என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி
    X
    புரோ கபடி

    புரோ கபடி லீக்: 4-வது வெற்றி ஆர்வத்தில் பெங்கால் வாரியர்ஸ் - அரியானாவுடன் இன்று மோதல்

    புரோ கபடி லீக் போட்டியில் இன்று 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்கால் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அரியானா 2 வெற்றி, 3 தோல்வி ஒரு டிராவுடன் (6 ஆட்டம்) 15 புள்ளிகளும் உள்ளது.

    இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, 4 தோல்வியை பெற்றுள்ளன.
    Next Story
    ×