என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பேட் கம்மின்ஸ்
    X
    பேட் கம்மின்ஸ்

    பரிதாபம்... ‘பாக்சிங் டே’ டெஸ்டில் 185 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

    பேட் கம்மின்ஸ் வேகத்தையும், நாதன் லயன் சுழற்பந்தையும் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 185 ரன்னில் சுருண்டது.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. மெல்போர்னில் டாஸ் வென்ற அணி எப்போதும் பேட்டிங்கை தேர்வு செய்யும். ஆனால் இன்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட் கம்மினஸ் தவறு செய்து விட்டாரோ என கருதப்பட்டது. ஆனால், இங்கிலாந்து செய்த பேட்டிங் விதம் அவரது முடிவு சரியாக அமைந்துள்ளது.

    ஹசீப் ஹமீத், ஜாக் கிராவ்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 10 பந்துகளை சந்தித்த ஹமீத் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.  ஜாக் கிராவ்லி 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த தாவித் மலன் 14 ரன்னில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் சாய்த்தார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆஸ்திரேலிய வீரர்கள்

    ஜோ ரூட் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார்.  உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 33 ரன்னில் இருந்து அரைசதம் அடித்தார்.  ஜோ ரூட் சரியாக அரைசதம் அடித்த நிலையில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ 25 ரன்னிலும், பட்லர் 3 ரன்னிலும் வெளியேற இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் பேர்ஸ்டோவ் 35 ரன்களும், ராபின்சன் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 65.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 185 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×