என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில் அதிக விக்கெட் எடுத்தவர் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. அவர் 619 விக்கெட்டுகளை (132 போட்டி) கைப்பற்றி உள்ளார்.

    2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் (131 போட்டி) உள்ளார். 3-வது இடத்தில் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உள்ளார். அவர் இதுவரை 81 போட்டிகளில் 427 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    இதற்கு அவருக்கு இன்னும் 8 விக்கெட்டுகளே தேவை. இதன் மூலம் அவர் கபில்தேவை முந்த முடியும். அதே வேளையில் தென் ஆப்பிரிக்கா மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வினின் சுழற்பந்து எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
    பேட் கம்மின்ஸ் வேகத்தையும், நாதன் லயன் சுழற்பந்தையும் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 185 ரன்னில் சுருண்டது.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. மெல்போர்னில் டாஸ் வென்ற அணி எப்போதும் பேட்டிங்கை தேர்வு செய்யும். ஆனால் இன்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட் கம்மினஸ் தவறு செய்து விட்டாரோ என கருதப்பட்டது. ஆனால், இங்கிலாந்து செய்த பேட்டிங் விதம் அவரது முடிவு சரியாக அமைந்துள்ளது.

    ஹசீப் ஹமீத், ஜாக் கிராவ்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 10 பந்துகளை சந்தித்த ஹமீத் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.  ஜாக் கிராவ்லி 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த தாவித் மலன் 14 ரன்னில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் சாய்த்தார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆஸ்திரேலிய வீரர்கள்

    ஜோ ரூட் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார்.  உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 33 ரன்னில் இருந்து அரைசதம் அடித்தார்.  ஜோ ரூட் சரியாக அரைசதம் அடித்த நிலையில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ 25 ரன்னிலும், பட்லர் 3 ரன்னிலும் வெளியேற இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் பேர்ஸ்டோவ் 35 ரன்களும், ராபின்சன் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 65.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 185 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சைவிட எங்களது பந்துவீச்சு நிச்சயம் அனுபவம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என இந்திய பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.
    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் வல்லுனர்களாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் சில நேரங்களில் நீங்கள் வீரர்களுடன் கடினமான உரையாடல்களை நடத்த வேண்டும்.

    போட்டியில் 11 பேர் மட்டுமே விளையாட முடியும். எல்லோரும் விளையாடுவது என்பது கடினமானது. ஒரு வீரரிடம் நீங்கள் விளையாடவில்லை என்று கூறுவது கடினமாக இருக்கும்.

    பெரும்பாலான மூத்த வீரர்கள் முதல் தர அணிகளுக்கு கேப்டனாக இருந்தபோதும் அல்லது தலைமைக் குழுவில் ஒரு பதவியில் இருந்தபோதும் கடுமையான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் சூழ்நிலைகளை புரிந்துகொள்கிறார்கள்.

    ஒரு கடினமான முடிவு எடுக்கப்பட்டால் ஒரு வீரர் அதை சரியான மனநிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த வீரரும் வெளியில் உட்கார்ந்திருக்க விரும்ப மாட்டார். ஆனால் உட்கார்ந்திருக்கும்போது அதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அதற்கு எப்படி நீங்கள் பதில் அளிக்கிறீர்கள்? என்பது உங்கள் அணுகுமுறையின் ஒரு சோதனையாகும்.

    என்னிடம் எந்த புகாரும் வரவில்லை. அணி தேர்வு பற்றி எல்லோரும் அருமையாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். எங்கள் அணி தரம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆடும் லெவனை பற்றி நாங்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஏமாற்றமடைந்து முடிவுகளை எடுக்க மாட்டோம்.

    சுற்றுப்பயணத்துக்கான தேர்வு குழுவுக்குள் நாங்கள் மிகவும் நல்ல உரையாடல்களை நடத்தி உள்ளோம். மேலும் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும் 11 பேர் கொண்ட அணி என்று நாங்கள் கருதுவது பற்றி சில ஆரோக்கியமான விவாதங்களை நடத்தி உள்ளோம்.

    தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சைவிட எங்களது பந்துவீச்சு நிச்சயம் அனுபவம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு பலகீனமானது என்று கூறுவது தவறானது. அவர்களை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

    எங்கள் பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு உதவும் வகையான ஸ்கோரை நாங்கள் எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் போராட வேண்டிய காலம் இருக்கும்.

    நான் தனிப்பட்ட திறமையை விரும்புகிறேன். ஆனால் கூட்டு முயற்சி மட்டுமே தொடரை வெல்ல உதவும்.

