என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ஆஸ்திரேலியாவின் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    முதல் நாளில் மழை காரணமாக 46.5 ஓவர்களே வீசப்பட்டன. இதில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 
    2-வது நாளில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கவாஜா 137 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்திருந்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 36 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுப்புடன் ஆடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டது. சதமடித்து அசத்திய பேர்ஸ்டோவ் 113 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட்டும், கம்மின்ஸ், லயான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 122 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 4 வெற்றி, 2 டையுடன் 26 புள்ளிகள் எடுத்து 2-ம் இடத்தில் நீடிக்கிறது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அரியானா அணி 41-37 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

    இதன்மூலம் அரியானா அணி 3 வெற்றி, 3 தோல்வி, 1 டை என 20 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின. 

    இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 31 - 26 என்ற புள்ளிக் கணக்கில வெற்றி பெற்றது. இது ஜெய்ப்பூர் அணி பெறும் 3வது வெற்றி ஆகும். 
    நோவக் ஜோகோவிச் தனக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு கிடைத்திருப்பதாக கூறி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
    பெல்கிரேடு:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனினும் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரருமான 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வந்தார்.  இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் போட்டியில் இருந்து விலகக்கூடும் என்றும் தகவல் வெளியாகின. 

    இதற்கிடையே நோவக் ஜோகோவிச் தனக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு கிடைத்திருப்பதாக கூறி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தை அடைந்தபோது, அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டார். இதனால் அவர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நோவக் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக செர்பிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பெல்கிரேடில் உள்ள அந்நாட்டு பாராளுமன்றத்துக்கு முன்பாக திரண்ட மக்கள், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

    இதனிடையே, ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அரசு அடைத்து வைத்து இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
    இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து சதம் அடிக்காமல் திணறி வரும் நிலையில், ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஸ்டார்க் சராசரியுடன் ஒப்பிட்டிருந்தது.
    இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி. இந்த தலைமுறையின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமாக அடித்துக் கொண்டிருந்த விராட் கோலிக்கு 2019-ல் ‘பிரேக்’ ஏற்பட்டது.

    அதன்பின் இன்னும் சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். சராசரி மிகவும் குறைவாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

    வாசிம் ஜாபர்

    இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டியை ஒளிபரப்பும் ஆஸ்திரேலிய டி.வி. 2019-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க்கின் சராசரி 38.63. விராட் கோலியின் 37.17 என குறிப்பிட்டு, விராட் கோலியை குறைத்து மதிப்பிட்டிருந்தது.

    ஸ்மித், சைனி

    இதையறிந்த இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தவருமான வாசிம் ஜாபர், ஒருநாள் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் சராசரி 5.350. அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 43.34 என பதிலடி கொடுத்துள்ளார்.
    சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர் வீசிய பந்து ஸ்டம்பை தாக்கிய போதிலும், பென் ஸ்டோக்ஸ் அவுட்டாவதில் இருந்து தப்பித்தது அனைவரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்து  முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். 16 ரன்கள் எடுத்திருக்கும்போது, கேமரூன் க்ரீன் வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் தடுத்து ஆடாமல் விட்டார். பந்து ஆஃப் ஸ்டம்பை பலமாக தாக்கியது.

    ஆனால், ஸ்டம்ப் மேலிருந்த ‘பெய்ல்’ கீழே விழவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்க நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், பென் ஸ்டோக்ஸ் ரிவியூ கேட்டார். அப்போது 3-வது நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார்.

    இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பென் ஸ்டோக்ஸ் கூட இதை எதிர்பார்க்கவில்லை. அப்பாடா... தப்பித்தோம் என தொடர்ந்து பேட்டிங் செய்தார். 16 ரன்னில் அதிர்ஷ்டம் மூலம் தப்பித்த பென் ஸ்டோக்ஸ், அரைசதம் அடித்த நிலையில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    ஸ்டம்ப் மீது பந்து பட்டும் அவுட் கொடுக்காதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்த வீடியோவை பதிவிட்டு, ‘‘பந்து ஸ்டம்பை தாக்கிய நிலையிலும், ‘பெய்ல்ஸ்’ கீழே விழாததால், ஹிட்டிங் தி ஸ்டப்ஸ்’ என் விதியை கொண்டு வரலாமா?. நீங்கள் என்னை நினைக்கிறீர்கள்? பந்து வீச்சாளர்களுக்கு நியாயமாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    நடுவர் எப்படி அவுட் கொடுத்தார். அவர் அவுட் கொடுத்தது வினோதமாக இருந்தது என்று வார்னே கருத்து தெரிவித்த நிலையில் சச்சின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்கால் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அரியானா 2 வெற்றி, 3 தோல்வி ஒரு டிராவுடன் (6 ஆட்டம்) 15 புள்ளிகளும் உள்ளது.

    இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, 4 தோல்வியை பெற்றுள்ளன.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதுகுவலி காரணமாக விளையாடாத விராட் கோலி 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. முதுகுவலி காரணமாக அவர் அப்போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து 2-வது டெஸ்டுக்கு லோகேஷ் ராகுல் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறும்போது, விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏற்கனவே நன்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறார்.

    சில நாட்களாக அவர் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டு நன்கு ஓடுகிறார். அவர் 3-வது டெஸ்டுக்கு உடல் தகுதி பெற்றுவிடுவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

    விராட் கோலி

    அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கூறும்போது, விராட் கோலி வலைப்பயிற்சியில் நன்றாக செயல்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கான 2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஜோகன்னஸ்பர்க்:

    ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்னும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடி இந்தியா 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 240 ரன் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 67.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பண்ட் ஆடியதை குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரி‌ஷப்பண்ட் களம் இறங்கினார். அப்போது அனுமன் விகாரியும் களத்தில் இருந்தார்.

