என் மலர்
புதுச்சேரி
உண்ணாவிரத போராட்ட முடிவில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்-அமைச்சர் நாராயணசாமி கிழித்தெறிந்தார். இதன் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை அண்ணாசிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலையில் நிறைவடைந்தது. முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், புதுவை கவர்னர் கிரண்பேடி செயல்பாடு குறித்தும் கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது:-
மதசார்பற்ற அணியில் கருத்து வேறுபாடு இல்லை. மதசார்பற்ற அணி ஒருங்கிணைந்து புதுவையை காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வருகிறது. புதுவைக்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரை மோடி இரண்டாக உடைத்து யூனியன் பிரதேசமாக்கினார். அதேபோல் புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும். அதனை எதிர்க்க மதசார்பற்ற அணியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும். தமிழகத்தோடு இணைத்தால் புதுவையின் தனித்தன்மை போய் விடும். தனித்தன்மையை காக்க உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது திடீரென மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்-அமைச்சர் நாராயணசாமி கிழித்தெறிந்தார். இதன் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் குளிர்பானம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர்.

முதலியார்பேட்டையில் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமலா (வயது42). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விமலாவின் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அதையடுத்து கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் லேம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த பெயிண்டர் தில்லைநடராஜன் (42) என்பவரை விமலா மறுமணம் செய்தார். தில்லை நடராஜனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை விமலா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தில்லை நடராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவர்னர், ஆட்சியாளர்களின் விருப்பு, வெறுப்பினால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்துவிட்டது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத்தர அ.தி.மு.க. வலியுறுத்தியும் காங்கிரஸ் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு இருந்தபோது 4 மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றம் செய்ய புதுவை அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. மீதமுள்ள கல்லூரிகளையும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முன்வராத கவர்னர் எதையோ மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு அந்த பிரச்சினையை அனுப்பியுள்ளார். இதிலும் ஆட்சியாளர்களின் எண்ணம் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் ஒரு இடம்கூட அரசுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். தேசிய மருத்துவ ஆணையத்தினுடைய உத்தரவின்படி 50 சதவீத இடங்களை சட்ட ரீதியில் பெறவேண்டிய புதுவை அரசு அதற்கான எந்த முயற்சியையும் சட்டமன்றத்தின் மூலம் எடுக்காமல் தனியார் கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டு வருகிறது.
50 சதவீத இடஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு சம்பந்தமாக கவர்னரே அனுமதி வழங்கவேண்டிய அதிகாரம் உள்ள நிலையில் அவர் தேவையற்ற முறையில் மத்திய அரசுக்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றுவிட்டார். இதில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு விரித்த மாணவர்களுக்கு எதிரான வலையில் கவர்னர் எதையோ நினைத்துக்கொண்டு விழுந்துள்ளார். இதனால் 50 சதவீத இடஒதுக்கீடு பெற முடியாத சூழல் உருவாக்கப்பட்டு விட்டது.
தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு இல்லாமலும், 50 சதவீத இடஒதுக்கீடு பெறாமலும் சென்டாக் கலந்தாய்வு நடத்த கவர்னர் அறிவித்திருப்பது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசின் எண்ணத்தை ஈடேற்றுவதாக உள்ளது. கவர்னரும், ஆட்சியாளர்களும் அவரவர் விருப்பு, வெறுப்பு அரசியலால் இவ்வாண்டு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வியின் கனவை சிதைத்துவிட்டார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்கிறார்கள் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோரை அழைத்துப் பேசினார். அப்போது கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார்கள். தொகுதி வாரியாக கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கு எதிராக இளைஞர், மாணவர் காங்கிரசார் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் எங்களிடம் தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கேற்ப பணிகளை செய்து வருகிறோம். எங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடு, முரண்பாடுகள் இல்லை. சிலர் வேண்டுமென்றே குழப்பங்களை விளைவிக்க சதி வேலை செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் நமச்சிவாயம், முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
கடலில் மீன் பிடித்தபோது மீனவர்கள் வலையில் ஆளில்லா விமானம் சிக்கியது. ஆளில்லா விமானத்தை பார்க்க தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்த மீனவர்களும் ஏராளமான அளவில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்தவர் சுதாகர் என்கிற நாகலிங்கம் (வயது 48). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந் தேதி 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான மரக்காணத்தில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடந்த 15-ந் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களது வலையில் ஆளில்லா விமானம் ஒன்று சிக்கியது. இதுபற்றி கடலோர காவல் படையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலில் இருந்து அந்த மீனவர்கள் நேற்று காலை தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு திரும்பினர். தங்களது வலையில் சிக்கிய ஆளில்லா விமானத்தை கடலோர காவல்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், இந்திய கடலோர காவல்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் அங்கு வந்து அந்த விமானத்தை பார்வையிட்டனர்.
அந்த விமானம் விமானப்படை, கப்பல் படை, ராணுவம் ஆகியவற்றில் குறிப்பிட்ட இலக்கை தாக்குவதற்கான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ‘மாடல் டார்கெட்’ என்பது தெரியவந்தது. ஆளில்லா விமானத்தை பார்க்க தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்த மீனவர்களும் ஏராளமான அளவில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர்கள் வலையில் சிக்கிய ஆளில்லா விமானத்தை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க உள்ளதாக புதுவை கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.
அரியாங்குப்பம் பகுதியில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. இதனை ஆணையர் சவுந்திரராஜன் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.
அரியாங்குப்பம்:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் தாழ்வான பகுதி, காலி மனைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற ஊழியர்களுக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு, நாகூரார் தோட்டம், சண்முகம் நகர், பி.சி.பி. நகர், காக்காயந்தோப்பு மற்றும் மணவெளி தொகுதி சின்ன வீராம்பட்டினம், ஓடைவெளி, கலைஞர் நகர்- கன்னியாக்குளம், ராயல்நகர், டோல்கேட்-அரவிந்தர் நகர், நோணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது. இதனை ஆணையர் சவுந்திரராஜன் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 130 டாலராக இருந்தபோது கியாஸ் சிலிண்டர் ரூ.350-க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது கச்சா எண்ணெய் பீப்பாய் 60 டாலர்கள்தான்.
இந்த நேரத்தில் விலைகளை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்றுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தினாலே பாரதீய ஜனதா போராட்டம் நடத்தும். இப்போது கியாஸ் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இந்த விலை உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தும். இதுவரை 18 முறை கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விலை உயர்வினை திரும்பப்பெற வேண்டும்.
விவசாயிகள் தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்துகிறார்கள். பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்கள் நாட்டிற்கு பெருமளவு கோதுமை தரும் மாநிலங்கள். விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே பிரதமர் விவசாயிகளை அழைத்துப்பேசி சுமூக முடிவு காணவேண்டும். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் அண்ணா சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. மழை பெய்தாலும் இந்த போராட்டம் தொடரும்.
புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து 50 சதவீத இடஒதுக்கீட்டினை பெறுவதற்கான சட்டவரையறை தயார் செய்து கடந்த ஏப்ரல் மாதம் கவர்னருக்கு அனுப்பினோம். அதை 45 நாட்கள் தன்னிடம் வைத்துக்கொண்டு அதன்பின் மத்திய அரசுக்கு அவர் அனுப்பினார். மத்திய அரசின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும் இதுவரை அதற்கு ஒப்புதல் வரவில்லை.
புதுவையில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர ஒப்புக்கொள்ளப்பட்டுதான் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் 2 கல்லூரிகள் தங்களை சிறுபான்மையினர் கல்லூரி என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை தருவதில்லை. மற்றொரு கல்லூரியில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களை பெற கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதையே காரணம் காட்டி தற்போது மாணவர்கள் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அரசு சார்பில் மேல்முறையீடு செய்வோம்.
இதேபோல் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பெற அரசாணை வெளியிட நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதற்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டார். அதுதொடர்பான கோப்பினையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக அரசுப்பள்ளி மாணவி ஒருவர் ஐகோர்ட்டில் வழக்குப்போட்டுள்ளார். அதில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த இரு விஷயங்களிலும் எந்த முடிவு வந்தாலும் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருக்கனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே வாதானூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). விவசாயி. இவரது மகன் ஹேமமாலினி (23) எம்.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹேமமாலினி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஹேமமாலினியை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஹேமமாலினி பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித்தனியாக வெளியிடப்பட்டது.
தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு 23 சதவீத இடங்களையே ஒதுக்கி வருகின்றன. அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கக்கோரி பெற்றோர், மாணவர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அரசுக்கு 50 சதவீத இடங்களை பெறுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கவர்னர் மாளிகையில் நேற்று கவர்னர் கிரண்பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான கலந்தாய்வை வருகிற 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி சென்டாக் செயல்பட வேண்டும். 2020-21 சென்டாக் கையேட்டில் குறிப்பிட்டுள்ள அடிப்படையில் தான் அரசு, நிர்வாக ஒதுக்கீடு இடம்பெறவேண்டும். சென்டாக் எவ்வித தாமதமும் இன்றி மருத்துவ மாணவர் சேர்க்கையை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
புதுவை அரசுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறுவது, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதனை பெற மாநில அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். கடந்தாண்டு நிர்ணயித்த அதே கல்வி கட்டணம் தொடரும். வரும் காலங்களில் அரசு அனுமதி தந்த பிறகே சென்டாக் கையேட்டை பிரசுரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்க பணியின் காரணமாக, 129 ஆண்டுகள் பழமையான ஆற்று பாலம் இடித்து அகற்றப்பட்டது.
நெல்லிக்குப்பம்:
கடலூர்-புதுச்சேரி மாநிலத்தை பிரிக்கும் வகையில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆறு கடலூர் அருகே வங்க கடலில் கலந்து வருகிறது. இதில் கடலூர் -புதுச்சேரி போக்குவரத்து வசதிக்காக ஆல்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரும்பிலான பாலம் கட்டப்பட்டது. அதாவாது 1,888 ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 1891-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்பின்னர் தற்போதைய காலக்கட்டத்தில் வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக, இந்த குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அதனருகிலேயே புதிதாக பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், பழைய இரும்பு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதில் செடிகொடிகள் படர்ந்து புதர் மண்டி காட்சி அளித்தது.
இந்தநிலையில் போக்குவரத்து வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்கம் செய்து வருகிறது. முதற்கட்டமாக கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்காணங்குப்பம் பகுதியில் இருந்த சிறிய பாலம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த படியாக ஆல்பேட்டை பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள ஆங்கிலேயர் காலத்து பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, பழைய பாலத்தை இடிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது. தலைமுறைகள் பல கடந்து வரலாற்று சின்னமாக இருந்த பாலம் இடிப்பது பற்றி அறிந்த பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு வந்து பார்வையிட்டனர். பலர் தங்களது செல்போனில் படம் பிடித்தும் சென்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தற்போது இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், கட்டுமான பணிகள் தொடங்கும். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

புதுவையில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
புதுச்சேரி:
நிவர், புரெவி புயலால் புதுவையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் வானிலை எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய சாரல் மழை பெய்தபடி இருந்தது. நேற்று காலையிலும் இது தொடர்ந்தது. பகல் 11 மணி வரை வெயில் முகம் காட்ட மறுத்ததால் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதியம் 1 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3.30 மணிவரை விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. அதன்பிறகு வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
இதனால் புதுவை நகர சாலைகளில் வழக்கம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள் மதியம் 1 மணிக்கு முடிந்ததால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு சென்றனர். புஸ்சிவீதி, கடற்கரை சாலை, முதலியார்பேட்டை, ரெயின்போநகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி யது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் அதில் மிதந்து ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ரெயின்போ நகர் உள்ளிட்ட பல இடங்களில் தேங்கி கிடந்த தண்ணீரை நகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் வெளியேற்றி அப்புறப்படுத்தியதால் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இரவிலும் மழை பெய்தபடி இருந்தது.
நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையிலான நிலவரப்படி புதுவையில் 3 செ.மீ. மழை பதிவானது.
திருபுவனை அருகே திருபுவனைபாளையம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது 59). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து, வெளிப்புறமாக விழுந்தது.
இந்த சத்தம்கேட்டு சாந்தி மற்றும் அவரது மகன், மகள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். வீட்டின் சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை விடாது பெய்தது. இதனால் மீண்டும் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. வாய்க்கால்களிலும், தெருக்களிலும் மழை தேங்கி உள்ளது. கடலூர்- பாண்டி மெயின்ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தன்பேட் புதுநகர், கன்னியகோவில் ரத்னா நகரில் உள்ள வீடுகளில் மீண்டும் தண்ணீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தும், மழைநீர் தேங்கியும் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரியில் வரும் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வரும் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
புதுவை சாரதாம்பாள் நகர் மலர்கொடி (தையல் பயிற்சி ஆசிரியை):-
பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இது ஆபத்தானது. இறுதியாண்டு மாணவர்களை மட்டும் தான் கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களை வரவேற்கலாம். செலவழிக்க வழிஇல்லாமல் தான் அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கிறோம். தமிழக பாட திட்டத்தை பின்பற்றும் நிலையில் அங்கு இன்னும் பள்ளிகளை திறக்காதபோது இங்கு மட்டும் திறப்பது முரண்பாடானது. பெற்றோரிடம் கருத்து கேட்காமல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தடுப்பூசி வந்த பிறகு பள்ளிக்கூடங்களை திறப்பது நல்லது.
பூராணாங்குப்பம் பத்மாவதி (குடும்பத் தலைவி):-
எனது குழந்தை தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த கல்வியாண்டு முடிவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் நடத்த முடியுமா? என்பது சாத்தியமில்லாதது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வகுப்பு நடத்தலாம். கொரோனா தடுப்பூசி அல்லது மருந்து கிடைக்கும் வரை பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம்.
கோபாலன் கடை காஞ்சனா சக்திவேல்:
எனது பெண் குழந்தைகள் 6, 8-ம் வகுப்புகளில் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகிறார்கள். பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைத்து பாடங்களை நடத்தலாம். பள்ளிக்கூடங்களை திறப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த அறிவிப்பை அரசு பரிசீலிக்க வேண்டும்.
காந்திதிருநல்லூர் ராஜலட்சுமி (தனியார் பள்ளி ஆசிரியை):
நான் தனியார் பள்ளி ஆசிரியை. கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வியாக இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கும் இது மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
செந்தில்குமார், முதலியார்பேட்டை (எலக்ட்ரீசியன்):
எனது 3 பெண் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். கொரோனாவால் 9 மாதங்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் படிப்புத் திறன் குறைந்துள்ளது. ஆன்லைன் வகுப்பு, தேர்வு திருப்திகரமாக இல்லை. பள்ளிகள் திறப்பது நல்லது. குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதபோதும் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கு பள்ளிக்கு சென்றே படிக்கலாம். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேவதி லாஸ்பேட்டை (குடும்பத் தலைவி):
புதுவையில் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால் தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பள்ளிகளில் பொது கழிப்பறைகளை தான் மாணவர்கள் பயன்படுத்துவார்கள். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம். 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.