    இவ்வாறு டிராவிட் கூறினார். 
    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் இந்தியாவை தோற்கடித்தது.
    துபாய்:

    9-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இந்திய அணி துபாயில் நேற்று நடந்த தனது லீக்கில் பாகிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதில் கேப்டன் யாஷ் துல் டக்-அவுட் ஆனதும் அடங்கும்.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் (46 ரன்) மற்றும் பின்வரிசையில் விக்கெட் கீப்பர் ஆரத்யா யாதவ் (50 ரன்), ராஜ்வர்தன் (33 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடி அணியை சவாலான நிலைக்கு உயர்த்தினர். இந்திய அணி 49 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜீசன் ஜமீர் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அவர்கள் ‘எக்ஸ்டிரா’ வகையில் இந்தியாவுக்கு 19 வைடு உள்பட 30 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

    தொடர்ந்து 238 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. அதிகபட்சமாக முகமது ஷேசாத் 81 ரன்கள் (4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ரன்-அவுட் ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரவிகுமார் வீசினார். முதல் 5 பந்துகளில் அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியதோடு 6 ரன்களை வழங்கினார். இதனால் கடைசி பந்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. இறுதி பந்தை எதிர்கொண்ட அகமத் கான் (29 நாட்-அவுட்) பவுண்டரிக்கு விரட்டி தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித் தந்தார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.

    இன்றைய ஆட்டத்தில் நேபாளம்- இலங்கை அணிகள் சந்திக்கின்றன.
    இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே நாடு தென்ஆப்பிரிக்கா தான். 7 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.
    செஞ்சூரியன்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி அரங்கேறுகிறது.

    இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே நாடு தென்ஆப்பிரிக்கா தான். 7 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வெறுங்கையுடன் திரும்பிய இந்திய அணி கடைசியாக 2018-ம் ஆண்டில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்திருந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்திய இந்திய அணி தென்ஆப்பிரிக்க மண்ணிலும் மோசமான வரலாற்றை மாற்றி காட்டுமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்திய அணி சமீபத்தில் உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்துடன் வந்துள்ளது. ஆனால் தென்ஆப்பிரிக்காவில் சவாலே வேகப்பந்து வீச்சு தான்.

    பொதுவாக இங்குள்ள புல்தரை ஆடுகளங்களில் பந்து அதிவேகத்தில் எகிறும். உயிரோட்டமான இத்தகைய ஆடுகளத்தில் பந்தின் நகரும் தன்மைக்கு (ஸ்விங்) ஏற்ப கணித்து செயல்பட வேண்டும். நெஞ்சு அளவுக்கு எழும்பி வரும் பந்துகளையோ அல்லது ஆப்-ஸ்டம்புக்கு சற்று வெளியே சீறும் பந்துகளையோ சரியாக எதிர்கொள்ள தவறினால் அது பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப் பகுதியில் நிற்கும் பீல்டர்களின் கைக்கு சென்று விடும். அதனால் பேட்ஸ்மேன்கள் அவசரமின்றி நிலைத்து நின்று ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காஜிசோ ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியரின் தாக்குதலை சாதுர்யமாக சமாளித்து விட்டால் கணிசமாக ரன்கள் குவித்து விடலாம்.

    இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் இறங்குவார்கள். கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி விவகாரத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியை சர்ச்சைக்குள் இழுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதமும் அடிக்காத அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    அறிமுக டெஸ்டிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசி சாதனை படைத்ததால் மூத்த வீரர் அஜிங்யா ரஹானேவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

    பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணி 4 வேகம், ஒரு சுழல் என்று 5 பவுலர்களுடன் களம் காண திட்டமிட்டுள்ளது. 4-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குரின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது. இந்திய அளவில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள கபில்தேவின் (434 விக்கெட்) சாதனையை முறியடிக்க சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட் தேவைப்படுகிறது. இந்த தொடரில் கபில்தேவை அவர் முந்தி விடுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், கேப்டன் டீன் எல்கர், வான்டெர் துஸ்சென் ஆகியோரையே மலைபோல் நம்பி உள்ளது. ஆனால் தென்ஆப்பிரிக்காவின் பிரதான பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான். காஜிசோ ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியர் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூரில் தென்ஆப்பிரிக்கா எப்போதும் பலம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

    இருப்பினும் அந்த அணியில் தற்போது முன்னணி வீரர்கள் பலர் இல்லை. 2018-ம் ஆண்டில் விளையாடிய போது இருந்த டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ், அம்லா, மோர்னே மோர்கல், பிலாண்டர், ஸ்டெயின் உள்ளிட்டோர் ஓய்வு பெற்று விட்டனர். இது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதைவிட அங்கு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சரியான சந்தர்ப்பம் அமையாது. கடந்த முறை 3 டெஸ்டிலும் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றது. அதனால் நடப்பு தொடரிலும் வெற்றியை தீர்மானிப்பதில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

    தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் இங்கு உட்கார்ந்து கொண்டு அவர்களை (இந்தியா) உலகின் சிறந்த அணி இல்லை என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். அதே சமயம் இன்னொரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். உள்ளூர் சூழலில் நிச்சயம் எங்களது கையே கொஞ்சம் ஓங்கி நிற்கும்’ என்றார்.

    போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானம் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி கோட்டையாகும். இங்கு தென்ஆப்பிரிக்கா 26 டெஸ்டுகளில் விளையாடி 21-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), 3-ல் டிராவும் கண்டுள்ளது. எந்த ஆசிய அணியும் இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது கிடையாது. இந்திய அணி இங்கு விளையாடியுள்ள இரு டெஸ்டுகளிலும் தோல்வியையே தழுவியது.

    ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியம் என்று வர்ணிக்கப்பட்ட பிரிஸ்பேன் மைதானத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்து வரலாறு படைத்தது. அதே போல் செஞ்சூரியனில் தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துக்கு இந்தியா முட்டுக்கட்டை போடுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    போட்டியின் போது, முதல் இரு நாட்களில் மட்டும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது இஷாந்த் ஷர்மா.

    தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, குயின்டான் டி காக், வியான் முல்டர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியர்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகித்து வருகிறது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்டான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.

    மழை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை செய்துள்ளார். இதன்படி ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தொடங்க உள்ளது. 

    இங்கிலாந்து அணி வீரர்கள்:

    ஜோ ரூட் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாக் கிராவ்லி, பேர்ஸ்டோ, ஹசீப் ஹமீது, ஜாக் லீச், டேவிட் மலான், ஆலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: 

    டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்  (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஸ்காட் போலண்ட்.

    நேற்றிரவு நடந்த திரிலிங்கான ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 34-33 புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
    பெங்களூரு:

    12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

    நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா,  முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. இதில் உ.பி. யோத்தா அணி 36-35 புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுக்கு அதிர்ச்சி அளித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 34-33 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை புனேரி பால்டன் அணி வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
    உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது தங்கள் அணிக்கு கூடுதல் பலம் என்று தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
    செஞ்சுரியன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த போட்டி தொடர் இரு அணிகளுக்கும் இடையே எதிர்பார்ப்பு மற்றும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். செஞ்சுரியனில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    சர்வதேச அளவில் அவர்கள் முதலிடத்தில் இருக்கலாம். நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  சில நேரங்களில் அவர்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  ஒரு கிரிக்கெட் பார்வையாளராக இதை தெரிவிக்கிறேன்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலைவர் டீன் எல்கர்

    கடைசி போட்டிகளில் அவர்கள் செயல்பட்டதை வைத்து அவர்களது திறமையை மதிப்பிட கூடாது. நாங்கள் எங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறோம். இந்த தொடர் முழுவதும் அது எங்கள் அணிக்கு கூடுதல் பலம்.

    இந்தியாவின் வெளிநாட்டு பயண வெற்றிக்கு அவர்களது வேகப்பந்து வீச்சு காரணமாக இருக்கலாம்.  தென்னாப்பிரிக்க ஆடுகள தன்மையை அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என கருதுகிறேன்.

    அதேநேரத்தில் அவர்களது பந்து வீச்சாளர்களின் பலத்தை நாங்கள் அறிவோம். இந்த தொடரில் இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தென்னாப்பிரிக்க அணி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தென் ஆப்பிரிக்கா-இந்தியா ஆகிய இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர்களில் அதிக ரன் குவித்தவர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் 25 போட்டியில் 1741 ரன் எடுத்துள்ளார்.
    * இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 39 டெஸ்டில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 14 முறையும், தென்ஆப்பிரிக்கா 15 முறையும் வெற்றி பெற்றன. 10 டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.

    * ஒட்டு மொத்தமாக இரு அணிகள் இடையே 14 டெஸ்ட் தொடர் நடந்துள்ளது. இதில் இந்தியா 4 முறை தொடரை வென்றது. தென்ஆப்பிரிக்கா 7 முறை தொடரை கைப்பற்றியது. 3 டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.

    * டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சமாக ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன் (கொல்கத்தா 2010) ஆகும். தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியாவின் அதிகபட்சமாக ஸ்கோர் 459 ரன் (செஞ்சூரியன் 2010) தென்ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 620 ரன் (செஞ்சூரியன் 2010)

    * இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் 66 ஆகும். 1996-ம் ஆண்டு டர்பனில் நடந்த டெஸ்டில் இந்த ரன்னுக்குள் சுருண்டது. தென்ஆப்பிரிக்காவின் குறைந்தபட்ச கோர் 79 ரன் (நாக்பூர் 2015).

    * இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர்களில் அதிக ரன் குவித்தவர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் 25 போட்டியில் 1741 ரன் எடுத்துள்ளார். அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவில் காலிஸ் 1734 ரன் (18 போட்டி) எடுத்தார்.

