என் மலர்
புதுச்சேரி
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் இயங்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிப்பெயர்ச்சி என்கிறோம். சனிப்பெயர்ச்சி அன்று திரளான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் 19-12-2020 முதல் 31-1-2021 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும் சனீஸ்வரர் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி நேற்று சனிக்கிழமை என்பதால், அதிகாலை 3.30 மணி முதல் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் கைகளில், காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கிருமிநாசினியை தெளித்தனர். அவர்களை தொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், பக்தர்களை வெப்பமாணியை கொண்டு சோதித்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிக்காபட், துணை கலெக்டர் பாஸ்கரன் ஆகியோர், கொரோனா விதிமுறைப்படியும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கும் முறையையும் ஆய்வு செய்து, பக்தர்களின் தரிசனத்திற்கு உதவி புரிந்தனர். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்திருப்பதால், நளன் குளம் மற்றும் பிற தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், தொழில்நுட்ப அதிகாரி சேகர் தலைமையில், சனிபகவன கோவில் முழுவதும். கிருமிநாசினி மற்றும் புகை மருந்து அடித்து சீர்படுத்தினர். நேற்று அதிகாலை முதல் இரவு வரை சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிப்பெயர்ச்சி என்கிறோம். சனிப்பெயர்ச்சி அன்று திரளான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் 19-12-2020 முதல் 31-1-2021 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும் சனீஸ்வரர் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி நேற்று சனிக்கிழமை என்பதால், அதிகாலை 3.30 மணி முதல் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் கைகளில், காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கிருமிநாசினியை தெளித்தனர். அவர்களை தொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், பக்தர்களை வெப்பமாணியை கொண்டு சோதித்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிக்காபட், துணை கலெக்டர் பாஸ்கரன் ஆகியோர், கொரோனா விதிமுறைப்படியும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கும் முறையையும் ஆய்வு செய்து, பக்தர்களின் தரிசனத்திற்கு உதவி புரிந்தனர். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்திருப்பதால், நளன் குளம் மற்றும் பிற தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், தொழில்நுட்ப அதிகாரி சேகர் தலைமையில், சனிபகவன கோவில் முழுவதும். கிருமிநாசினி மற்றும் புகை மருந்து அடித்து சீர்படுத்தினர். நேற்று அதிகாலை முதல் இரவு வரை சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
விவசாயிகளின் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த 36 விவசாயிகளுக்கு புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகளின் உருவபடங்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பி.கே.தேவதாஸ், மகளிர் காங்கிரஸ் தலைவர் பஞ்சகாந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாரா. கலைநாதன், அபிஷேகம், சேது செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க. மாநில செயலாளர் கபிரியேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தாமல், பெரிய தொழிலதிபர்கள், முதலாளிகள் மத்தியில் பேசும் போது விவசாய சட்டங்களுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். இது எந்த வகையில் நியாயம்.
விவசாயிகளின் போராட்டத்தால் நாட்டில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கும், விவசாயிகளின் உயிரிழப்பிற்கும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டில் உள்ள 70 சதவீத விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். இந்த போராட்டத்தில் 36 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் போராட்டத்திற்காக உயிர்துறந்த தியாகிகள். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தி.மு.க. சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
திருக்கனூர் பகுதியில் படுகை அணைகளில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் குவிந்தனர்.
திருக்கனூர்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சில தினங்களுக்கு முன்பு திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மழையின் காரணமாகவும், வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் திருக்கனூர் பகுதியில் உள்ள படுகை அணைகள் நிரம்பி வழிகிறது.
சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை காண்பதற்காகவும் படுகை அணைகளில் குளிப்பதற்காகவும் பொதுமக்கள் அதிக அளவில் செல்லிப்பட்டு, சுத்துக்கேணி, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு வருகிறார்கள்.
விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம்கூட்டமாக படுகை அணை பகுதிகளுக்கு வருகை தந்தனர். பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
திருக்கனூர் அடுத்த கூனிமுடக்கு பகுதியில் வாய்க்காலில் குளித்த ஒரு சிறுவன் நீரில் மூழ்கி இறந்த காரணத்தினால் படுகை அணைகளில் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்ததுடன், உயிர் இழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நேரும் என அவர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் ஆபத்தை உணராத பொதுமக்கள் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி படுகை அணைகளில் இறங்கி குளித்தனர்.
