search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்
    X
    ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

    ஆஸ்திரேலியா போராட்டம் வீண்: ஒரு விக்கெட் மீதமுள்ள நிலையில் டிரா செய்தது இங்கிலாந்து

    ஜேக் லீச் 34 பந்துகளும், ஸ்டூவர்ட் பிராட் 35 பந்துகளும் எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பி, போட்டியை டிரா செய்தது.
    சிட்னி: 

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 294 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 122 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடி ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்து டிக்ளர் செய்தது. இரு இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடித்து அசத்தினார்.

    இங்கிலாந்து அணிக்கு 388 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 22 ரன்னுடனும், ஹசிப் ஹமீது 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று காலை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஹமீது 9 ரன்னிலும், தாவித் மலான் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிராவ்லி- ஜோ ரூட் ஜோடி நிதானமாக விளையாடியது. கிராவ்லி அரைசதம் அடித்தார். அவர் 77 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 96 ரன்னாக இருந்தது. அடுத்து ஜோ ரூட்டுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்திருந்தது.

    இடைவேளைக்கு பின் மழை பெய்ததால் ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கியது ஜோரூட்- பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடினார்கள்.

    ஜோ ரூட் 24 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 60 ரன்னிலும் ஆடம்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணிக்க சிக்கல் ஏற்பட்டது. பேர் ஸ்டோவ் ஓரவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 41 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர்  11 ரன்னிலும், மார்க் வுட் டக்அவுட்டிலும் வெளியேறினார். 

    9-வது விக்கெட்டுக்கு ஜேக் லீச் உடன் ஸ்டூவர் பிராட் ஜோடி சேர்ந்தார். அப்போது 10.4 ஓவர்களை இங்கிலாந்து எதிர்கொள்ள இருந்த நிலையில், கைவசம் 2 விக்கெட்டே இருந்தது. இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினர். இதனால் போட்டி டிரா நோக்கி சென்றது. ஆனால், 34 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 100 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு 12 பந்துகளை சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் பிராட் உடன் ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். 101-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரை பிராட் சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

    ஜேக்  லீச்சை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்மித்

    அடுத்த ஓவரை ஸ்மித் வீசினார். இந்த ஓவரை ஆண்டர்சன் தாக்குப்பிடித்து விளையாட இங்கிலாந்து 102 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் போட்டியில் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    இந்த போட்டி டிரா ஆனதால் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கைக்கூடாமல் போனது.
    Next Story
    ×