    * ஒரு இன்னிங்சில் தனிப்பட்ட வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் வீரேந்திர ஷேவாக். அவர் 2008-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 319 ரன் குவித்தார். அதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலி (254 ரன், 2019 ஆண்டு), ஹசிம் ஆம்லா (253 ரன், 2010) உள்ளனர். அதிக சதம் அடித்தவர்களில் சச்சின் தெண்டுல்கர், காலிஸ் ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.

    காலிஸ்

    * இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இந்தியாவின் அனில்கும்ளே 84 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் 65 விக்கெட்டுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    * ஒரு இன்னங்சில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் தென் ஆப்பிரிக்காவின் குளுஸ்னர். அவர் 1996-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 64 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். அதற்கு அடுத்த படியாக இந்திய வீரர்கள் ஹர்பஜன்சிங், அஸ்வின் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

    * இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு இதுவரை 7 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் 6 முறை டெஸ்ட் தொடரை இழந்தது. 2010-11-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமன் ஆனது.

    * தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா இதுவரை 20 டெஸ்டில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 3 வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 10 வெற்றியை தன்வசமாக்கியது. 7 டெஸ்ட் டிரா ஆனது.
    காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் இடம் பெற்றார்.
    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் சமீபத்திய தொடர்களில் ரன்கள் குவிக்கவில்லை. இதனால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    பந்து வீச்சில் இஷாந்த சர்மா, முகமது சமி, பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அஸ்வின், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் உள்ளனர்.

    காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் இடம் பெற்றார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், துணை கேப்டன் லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்கள்.

    மிடில் ஆர்டர் வரிசையில் ரகானேவுக்கு பதில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அவர் நியூசிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே வேளையில் விகாரியின் பெயரும் பரிசீலிக்கப்படலாம். விக்கெட் கீப்பராக ரி‌ஷப்பண்ட்டே இடம் பெறுவார். வேகப்பந்து வீச்சில் முகமது சமி, பும்ரா ஆகியோர் இடம் பெறலாம். இஷாந்த் சர்மா அல்லது முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அல்லது இருவருமே இடம் பெறலாம். சுழற்பந்து வீச்சில் அஸ்வின் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியில் பவுமா, டிகாக், மார்க்ராம், வான்டெர் துசென், ரபடா, நிகிடி, ஒவிலியர், கேசவ் மகராஜ் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    சொந்த மண்ணில் விளையாடுவது தென்ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக இருக்கும். அதே வேளையில் இந்திய அணி கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. அதே போல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக விளையாடியது.

    இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறார்கள்.

    இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. 1992-ம் ஆண்டு முதல் 7 முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளது.

    இந்த முறை டெஸ்ட் தொடரை வென்று நீண்ட கால ஏக்கத்தை இந்திய அணி தீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், சகா, விகாரி, பிரியங்க் பஞ்சால், பும்ரா, முகமது சமி, இஷாசந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின், முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், ஜெயந்த் யாதவ்.

    தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), பவுமா, குயிண்டன் டி காக், மார்க்ராம், வான்டென்துசென், கேசவ் மகராஜ், ஒலிவியர், ரபடா, நிகிடி, ஜார்ஜ் லிண்டே, முல்டர், சரேல் எர்வி, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜேன்சன், சிசண்டா மகலா, கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கல்டன், க்ளென்டன் ஸ்டூர்மேன், பிரெனெலன் சுப்ரயன், கைல் வர்ரெ யன்னே.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது.

    இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. நாளைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    ரோரி பர்ன்ஸ், ஓலிபோப், கிறிஸ்வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு பதிலாக சாக்கிராவ்லி, பேர்ஸ்டோ, மார்க்வுட், ஜாக்லீச் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் நேசருக்கு பதிலாக கேப்டன் கம்மின்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அறிமுகமாகிறார். 2-வது டெஸ்ட்டில் விளையாடிய ஜேய்ரிச்சர்ட்சனுக்கு பதிலாக அவர் களம் இறங்குகிறார்.

    2001-ம் ஆண்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன், தன்னை நிரூபித்து அணிக்கு திரும்பியதுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு விடைத்தரும் வகையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தென் ஆப்ரிக்காவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    வீடியோவில் கோலி, டிராவிட் பேசியிருப்பதாவது:-

    ஹர்பஜன் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து போராடி முன்னேறி வந்திருக்கிறார்.  2001-ம் ஆண்டு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது சற்றும் தளராமல் தன்னை நிரூபித்து அணிக்கு திரும்பினார். அதே போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் எடுத்துள்ள 711 விக்கெட்டுகள் சாதாரண விஷயம் அல்ல.

    இவ்வாறு அந்த வீடியோவில் கோலி, டிராவிட் இருவரும் பாராட்டியுள்ளனர்.
    ×