search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெல்போர்ன் டெஸ்ட்"

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
    • 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையே மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் 8 ரன்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.

    • பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர்.
    • கம்மின்ஸ் 5 விக்கெட்டும், லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தி பாகிஸ்தான் கட்டுப்படுத்தினர்.

    மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் (1), சாத் ஷஹீல் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வான் 29 ரன்களுடனும், ஆமிர் ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் மேலும் 13 ரன்கள் சேர்த்து 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

    • 2-வது நாளில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்.
    • 30.5 ஓவரில் 131 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போரன் மைதானத்தில் "பாக்சிங் டே" டெஸ்டாக நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் (38), கவாஜா (42) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

    மழைக்காரணமாக நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி ஆட்டம் தடைபட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா 66 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 44 ரன்களுடனும், டிராவிட் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லபுசேன் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கடைநிலை வீரர்கள் அலேக்ஸ் கேரி (4), ஸ்டார்க் (9), கம்மின்ஸ் (13), லயன் (8) அடுத்தடுத்து ஆட்மிழந்தனர். மிட்செல் மார்ஷ் 41 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 318 ரனனில் ஆல்அவுட் ஆனது.

    இன்று 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 131 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆமிர் ஜமால் 3 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணி 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.

    • பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மெல்போர்ன் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் பார்க்க முடியும்.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் கடந்த 14-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் பாக்சிங் டெஸ்டாக டிசம்பர் 26-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கம்மின்ஸ், 2. ஸ்காட் போலந்து, 3. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), 4. ஹேசில்வுட், 5. டிராவிஸ் ஹெட், 6. உஸ்மான் கவாஜா, 7. லபுசேன், 8. நாதன் லயன், 9. மிட்செல் மார்ஷ், 10. ஸ்டீவ் சுமித், 11. மிட்செல் ஸ்டார்க், 12. டேவிட் வார்னர், 13. கேமரூன் க்ரீன்.

    மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியும். கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான 26-ந்தேதி மைதானம் ரசிகர்களால் முழுமையான நிறைந்திருக்கும்.

    ×