இதனால் செய்வதறியாது போலீசார் திகைத்து வருகின்றனர். சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் படுகை அணைகளில் குளிப்பது ஆபத்தை உருவாக்கும் என தெரிந்தும் அதனை உணராமல் அணைகளில் குளித்து மகிழ்கின்றனர்.
செல்லிப்பட்டு பகுதியில் பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்ட படுகை அணை மையப்பகுதி சேதமடைந்து உள்ளது, இதனால் அணை உடையும் அபாயமும் இருக்கிறது.இதையெல்லாம் மக்கள் உணராமல் செல்லிப்பட்டு படுகை அணையில் கூட்டம் கூட்டமாக குளித்து வருகிறார்கள். பொதுமக்களின் அலட்சியம் ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
திருபுவனை - சன்னியாசிக்குப்பம் சாலையை விரைவில் சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருபுவனை:
திருபுவனை சுற்றுப்பகுதியில் பல தனியார் தொழிற்சாலைகள், கம்பெனிகள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இங்குள்ள பிரதான சாலைகள், குறுக்கு சாலைகள், நகர் பகுதி சாலைகள், தெருக்கள் சேதமடைந்துள்ளன. பல சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகின்றன.
அந்த வகையில் திருபுவனை- சன்னியாசிக்குப்பம் தார் சாலை, மழையால் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டு பல்லாங்குழியாக காட்சியளிக்கின்றன. இந்த வழியாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது சர்க்கஸ் காட்சிகளை நினைவுபடுத்துவது போல் உள்ளது.
மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளங்களின் தன்மை தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரத்தில் செல்பவர்களின் நிலை இன்னும் மோசம். தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களும் பழுதாகின்றன. இந்த அவலத்தை போக்கும் வகையில் திருபுவனை - சன்னியாசிக்குப்பம் சாலையை விரைவில் சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சட்ட விதிகளின் அடிப்படையில் தான் கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை-புதுச்சேரி நகரமைப்பு குழுமம் சார்பில் அலுவலக நடைமுறை, பதிவு மேலாண்மை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களிடம் கவர்னர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசுக்கு அனுப்பப்படும் கோப்புகளில் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அதனை தவிர்க்க வேண்டும். கோப்புகளில் கையொப்பங்களை இட போதிய இடம் விட வேண்டும். கையொப்பங்கள் தெளிவாக யாருடையது என்பதை கையொப்பத்தின் கீழே தெரிவிப்பது அவசியம். தகுதி வாய்ந்தோரிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டால் அதனை முதலில் செயல்படுத்த வேண்டும். சந்தேகம் இருந்தால் கோப்புகளை மீண்டும் சமர்ப்பித்து அதில் உள்ள சந்தேகங்களை கேட்டு அறிய வேண்டும். சட்ட விதிகள் அடிப்படையில் கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டும்.
தற்போது கோப்புகளின் நிலை கண்காணிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவது இந்த காலகட்டத்தின் கட்டாயம். ஆன்லைன் முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அனைத்து துறைகளும் இதே போல் மாதம் ஒரு முறை பயிற்சி முகாம் நடத்துவது அவசியம். இதன் மூலம் அனைத்து துறையினரும் கற்க முடியும். முடிவெடுக்கவும், நிர்வாகத்திறனை மேம்படுத்தவும் இது போன்ற பயிற்சிகள் உதவும். கோப்புகளை வாரம் தோறும் அனுப்பி வைக்கும் நடைமுறையை துறைகள் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நகரமைப்பு துறை செயலாளர் மகேஷ், தலைமை நகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி நகரமைப்பு குழும உறுப்பினர் செயலர் புவனேஸ்வரன், துணை நகர அமைப்பாளர்கள் விஜயநேரு, கந்தர்செல்வன் கலந்து கொண்டனர். முகாமில், நகர மற்றும் கிராம அமைப்பு துறை, புதுச்சேரி நகரமைப்பு குழுமம், குடிசை மாற்று வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 65 அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
முகாமில் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் முன்னாள் இயக்குனர் எஸ்.கே.தாஸ் குப்தா கலந்து கொண்டு கோப்புகள் கண்காணிப்பு, செயல்திறன், கோப்புகள் மேலாண்மை, பதிவுகள் மேலாண்மை மற்றும் அது தொடர்புடைய சட்டம் மற்றும் விதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 குறித்து பயிற்சியளித்தார். தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி அடிப்படையில் தேர்வுகளை நடத்தினார். இதில் பெரும்பாலானோர் 80 முதல் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர்.
வெவ்வேறு சம்பவத்தில் மூதாட்டிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவி மணிமேகலை (வயது 60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாண்டுரங்கன் இறந்துவிட்டதால் மணிமேகலை தனது இளைய மகன் மணிகண்டன் பராமரிப்பில் இருந்து வந்தார். உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மணிமேகலை அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் கனகசெட்டிக்குளம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி முத்துலட்சுமி (85) வயது முதிர்ச்சியினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்காலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரின் மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் காந்தி சாலையை சேர்ந்தவர் வி.எம்.சி.வி. கணபதி (வயது62). இவர் புதுச்சேரி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர். மாநில முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் ஆவார். இவரது மனைவி அருமைக்கண்ணு (வயது 61). இவர்களது மகன், மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சமீப காலமாக கணபதி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் திரு-பட்டினத்தில் வசித்து வந்தனர். சமீபகாலமாக இருவருக்குமிடையே மன வருத்தம் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருமைக்கண்ணு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் அருமைக்கண்ணு திடீரென்று மாயமானார். அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்த கணபதி பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனாலும் அருமைக்கண்ணுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து திரு-பட்டினம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து அருமைக்கண்ணுவை தேடி வந்தனர்.
இதையொட்டி திருமலைராஜன் ஆற்று கரையோரத்தில் செருப்புகள் கிடந்ததைப்பார்த்து ஆற்றில் நேற்று முன்தினம் போலீசார் அவரை தேடினர். இரவாகி விட்டதாலும், ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக காணப்பட்டதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டு, நேற்று காலை தீயணைப்புத்துறையினர் மீனவர்கள் உதவியுடன் மீண்டும் தேடினர்.
அப்போது திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை அருகே ஆற்றின் கரையோரத்தில் முட்புதரில் அருமைக்கண்ணுவின் உடல் சிக்கி கரை ஒதுங்கி இருந்தது தெரிய வந்தது. மீனவர்களின் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அருமைக்கண்ணு தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
தவளக்குப்பம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி ஒரு லாரி நேற்று நள்ளிரவு கிரஷர் மணலை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அதேபோல் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தவளக்குப்பம் அருகே வந்போது லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த மணல் நடுரோட்டில் கொட்டியது. அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போக்குவரத்து போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேர்மை அரசியலை முன்னெடுத்து செல்லவும், கம்யூனிஸ்டு கட்சிகளின் பீகார் சட்டசபை தேர்தல், கேரளா உள்ளாட்சி தேர்தல் வெற்றி அரசியல் விளக்க பொதுக்கூட்டம் சுதேசி காட்டன் மில் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம், லெனினிஸ்டு கட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன், லெனினிஸ்டு கட்சி தலைமை குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் 23 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் நேற்று (நேற்று முன்தினம்) போராட்டம் நடந்தது.
