என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்களுக்கு சுருண்டது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்டான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 50 ரன் எடுத்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 267 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இது இங்கிலாந்து அணியை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க வீரர் ஹாரிஸ் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்து 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டு, ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், ஜேக் லீச் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சில் இங்கிலாந்து திணறியது.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றும் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தி விக்கெட் வேட்டையை நடத்தினர். இதனால் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்தன.
இறுதியில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்னுக்கு சுருண்டது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர், மற்றவர்கள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஆஷஸ் தொடரில் 3-0 என கைப்பற்றி அசத்தியது.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4 ஓவர் வீசி வெறும் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டு வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள்...ஜூனியர் ஆசிய கோப்பை - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஹர்னூர் சிங், ரகுவன்ஷி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தது.
துபாய்:
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இஜாஸ் அகமது 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சுலைமான் சபி 73 ரன்னுடன் அவுட்டானார்.
இந்தியா சார்பில் ராஜ்வர்தன் , கௌஷல் தாம்பே , விக்கி மற்றும் ராஜ் பாவா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹர்னூர் சிங் - ரகுவன்ஷி ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஹர்னூர் சிங் 65 ரன்களும் , ரகுவன்ஷி 35 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின், ஜோடி சேர்ந்த ராஜ் பாவா, கௌஷல் தாம்பே ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையும் படியுங்கள்...புரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ், யு மும்பா இடையிலான போட்டி டிரா
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் அணி உ.பி. அணியை வீழ்த்தியது.
பெங்களூரு:
8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து போட்டியை சமனில் முடித்தது. இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 30-38 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, யு மும்பா அணியை எதிர்கொண்டது. இதில் 30-30 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
இரவு 8.30 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஜெய்ப்பூர் அணி 32-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி பெற்ற 2வது வெற்றி இதுவாகும்.
செஞ்சூரியனில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
செஞ்சூரியன்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 60 ரன் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரோகேஷ் ராகுல் சதம் எடுத்து அசத்தினார்.
புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் கேப்டன் விராட் கோலி 35 ரன்னிலும் அவுட்டானார்கள். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 90 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும், ரகானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆடுகளம் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டது. மைதானத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்றது. ஆனால், விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
2-வது நாள் ஆட்டம் முடிந்ததும் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் யாருக்காவது தொற்று உறுதியானால் மாற்று வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மெல்போர்னில் நடந்து வரும் ஆஷஸ் தொடரின்3-வது டெஸ்டின் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் உதவியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 2 குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பு உள்ளது.
இதையடுத்து வீரர்கள் அனைவரும் ஓட்டலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. அதே போல் மற்ற அணி உதவியாளர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது.
இதையடுத்து இன்றைய 2-வது நாள் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. இன்று போட்டி முடிந்ததும் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் யாருக்காவது தொற்று உறுதியானால் மாற்று வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 50 ரன் எடுத்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார்.
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 16 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து இருந்தது.
தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 20 ரன்னிலும், நாதன் லயன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
ஹாரிசும், லயனும் தொடர்ந்து விளையாடினர். லயன் 10 ரன்னிலும், அடுத்து வந்த லபுஸ்சேன் ஒரு ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 16 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா 110 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. விக்கெட் சரிந்தாலும் தொடக்க வீரர் ஹாரிஸ் பொறுப்புடன் விளையாடினார். அவர் அரை சதம் அடித்தார்.
ஹாரிஸ்-டிரெவிஸ் ஹெட் ஜோடி நிதானமாக விளையாடியது. ஹெட் 27 ரன்னிலும், ஹாரிஸ் 76 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்து இருந்தது.
தேனீர் இடைவெளியின்போது ஆஸ்திரேலியா 71 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்து இருந்தது. கேமரூன், கிரீன் 12 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 9 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் கீரின் 17 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 19 ரன்னிலும் கம்மின்ஸ் 21 ரன்னிலும், ஸ்காட் போலண்ட் 6 ரன்னிலும் வெளியேறினார். ஸ்டார்க் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும் ராபின்சன் 2 விக்கெட்டும் மார்க் வுட் 2 விக்கெட்டும் ஸ்ரோக்ஸ், ஜக் லீச் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி கூறியுள்ளார்.
செஞ்சூரியன்:
இந்தியா-தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியன் நகரில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்த இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 60 ரன் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரோகேஷ் ராகுல் சதம் எடுத்து அசத்தினார்.
புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் கேப்டன் விராட் கோலி 35 ரன்னிலும் அவுட்டானார்கள். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 90 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்து இருந்தது.
லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும், ரகானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று மதியம் 1.30 மணிக்கு 2-வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.
இந்தியாவின் 3 விக்கெட்களையும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி கைப்பற்றினார். இந்த நிலையில் இந்தியாவை 350 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் என்று நிகிடி கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு செஷனில் நீங்கள் வெற்றி பெறலாம். தோல்வியும் அடையலாம். ஒட்டு மொத்தமாக இது கிரிக்கெட்டின் நல்ல நாளாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் இன்னும் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அது விரைவாக நடக்கலாம். இந்திய அணியை 350 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடிந்தால் போட்டியை மாற்ற முடியும்.அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
இந்த ரன்னுக்குள் இந்தியாவை ஆல்அவுட் செய்துவிட்டால் எங்களுக்கு நன்றாக இருக்கும். ஆடுகளம் நாங்கள் நினைத்தை விட குறைவாகவே சாதகமாக இருந்தது. இந்திய வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன். அது நடக்காத போது நீங்கள் வெளிப்படையாக உங்கள் திட்டங்களை மாற்றி வேறு விதமாக முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செஞ்சூரியன் டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மேலும் ரன்களை குவித்து பெரிய ஸ்கோரை எடுக்க இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார்.
செஞ்சுரியன்:
இந்தியா- தென்., ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.
கே எல் ராகுல் 110 ரன்கள், ரஹானே 26 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
குறைந்த வெளிச்சத்தின் காரணமாக விஜேடி முறையின் அடிப்படையில் இமாசல பிரதேச அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் 2021-2022 ஆண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு, இமாசல பிரதேசம் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 116 ரன்கள் எடுத்தார்.
இதை தொடர்ந்து 50 ஓவர்களில் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இமாசல பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக விஜேடி முறையின் அடிப்படையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் முதல்முறையாக விஜய் ஹசாரே கோப்பையை இமாசல பிரதேசம் வென்றுள்ளது.
செஞ்சுரியனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விராட் கோலி, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தென்ஆப்பிரிக்காவின் ரபடா, லுங்கி நிகிடி, ஜான்சென், முல்லர் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர்.

இந்த ஜோடியை தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் முதல்நாள் ஆட்டம் உணவு இடைவேளை வரை இந்தியா 28 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 84 பந்தில் 46 ரன்களும், கே.எல். ராகுல் 84 பந்தில் 29 ரன்களும் அடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.
செஞ்சூரியன்:
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்
தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, குயின்டான் டி காக், வியான் முல்டர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி, ஜன்சின்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 2021 டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது.
இந்த நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் மெர்போர்னில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டிலும் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நான்கு மாற்றங்களுடன் இங்கிலாந்து களம் இறங்கியது. என்றாலும் பலன் அளிக்கவில்லை.
தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹசீப் ஹமீத் டக்அவுட் ஆனது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் 50-வது டக்அவுட் இதுவாகும்.






