேர்த்தியுடன் பந்து வீசி வருவதால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மழையால் பாதிக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. செஞ்சூரியனில் இன்று பிற்பகலில் மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதனால் சில மணி நேரங்களே போட்டி நடைபெறலாம். அதற்குள் இந்திய பவுலர்கள் எஞ்சிய விக்கெட்டுகளை கைபற்றினால் வெற்றி பெறலாம். ஏற்கனவே 2-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டு இருந்தது.

    இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அந்த அணியின் வேகப்பந்து வீரர் ரபடா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “எங்கள் அணியின் கேப்டன் எல்கர் களத்தில் இருப்பதால் எங்களுக்கு இன்னும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார். 
    Next Story
    ×