நீதிமன்றம், தேர்தல்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளுக்கு தனித்தன்மை உள்ளது. ஆனால் அவை அனைத்தும் மத்திய அரசின் பேச்சை கேட்டு நடக்கிறது. புதிய கட்சிகள் தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்கு கொள்கை, லட்சியம் முக்கியம். தற்போது புதிய கட்சி தொடங்குபவர்கள் விருப்பப்பட்டு தொடங்குகிறார்களா? என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் பலத்தையும், வாக்குகளை பிரிக்கவும் புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராகவும், கார்பரேட்காரர்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறது. டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்ட கிரண்பெடி இப்போது புதுவையை முழு அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். புதுச்சேரியில் பெயருக்கு தான் நாராயணசாமி முதல்-அமைச்சராக உள்ளார். கவர்னராக உள்ள கிரண்பெடி நியாய விலை கடையை மூடிவிட்டார். அரிசி வினியோகத்தை தடுத்து நிறுத்திவிட்டார். அவருக்கு எதிராக வலுவான ஒரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களின் விருப்பமும் அதுதான். நம்மால் நிச்சயம் நாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதேச குழு உறுப்பினர் முருகன், லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தனூர் அணை திறக்கப்படாத நிலையில், நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக வந்த தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு பிறகு சொர்ணாவூர் அணை நிரம்பி வழிவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாகூர்:
சாத்தனூர் அணை திறக்கப்படாத நிலையில், நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக வந்த தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு பிறகு சொர்ணாவூர் அணை நிரம்பி வழிவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நிவர், புரெவி புயல் மழையால் புதுச்சேரியில் உள்ள ஏரிகள், குளங்கள், படுகை அணைகள், அணைக்கட்டுகள் நிரம்பி வழிந்தன. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ஏரி, குளங்களுக்கு மேலும் தண்ணீர் வந்தது. தாழ்வான பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
சாத்தனூர் அணை திறக்கப்படாத நிலையில், கன மழையால் நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக வந்த தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு பிறகு சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி வழிவது பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரையாம்புத்தூர் அடுத்த சொர்ணாவூர் கிராமத்தில் அணைக்கட்டு உள்ளது. பாகூர் விவசாயிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புதுச்சேரி, தமிழக பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.
பெரும்பாலும் சாத்தனூர் அணைக்கட்டு நிரம்பி வழியும் தருவாயில் அல்லது அணைக்கட்டு திறக்கப்படும் பட்சத்தில் தான் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்து சேருவது வழக்கம்.
ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விளை நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் வாய்க்கால்கள் வழியாகவும், விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு நிரம்பி வழிவதாலும் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு சுமார் 1.20 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் சொர்ணாவூர் அணைக்கட்டு சாத்தனூர் அணை திறக்கப்படாமலேயே 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் வழிந்தோடும் தண்ணீரின் அழகை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசிப்பதோடு, குளித்து மகிழ்ந்து வருகின்றனர். செல்பியும் எடுத்துச் செல்கின்றனர். இதையொட்டி பொதுப்பணித்துறை ஊழியர்கள் அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி வழிவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கிராம மக்களும் தண்ணீர் வருகையை கண்டு ரசித்து வருகின்றனர்.
இது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், தளவானூர் அணைக்கட்டு நிரம்பி வழிவதாலும் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கட்டில் மதகு திறக்கப்பட்டு பங்காரு வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. இதனால் பாகூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும், கோடைகாலத்தை சமாளிக்கவும் இது ஏதுவாக இருக்கும். தண்ணீர் வருகையால் பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 4½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. உயிர்ப்பலியும் தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக தொற்று பாதிப்பு மளமளவென சரிந்து வருகிறது.
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 126 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 73 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்து 501 பேருக்கு தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 468 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 37 ஆயிரத்து 775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 201 பேர் ஆஸ்பத்திரியிலும், 138 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 36 ஆயிரத்து 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 624 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 511 பேர் புதுச்சேரியையும், 45 பேர் ஏனாமையும், 8 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் உயிரிழப்பு 1. 65 சதவீதமாகவும் குணமடைவது 97.45 சதவீதமாகவும் உள்ளது.
நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையிலும் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அரியாங்குப்பம்:
விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரானது ஊசுடு ஏரி வந்தடைந்த பிறகு தான் சுண்ணாம்பாற்றில் வருவது வழக்கம். தற்போது ஊசுட்டேரி நிரம்பி காணப்படுவதால், தற்போது நேரடியாக சுண்ணாம்பாற்றில் மழை நீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாததால் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வில்லியனூர் பகுதி மற்றும் நோணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் தாழ்வான கிராமங்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
மேலும் இறுதியாக உள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையிலும் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகுழாமில் உள்ள படகுகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரானது ஊசுடு ஏரி வந்தடைந்த பிறகு தான் சுண்ணாம்பாற்றில் வருவது வழக்கம். தற்போது ஊசுட்டேரி நிரம்பி காணப்படுவதால், தற்போது நேரடியாக சுண்ணாம்பாற்றில் மழை நீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாததால் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வில்லியனூர் பகுதி மற்றும் நோணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் தாழ்வான கிராமங்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
மேலும் இறுதியாக உள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையிலும் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகுழாமில் உள்ள படகுகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.






