என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆண்டர்சன்
    X
    ஆண்டர்சன்

    பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 267 ரன்னில் ஆல் அவுட்

    பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 50 ரன் எடுத்தார்.

    ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 16 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து இருந்தது.

    தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 20 ரன்னிலும், நாதன் லயன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    ஹாரிசும், லயனும் தொடர்ந்து விளையாடினர். லயன் 10 ரன்னிலும், அடுத்து வந்த லபுஸ்சேன் ஒரு ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 16 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா 110 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. விக்கெட் சரிந்தாலும் தொடக்க வீரர் ஹாரிஸ் பொறுப்புடன் விளையாடினார். அவர் அரை சதம் அடித்தார்.

    ஹாரிஸ்-டிரெவிஸ் ஹெட் ஜோடி நிதானமாக விளையாடியது. ஹெட் 27 ரன்னிலும், ஹாரிஸ் 76 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்து இருந்தது.

    தேனீர் இடைவெளியின்போது ஆஸ்திரேலியா 71 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்து இருந்தது. கேமரூன், கிரீன் 12 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 9 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் கீரின் 17 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 19 ரன்னிலும் கம்மின்ஸ் 21 ரன்னிலும், ஸ்காட் போலண்ட் 6 ரன்னிலும் வெளியேறினார். ஸ்டார்க் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும் ராபின்சன் 2 விக்கெட்டும் மார்க் வுட் 2 விக்கெட்டும் ஸ்ரோக்ஸ், ஜக் லீச் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×