என் மலர்
விளையாட்டு
பாலோ-ஆன் ஆன வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 278 ரன்னில் ஆல்அவுட் ஆக, இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் டாம் லாதம் 252 ரன்களும், கான்வே 109 ரன்களும் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 126 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அந்த அணியின் யாசிர் அலி (55), நுருல் ஹசன் (41) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை தொட்டனர். நியூசிலாந்து அணியில் டிரென்ட் பவுல்ட் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அத்துடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பாலோ-ஆன் ஆன வங்காளதேச அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டு இருந்தன. ஆனால் லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 102 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டை ராஸ் டெய்லர் வீழ்த்த வங்காளதேசம் 278 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்னில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
இரட்டை சதம் அடித்த டாம் லாதம் ஆட்ட நாயகன் விருதும், கான்வே தொடர் நாயகன் விருதும் வென்றனர்.
இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு, சுமீத் ரெட்டி மற்றும் மனு அத்ரி ஆகியோரும் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.
டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் ஆண்கள் இரட்டை ஆட்டங்களில் இருந்து இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் மனு அத்ரி ஆகியோரும் விலகி உள்ளனர். இந்தியாவின் சாய் பிரனீத்தும் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
பி.வி.சிந்து மற்றும் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி பட்டம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்து கடைசியாக 2018-லும், ஸ்ரீகாந்த் 2017-லும் பட்டத்தை வென்றுள்ளனர். மேலும் ஐரிஸ் வாங் (அமெரிக்கா) மற்றும் ஃபிட்ரியானி (இந்தோனேசியா) ஆகியோரும் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதனால் சாய்னா நோவலுக்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
முதல் நிலை வீரரான ஜொங்கோல்பன் கிடிஹராகுல் மற்றும் ரவிந்தா பிரஜோங்ஜாய் ஆகியோர் வெளியேறியதைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை வீரரான அஷ்வினி போனப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோர் இந்தியாவுக்கு பட்டம் பெறும் பெரும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரிஷப் பண்ட் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இரண்டாவது போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரிஷப் பண்ட் களம் இறங்கினார். அப்போது அனுமன் விஹாரியும் களத்தில் இருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆடியதை குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரிஷப் பண்ட் ஆடிய ஷாட் குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா விமர்சனம் செய்துள்ளார்.
ரிஷப் பண்ட் அப்போது தேர்வு செய்த ஷாட்டை பார்க்கையில் அவர் போஸ்ட்பெய்ட் சர்வீசில் இருந்து பிரீபெய்டு சர்வீசுக்கு மாறி வருவதுபோல் இருந்தது என வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், காயம் காரணமாக சிராஜ் ஆடவில்லை என்றால் இஷாந்த் சர்மா கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஐசிசியின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் அஜாஸ் படேல்
ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனையை படைத்த 3-வது வீரர் அஜாஸ் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் மயங்க் அகர்வால், நியூசிலாந்தின் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
இந்நிலையில், நியூசிலாந்தின் அஜாஸ் படேல் டிசம்பர் 2021 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பரில் வான்கடேயில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அஜாஸ் படேல் சரித்திரம் படைத்தார். ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்டில் அந்த சாதனையை எட்டிய 3-வது வீரர் ஆனார்.
இந்தியாவின் மயங்க் அகர்வால் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். 2 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், 2 அரை சதமும் அடங்கும்.
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
இதையும் படியுங்கள்...புரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 5 வெற்றி, 1 தோல்வி, 2 டிரா என மொத்தம் 32 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
பெங்களூரு:
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 24 - 18 என முன்னிலை பெற்றது.
இறுதியில், தமிழ் தலைவாஸ் 45-26 என்ற புள்ளிக்கணக்கில் வென்று மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 1 தோல்வி, 4 டிரா என 27 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 30 -28 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இது ஜெய்ப்பூர் அணி பெறும் 4-வது வெற்றி ஆகும்.
வங்காளதேச அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியன் மூலம் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் ட்ரென்ட் பவுல்ட் பெற்றார்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையேன 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை ஆடியது. நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி 126 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் ட்ரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் 300 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் 4-வது வீரராக ட்ரென்ட் பவுல்ட் இடம் பிடித்தார்.
சர் ரிச்சர்ட் ஹாட்லீ, டேனியல் வெட்டோரி, டிம் சவுத்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
நான் இந்திய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றபோது, இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்தது. இப்போது நீண்ட காலமாக முதலிடத்தில் இருக்கிறது என கூறினார்.
கேப் டவுன்:
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கேப் டவுனில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா ஒரு போட்டியிலும், தென் ஆப்ரிக்கா ஒரு போட்டியிலும் வென்று 1-1 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.
2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை. மேலும் விராட் கோலி 2 வருடங்களாக சதம் அடிக்காதது குறித்தும், சொற்ப ரன்களின் அவுட் ஆவது குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நான் சரியாக விளையாடவில்லை என பலரும் பேசி வருவது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் சரியான செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது திறமை குறித்து பலரும் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போதே பலர் நான் விளையாடும் தகுதியை இழந்துவிட்டதாக கூறினர். ஆனால் நான் எனக்கென்று சில தகுதிகளை வைத்துள்ளேன். என் அணிக்கு எது சிறந்ததோ அதை செய்வதில் தான் பெருமைப்படுகிறேன்.
ஒரு போட்டியில் முக்கியமான கட்டத்தில் அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை தருவதில் தான் ஒரு வீரருக்கான பெருமை இருக்கிறது. எண்களை வைத்து நான் என்னை மதிப்பிட்டுக்கொள்ளவில்லை. நான் இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறோனோ அவற்றிலேயே திருப்தியாக இருக்கிறேன். நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

நான் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டபோது இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்தது. இப்போது நாம் முதல் இடத்தில் நீண்ட காலமாக இருக்கிறோம். 7-வது இடம் எப்படி இருக்கும் என்பதே பலருக்கு நினைவில் இருக்காது.
எல்லோரும் தவறு செய்வார்கள். நாம் செய்த ஒரு தவறை, அடுத்த 7,8 மாதங்களுக்கு திரும்பி செய்யாத வரை பிரச்சனை இல்லை என தோனி கூறினார். அந்த பாடம் இன்னும் என் மனதில் இருக்கிறது.
காயம் காரணமாக முகமது சிராஜ் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார். அவரை போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கான நீதிமன்றப் போராட்டத்தில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், வெற்றி பெற்றுள்ளார்.
மெல்போர்ன்:
டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கடந்த புதன்கிழமை மெல்போர்ன் நகரை அடைந்தார்.
முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாரா இல்லையா என்பதை தெரிவிக்க மறுத்திருந்தார். மேலும் அவரிடம் மருத்துவ விதிவிலக்கு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மேலும் அவரது விசா ஆஸ்திரேலிய அரசு அதிரடியாக ரத்துச் செய்தது.
இதனால் மெல்போர்ன் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் விசா ரத்து செய்யப்பட்டதால் வியாழக்கிழமை முதல் ஜோகோவிச் ஹோட்டல் தனிமைப்படுத்தல் காவலில் வைக்கப்பட்டார்.
இதையடுத்து விசா ரத்துக்கு எதிராக மெல்போர்னில் உள்ள நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 11 காரணங்களை ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.
டிசம்பரில் ஜோகோவிச்சிற்கு கடுமையான பெரிய நோய் இருந்ததாக எந்த தரவும் இல்லை என்றும் இது தொடர்பான அவரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளையும் நீதிமன்றத்தில் அவர்கள் வழங்கினர்.
இருதரப்பு வாதங்கள் கேட்ட நீதிபதி அந்தோனி கெல்லி, ஜோகோவிச் விசாவை ரத்துச் செய்த உத்தரவிற்கு தடை விதித்தார். நீதிமன்ற வழக்கில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், வெற்றி பெற்றுள்ளதன் மூலம் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மும்பை:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13-ந் தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது.
இதற்கிடையே நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டிகளை ஒரே இடத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு கருதி 2-வது திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன்படி அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களையும் மராட்டிய மாநிலம் மும்பையில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவீன் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 3 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
கேப்டவுன்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோகன்னஸ் பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது.
2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அங்கு 6 முறை டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. ஒரு தடவை தொடர் சமநிலையில் முடிந்தது.
