என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சேவாக் - சச்சின் - விராட் கோலி
    X
    சேவாக் - சச்சின் - விராட் கோலி

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கண்ணோட்டம்

    தென் ஆப்பிரிக்கா-இந்தியா ஆகிய இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர்களில் அதிக ரன் குவித்தவர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் 25 போட்டியில் 1741 ரன் எடுத்துள்ளார்.
    * இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 39 டெஸ்டில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 14 முறையும், தென்ஆப்பிரிக்கா 15 முறையும் வெற்றி பெற்றன. 10 டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.

    * ஒட்டு மொத்தமாக இரு அணிகள் இடையே 14 டெஸ்ட் தொடர் நடந்துள்ளது. இதில் இந்தியா 4 முறை தொடரை வென்றது. தென்ஆப்பிரிக்கா 7 முறை தொடரை கைப்பற்றியது. 3 டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.

    * டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சமாக ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன் (கொல்கத்தா 2010) ஆகும். தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியாவின் அதிகபட்சமாக ஸ்கோர் 459 ரன் (செஞ்சூரியன் 2010) தென்ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 620 ரன் (செஞ்சூரியன் 2010)

    * இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் 66 ஆகும். 1996-ம் ஆண்டு டர்பனில் நடந்த டெஸ்டில் இந்த ரன்னுக்குள் சுருண்டது. தென்ஆப்பிரிக்காவின் குறைந்தபட்ச கோர் 79 ரன் (நாக்பூர் 2015).

    * இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர்களில் அதிக ரன் குவித்தவர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் 25 போட்டியில் 1741 ரன் எடுத்துள்ளார். அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவில் காலிஸ் 1734 ரன் (18 போட்டி) எடுத்தார்.

    * ஒரு இன்னிங்சில் தனிப்பட்ட வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் வீரேந்திர ஷேவாக். அவர் 2008-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 319 ரன் குவித்தார். அதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலி (254 ரன், 2019 ஆண்டு), ஹசிம் ஆம்லா (253 ரன், 2010) உள்ளனர். அதிக சதம் அடித்தவர்களில் சச்சின் தெண்டுல்கர், காலிஸ் ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.

    காலிஸ்

    * இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இந்தியாவின் அனில்கும்ளே 84 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் 65 விக்கெட்டுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    * ஒரு இன்னங்சில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் தென் ஆப்பிரிக்காவின் குளுஸ்னர். அவர் 1996-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 64 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். அதற்கு அடுத்த படியாக இந்திய வீரர்கள் ஹர்பஜன்சிங், அஸ்வின் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

    * இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு இதுவரை 7 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் 6 முறை டெஸ்ட் தொடரை இழந்தது. 2010-11-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமன் ஆனது.

    * தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா இதுவரை 20 டெஸ்டில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 3 வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 10 வெற்றியை தன்வசமாக்கியது. 7 டெஸ்ட் டிரா ஆனது.
    Next Story
    ×