    ஆனால் ரி‌ஷப்பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். 2-வது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரி‌ஷப்பண்ட் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரி‌ஷப்பண்ட் அடித்த ஷாட்டுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரி‌ஷப்பண்ட் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரி‌ஷப்பண்ட் நேர்மறையாக விளையாடுகிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் விளையாடுகிறார். அது அவருக்கு கொஞ்சம் வெற்றியை கொடுத்தது. ஆனால் நிச்சயமாக அவருடன் சில உரையாடல்களை செய்ய போகிறோம். அவரது ஷாட் தேர்வு குறித்து விவாதிக்கப் போகிறோம்.

    ரி‌ஷப்பண்ட் ஒரு ஆக்ரோ‌ஷமான, நேர்மறையான வீரராக இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால் சில சமயங்களில் அதை செய்வதற்கான நேரம் மற்றும் சூழ்நிலையை தேர்ந்தெடுப்பதுதான் ஒரு கேள்வியாக இருக்கும்.அதுபற்றி அவருடன் பேசுவோம். ரி‌ஷப்பண்ட் விளையாட்டின் போக்கை மிக விரைவில் மாற்றக்கூடியவர். இயற்கையாகவே இருக்கும் அதை அவரிடமிருந்து பறித்து அவரை மிகவும் வித்தியாசமானதாக நீங்கள் ஆக்க மாட்டீர்கள். அவர் கற்றுக்கொள்கிறார். அவர் தொடர்ந்து முன்னேறி மேலும் சிறப்பாக வருவார்.

    முதல் இன்னிங்சில் நாங்கள் 60 முதல் 70 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அது போட்டியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். நல்ல தொடக்கத்தை பெற்ற வீரர்கள் சிலர் அதை சதங்களாக மாற்றி இருக்கலாம்.

    50 முதல் 60 ரன்கள் வரை நாங்கள் முன்னிலை பெற்றிருந்தால் எங்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 3-வது மற்றும கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
    விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் கடைசி 2 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    லண்டன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் லாபஸ்சேன் முதலிடம் பிடித்து அசத்தியுளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்தில் உள்ளார்.

    இதில், ரோகித் சர்மா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறார். கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் கே.எல்.ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

    பாகிஸ்தானின் பாபர் அசாம் 8வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 10வது இடத்திலும் உள்ளனர்.

    இதேபோல், பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவிசந்திரன் அஸ்வின் 2-வது இடமும், பும்ரா 9-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல் ரவுண்டர் வரிசையில் அஸ்வின் 2-வது இடமும், ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்திலும் உள்ளனர்.

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 28 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பாட்னா அணி 18-12 என முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து, இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி சுதாரித்துக் கொண்டு புள்ளிகளை சேர்த்தது. 

    இறுதியில், தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் இடையிலான ஆட்டம் 30- 30 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது.

    இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என 22 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. 

    இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு புல்ஸ் அணி 38 - 31 என்ற புள்ளிக் கணக்கில வெற்றி பெற்றது. இது பெங்களூர் அணி பெறும் 5வது வெற்றி ஆகும். 
    96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த டீன் எல்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    ஜோகன்னஸ்பர்க்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இந்தியா, 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரகானே 58 ரன்கள் எடுத்தார். புஜாரா 53 ரன்களும், ஹனுமா விகாரி 40 ரன்களும் சேர்த்தனர். 

    இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது. கேப்டன எல்கர் 46 ரன்களுடனும், துசன் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்திய வீரர்கள்

    இந்நிலையில் இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி இலக்கை எட்டுவதற்கு 122 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய எல்கர், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுமுனையில் துசன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    அதன்பின்னர் எல்கர்- டெம்பா பவுமா இருவரும் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    கேப்டன் எல்கர் 96 ரன்களுடனும், டெம்பா பவுமா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக டீன் எல்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 
    ஆஷஸ் தொடரில் மிட்செல் ஸ்டார்க், கவாஜா ஆகியோரை சேர்த்ததற்கு, முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே விமர்சனம் செய்திருந்தார்.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மிட்செல் ஸ்டார்க் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசவில்லை. இதனால் அவரை அணியில் சேர்க்கக்கூடாது. முதல் போட்டியில் ஜை ரிச்சார்ட்சன் உடன் ஆஸ்திரேலியா விளையாட வேண்டும் என வார்னே கருத்து தெரிவித்திருந்தார்.

    ஆனால், மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் அபாரமான பந்து வீசினார். மேலும், இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    மிட்செல் ஸ்டார்க்

    அதேபோல் நேற்று தொடங்கிய 4-வது போட்டியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டிராவிஸ் ஹெட் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக உஸ்மான் கவாஜா அணியில் சேர்க்கப்பட்டார். அப்போதும் ஷேன் வார்னே விமர்சித்திருந்தார். கவாஜாவுக்குப் பதிலாக மிட்செல் மார்ஷை அணியில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால், கவாஜா அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் சதம் விளாசினார். இதனால் ஷேன் வார்னே மீது முன்னாள் வீரர் சாத் சேயர்ஸ் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    கவாஜா

    தொடர்ந்து சொந்த நாட்டு வீரர்களை விமர்சித்து வரும் ஷேன் வார்னே வாயை மூட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ‘‘ஷேன் வார்னே தொடர்ந்து சொந்த நாட்டு வீரர்களும் விமர்சித்து வருகிறார். ஸ்டார்க் மீது விமர்சனம் வைத்தார். தற்போது கவாஜா மீது வைத்தார். இரண்டு தவறாகியுள்ளது. வாயை மூடவும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ×