என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
     
    இந்திய அணியின் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் 2வது டெஸ்டில் சிறப்பாக விளையாடினர். திறமை காரணமாகவே அணியில் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த டெஸ்டில் ஹனுமா விஹாரியும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடினார். 

    இந்நிலையில், மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் நடந்த ஒரே நல்ல விஷயம் ரஹானே ஸ்கோர் செய்ததுதான். ரஹானே அரைசதம் அடித்துள்ளதால் கேப்டவுன் டெஸ்ட்டில் மீண்டும் வாய்ப்பு பெறுவார். கோலி அணிக்கு திரும்புவதால் ரஹானே நீக்கப்பட மாட்டார்.

    ரஹானே பெரிய அளவில் ரன்கள் சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் அரைசதங்களை சதங்களாக மாற்ற வேண்டும். மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாராவின் கழுத்து மீது கத்தி தொங்குகிறது. அப்படிப்பட்ட சூழலிலும் இருவரும் நன்றாக விளையாடி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஐதராபாத் எப்.சி அணி இதுவரை 4 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கேரளா அணியினர் ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் கேரளா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணியினரும் கோல் எதுவும் போடவில்லை.

    இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தி 4-வது வெற்றி பெற்றது.

    கேரளா அணி தான் ஆடிய 10 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி, 5 டிரா என மொத்தம் 17 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
    வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 186 ரன்கள் குவித்து அசத்தினார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    முதல் டெஸ்டில் வங்காளதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதம், வில் யங் களமிறங்கினர்.

    இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யங் அரை சதமடித்தார். 148 ரன்கள் சேர்த்த நிலையில் 54 ரன்னில் யங் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய டேவன் கான்வாய் லாதமுடன் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி கிடைத்த பந்துகளை பவுண்டரிகளாக விளாசினர். சிறப்பாக ஆடிய டாம் லாதம் சதமடித்து அசத்தினார்.

    முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்துள்ளது. டாம் லாதம் 186 ரன்களுடனும், கான்வாய் 99 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். 

    முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் பொறுப்புடன் ஆடி வருகிறது. 
    ஜேக் லீச் 34 பந்துகளும், ஸ்டூவர்ட் பிராட் 35 பந்துகளும் எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பி, போட்டியை டிரா செய்தது.
    சிட்னி: 

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 294 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 122 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடி ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்து டிக்ளர் செய்தது. இரு இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடித்து அசத்தினார்.

    இங்கிலாந்து அணிக்கு 388 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 22 ரன்னுடனும், ஹசிப் ஹமீது 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று காலை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஹமீது 9 ரன்னிலும், தாவித் மலான் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிராவ்லி- ஜோ ரூட் ஜோடி நிதானமாக விளையாடியது. கிராவ்லி அரைசதம் அடித்தார். அவர் 77 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 96 ரன்னாக இருந்தது. அடுத்து ஜோ ரூட்டுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்திருந்தது.

    இடைவேளைக்கு பின் மழை பெய்ததால் ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கியது ஜோரூட்- பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடினார்கள்.

    ஜோ ரூட் 24 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 60 ரன்னிலும் ஆடம்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணிக்க சிக்கல் ஏற்பட்டது. பேர் ஸ்டோவ் ஓரவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 41 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர்  11 ரன்னிலும், மார்க் வுட் டக்அவுட்டிலும் வெளியேறினார். 

    9-வது விக்கெட்டுக்கு ஜேக் லீச் உடன் ஸ்டூவர் பிராட் ஜோடி சேர்ந்தார். அப்போது 10.4 ஓவர்களை இங்கிலாந்து எதிர்கொள்ள இருந்த நிலையில், கைவசம் 2 விக்கெட்டே இருந்தது. இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினர். இதனால் போட்டி டிரா நோக்கி சென்றது. ஆனால், 34 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 100 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு 12 பந்துகளை சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் பிராட் உடன் ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். 101-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரை பிராட் சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

    ஜேக்  லீச்சை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்மித்

    அடுத்த ஓவரை ஸ்மித் வீசினார். இந்த ஓவரை ஆண்டர்சன் தாக்குப்பிடித்து விளையாட இங்கிலாந்து 102 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் போட்டியில் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    இந்த போட்டி டிரா ஆனதால் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கைக்கூடாமல் போனது.
    இந்திய வீரர்கள் தாங்கள் எதிர்கொண்ட நான்கு பிரேக் பாயிண்டுகளையும் கைப்பற்றி, எதிர்தரப்பு போட்டியாளர்களை தோற்கடித்தனர்.
    அடிலெய்ட்:

    ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடரில் முதன்முறையாக இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஜோடி இணைந்து விளையாடியது. அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய இரட்டையர்கள்,  முதல் நிலை வீரரான குரேஷியாவின் இவான் டோடிக்  மற்றும் பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை எதிர்கொண்டனர். 

    இதில் 7-6 (6) 6-1 என்ற கணக்கில் போபண்ணா-ராம்குமார் ராமநாதன் ஜோடி வெற்றி பெற்று பட்டம் வென்றுள்ளது. 
    ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், இந்திய வீரர்கள் தாங்கள் எதிர்கொண்ட நான்கு பிரேக் பாயிண்டுகளையும் காப்பாற்றி, இரண்டு முறை போட்டியாளர்களை முறியடித்தனர்.   முதல் செட்டில் வெற்றிக்கு கடுமையாக போராடிய இந்திய அணி இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் வெற்றி சுலபமானது. 

    இது போபண்ணா பெறும் 20வது ஏடிபி இரட்டையர் பட்டமாகும். ராம்குமார் பக்கத்தில் இருந்து விளையாடும் போது  பாயிண்ட்டை சீக்கிரம் முடித்துவிடலாம், அது ஒரு நன்மையாக இருந்தது என்று போட்டி நிறைவுக்கு பின் போபண்ணா தெரிவித்தார். 

    பட்டம் வென்றதன் மூலம் போபண்ணாவுக்கும், ராம்குமாருக்கம் மொத்தம் 18,700 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. மேலும் இருவருக்கும் தலா 250 தரவரிசைப் புள்ளிகளும் பெறுகிறார்கள். ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றுக்கு முன்னதாக கிடைத்துள்ள இந்த வெற்றி ராம்குமாருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைந்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6-ந்தேதி அகமதாபாத்திலும், 2-வது போட்டி 9-ந்தேதி ஜெய்ப்பூரிலும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 12-ந்தேதி கொல்கத் தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    அதேபோல் 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டி பிப்ரவரி 15-ந்தேதி கட்டாக்கிலும், 2-வது போட்டி 18-ந்தேதி விசாகப்பட்டினத்திலும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 20-ந்தேதி திருவனந்தபுரத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் 6 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கொரோனா உச்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    போட்டிகளை நடத்த 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 3 இடங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அகமதாபாத்தை தவிர மற்ற இடங்களை குறைக்க ஆலோசிக்கப்படுகிறது.

    இதன் மூலம் அணிகளின் பயண நேரத்தை குறைக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது ஒரு கடினமான சூழ்நிலை. நாங்கள் நிலை மையை கவனித்து வருகிறோம். சரியான நேரத்திதில் நாங்கள் முடிவுகளை எடுப்போம்’’ என்றார்.
    இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 3-வது டெஸ்டில் ஆடும் லெவனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

    இதற்கிடையே, இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக ரன்கள் எடுக்க முடியாமல் திணறிவருகின்றனர். அவர்களது திறமையின் மீதான நம்பிக்கை, கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது:

    இரண்டாவது டெஸ்டில் ஹனுமா விஹாரி நன்றாக பேட்டிங் செய்துள்ளார். 2 இன்னிங்சிலும் அவர் மிகச்சிறப்பாக ஆடினார். ஷ்ரேயாஸ் அய்யர் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். இருவரும் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி விளையாடி உள்ளனர்.

    ஆனாலும், அணியில் மூத்த வீரர்கள் இருக்கும்போது இளம் வீரர்கள் அவர்களுக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். அதுவரை கிடைக்கும் வாய்ப்பில் பெரியளவு ரன்களை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றால், தொடர்ந்து 10 டெஸ்டில் தோற்ற அணி என்ற மோசமான சாதனைக்கு அந்த அணி ஆளாகிவிடும் வாய்ப்புள்ளது.
    சிட்னி:

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    ஆஷஸ் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில், இறுதி நாளான இன்று இங்கிலாந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்குகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டனாக பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில போட்டிகளில் பெற்ற தோல்வியின் எதிரொலியால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இந்த நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டால் இங்கிலாந்து அணி வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என மொத்தம் 29 புள்ளிகள் எடுத்து 2-ம் இடத்தில் நீடிக்கிறது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் யு மும்பா, தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய மும்பை அணி 48-38 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் யு மும்பா அணி 3 வெற்றி, 1 தோல்வி, 3 டிரா என 25 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. 

    பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பாட்னா அணி 27 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இது பாட்னா அணி பெறும் 5-வது வெற்றி ஆகும். 
    ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதின் டிசம்பர் மாதத்திற்கு மயங்க் அகர்வால் உள்ளிட்ட 3 பேர் பெயரை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.
    துபாய்:

    ஐ.சி.சி. மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் சிறப்பாக செயல்பட்டார். 2 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், 2 அரை சதமும் அடங்கும். இதனால் மயங்க அகர்வால் பெயரை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.

    நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணிக்கெதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி அசத்தியதால் அவரது பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.
     
    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பெயரையும் பரிந்துரை செய்துள்ளனர்.

    இந்த 3 பேரில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்லப் போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவா எப்.சி அணி இதுவரை 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், எப்.சி. கோவா அணியும் மோதின.

    முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரண்டாவது பாதியின் 82-வது நிமிடத்தில் கோவா அணியின் ஆர்டிஸ் மெண்டோசா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

    கோவா அணி தான் ஆடிய 10 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என மொத்தம் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் ஏ.டி.கே மோகன் பாகான் மற்றும் ஒடிசா அணிகள் மோத இருந்தன. ஆனால், மோகன் பாகான் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ரத்து  செய்யப்பட்டது. இந்த போட்டி வேறு ஒரு தேதியில் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது . 
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா சதம் (137 ரன்) அடித்தார். ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து இருந்தது. 6-வது வீரராக களம் இறங்கிய பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 103 ரன்னும் (அவுட் இல்லை), பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 158 ரன்கள் பின்தங்கி , கைவசம் 3 விக்கெட் என்ன நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது.

    இங்கிலாந்து அணி 79.1 ஓவர்களில் 294 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 122 ரன் குறைவாகும். பேர்ஸ்டோவ் 113 ரன்கள் எடுத்தார். ஸ்காட் போலண்டு 4 விக்கெட்டும், கம்மின்ஸ், லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    122 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 52 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்களான வார்னர் 3 ரன்னில் மார்க்வுட் பந்திலும், ஹாரிஸ் 27 ரன்னில் ஜேக் லீச் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

    அதைத் தொடர்ந்து லபுசேன் 29 ரன்னிலும், ஸ்டீவ் சுமித் 23 ரன்னிலும் வுட், லீச் பந்தில் ஆட்டம் இழந்தனர். 86 ரன் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட் டுக்கு கவாஜா- கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்து ஆடியது.

    கவாஜா அபாரமாக ஆடி சதம் அடித்தார். 131 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். முதல் இன்னிங்சிலும் கவாஜா செஞ்சுரி அடித்திருந்தார். அவரது 10-வது சதம் ஆகும்.

    மறுமுனையில் இருந்த கேமரூன் கிரீன் 74 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 388 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கவாஜா 101 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
    ×