இதனால் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
முதுகுவலி காரணமாக கடந்த டெஸ்டில் விளையாடாத கேப்டன் விராட் கோலி நாளைய போட்டியில் ஆடுவார். அவர் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். கோலி ஆடும் பட்சத்தில் விகாரி நீக்கப்படுவார்.

வேகப்பந்து வீரர் முகமது சிராஜ் காயத்தில் உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் இடம் பெறலாம். மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது. ரகானேவும், புஜாராவும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அணிக்கு சாதகமான நிலையாகும். அதேநேரத்தில் ரிஷப் பண்டின் ஆட்டம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்த டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றலாம். நல்ல வாய்ப்பை வீணடித்து விடக்கூடாது.
முதல் டெஸ்டில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்கா 2-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எல்கர் தலைமையிலான அந்த அணி இந்தியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
பேட்டிங்கில் கேப்டன் எல்கர், பவுமா ஆகியோரும் பந்துவீச்சில் ரபடா, நிகிடி, மார்கோ ஜான்சென் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 42-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 41 போட்டியில் இந்தியா 15-ல், தென் ஆப்பிரிக்கா 16-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 டெஸ்ட் டிரா ஆனது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
டாம் லாதம் இரட்டை சதம், கான்வே சதம் விளாச நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய வங்காளதேசம் 126 ரன்னில் சுருண்டது.
நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மவுங்கானுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காளதேசம் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. டாம் லாதம், டேவன் கான்வே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 186 ரன்களுடனும், கான்வே 99 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய டாதம் லாதம் இரட்டை சதம் விளாசினார். கான்வே சதம் அடித்தார். டாம் லாதம் 373 பந்தில் 252 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 109 ரன்னில் ரன்-அவுட் ஆனார். டாம் பிளண்டல் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் அணி சார்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், எபாடாட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் வங்காளதேச அணி களம் முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடியதால் இந்த டெஸ்டில் கடும் போட்டி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பவுல்ட், சவுத்தீ பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச வீரர்கள் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர். தொடக்க வீரர்கள் ஷத்மான் இஸ்லாம் (7), முகமது நைம் (0), அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (4), மொமினுல் ஹக் (0), லிட்டோன் தாஸ் (8) சொற்ப ரன்களில் வெளியேறினர்.
முதல் 12 ஓவருக்கும் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்து வங்காளதேசத்தை திணறடித்தனர் பவுல்ட், சவுத்தீ. அதன்பின் வந்த யாசிர் அலி, நுருல் ஹசன் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். யாசிர் அலி 95 பந்தில் 55 ரன்களும், ஹசன் 62 பந்தில் 41 ரன்களும் எடுத்து வெளியேறினார்.

இந்த இருவரையும் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 41.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி முடிந்தது. நியூசிலாந்த அணி சார்பில் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டும், டிம் சவுத்தீ 3 விக்கெட்டும், கைல் ஜாமிசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வங்காளதேச அணி ஆல்-அவுட் ஆனதுடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது வரை வங்காளதேசம் 395 ரன்கள் பின்தங்கி பாலோ-ஆன் ஆனது. நாளை 3-வது ஆட்டம் தொடங்கும்போதுதான் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்குமா? அல்லது தொடர்ந்து விளையாடுமா? என்பது தெரிய வரும்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் கவாஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சிட்னி:
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதால், போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் ஆஸ்திரேலியாவின் முயற்சி கைகூடவில்லை.
இந்நிலையில், நூலிழையில் வெற்றியை தவறவிட்ட ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சில தூக்கமில்லா இரவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சியில் பேசிய வார்னே, பாட் கம்மின்ஸ் ஒரு வெற்றியைப் பெற தவறிய பிறகு சில தூக்கமில்லாத இரவுகளை சந்திக்க நேரிடும்.
ஆஸ்திரேலியா முன்னதாகவே டிக்ளேர் செய்யாதது, கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த வெற்றி பறிபோயுள்ளது.
இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருந்திருந்தால், அவர்கள் தொடரை ஒயிட்வாஷை அடைவதற்கு நெருக்கமாகச் சென்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...கழுத்தின் மேல் கத்தி தொங்குகிறது - மூத்த வீரர்களை எச்சரிக்கிறார் ஹர்பஜன் சிங்






