என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
மெல்போர்ன் பாக்சிங் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 264 ரன்னில் ஆல்அவுட்
- பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர்.
- கம்மின்ஸ் 5 விக்கெட்டும், லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தி பாகிஸ்தான் கட்டுப்படுத்தினர்.
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் (1), சாத் ஷஹீல் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வான் 29 ரன்களுடனும், ஆமிர் ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் மேலும் 13 ரன்கள் சேர்த்து 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.