என் மலர்
நீங்கள் தேடியது "Cricket player"
- உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்து இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
- போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
புவனேஸ்வர்:
ஒடிசாவைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் என்பவர், கடந்த 11ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர் கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில், கட்டாக் நகருக்கு அருகே அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கட்டாக் காவல் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. எனினும், உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்து இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
மேலும், அவரது ஸ்கூட்டர் வனப்பகுதியில் கிடந்ததுடன், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் ராஜஸ்ரீ உட்பட சுமார் 25 கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்றதாகவும், இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்ததாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணி ஜனவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போது ராஜஸ்ரீ இறுதிப் பட்டியலில் இடம் பெறவிவில்லை. மறுநாள், ராஜஸ்ரீ தனது தந்தையை சந்திக்க பூரிக்கு செல்வதாக தனது பயிற்சியாளரிடம் தெரிவித்துவிட்டு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். ராஜஸ்ரீ ஸ்வைனின் குடும்பத்தினர், ஒடிசா கிரிக்கெட் சங்கம் (ஓசிஏ) மற்றும் மகளிர் அணியின் பயிற்சியாளர் புஷ்பாஞ்சலி பானர்ஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
- நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்.
- இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.
நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.
அப்படி ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்தார். அவர் விழுந்ததை கண்ட விக்கெட் கீப்பர் அவரை நோக்கி ஓடினார். மற்ற வீரர்களும் உதவிக்கு விரைந்தனர்.
பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இன்ஜினியர் மாரடைப்பால் மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.
- நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம் என காம்ப்ளி கூறினார்.
சில நாள்களுக்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததையும், அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை என்பதையும் அந்த காணொளியில் காண முடிந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரின் இத்தகைய நிலையைக் கண்டு, ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் வினோத் காம்ப்ளி தனது வைரலான வீடியோ குறித்து அவர்களிடம் பேசுகையில். "நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் கூறுகையில், "நாங்கள் அவரை சந்தித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் குணமடைந்து வருகிறார், அவரது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. வைரலாகி வரும் காணொளி பழையது" என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வினோத் காம்ப்ளி தற்சமயம் நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரராக அறியபட்ட வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்காக 1991-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3,500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.
- புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஸ்வினுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளித்துள்ளது. அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.
புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும். ஒவ்வொரு முயற்சியிலும் புத்திசாலித்தனத்தை வழங்குங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






