search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விரிவாக்க பணி"

    • ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது.
    • சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் ஊராட்சி சிறுவத்தூர் திடீர்குப்பம் சாலை முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது. இதில் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் விஜயதேவி தேவராசு, அங்கு செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வீக சிகாமணி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். என்ஜினியர் ஜெய்சங்கர், அரசு ஒப்பந்ததாரர் ராமதாஸ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ் ணன், அங்கு செட்டிபாளை யம் தி.மு.க. ஊராட்சி செய லாளர் சிற்றரசு, ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
    • கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தன மாக நடைபெறுவதை கண்டித்து நடத்தப்படுகிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி கடை வீதியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி ஒப்பந்த தாரர் அலட்சிய போக்கை கண்டித்து கடை யடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். விக்கிரவாண்டியில் நடந்த வர்த்தகர் சங்க கூட்டத்திற்கு சங்க தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க அமைப்பாளர் தனசேகரன், கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியா வூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொரு ளாளர் சாதிக்பாட்ஷா வரவேற்றார்.

    கூட்டத்தில் விக்கிர வாண்டி கடைவீதியில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி, மின்கம் பங்கள் மாற்றியமைக்கும் பணிக்கு நியமனம் செய்யப் பட்ட ஒப்பந்ததார் அலட்சிய போக்கால் கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தனமாக நடைபெறுவதை கண்டித்தும், தினமும் வயதான முதியோர்கள், பொதுமக்கள் சாலையில் விழுந்து அடிபட்டு பாதிக்கப் படுவதை கண்டித்தும் வரும் மே 3-ந் தேதி வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளை மூடி கண்டன ஆர்பாட்டம் செய்வது எனவும், மே 5-ந் தேதி வணிகர் தினத்தன்று கடை விடுமுறை விட்டு ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் வணிகர்கள் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறை வேற்றினர். இதில் சங்க துணைத் தலைவர்கள் மணி வண்ணன், அஷரப் உசேன், நிர்வாகிகள் சங்கர், சிவா, சந்தோஷ், குமார கிருஷ்ணன், முருகவேல், சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் பணி நடக்கிறது.
    • தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யூனியனுக்கு ட்பட்ட கோவிலூர் முதல் மிட்டாரெட்டிஅள்ளி வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, அமைப்பு செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் அன்பு கார்த்தி, மனோகரன், ஒப்பந்ததாரர் அண்ணா துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலுார்:

    வேலுாரில் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக, நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும், சேலம், பெங்களூர், சென்னை இணைப்பு பகுதியானதால் அனைத்து வாகனங்களும் வேலுார் வழியாகவே செல்கின்றன.

    இதனால், நகரின் இதயப்பகுதியான கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இதனால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதை தடுக்கவேண்டும், நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவியாய் தவித்தனர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் முற்றுகையிடுவதை தடுக்க, சர்வீஸ் லைன்களில் திருப்பி விடப்பட்டன. ஆனால், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

    ஏனெனில், சர்வீஸ் சாலையில் மெக்கானிக் ஷெட்டுகள் அதிகளவில் இருப்பதால், வாகன போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு எட்டப்படாமலே இருக்கிறது. இதை தவிர்க்க, இப்போது போக்குவரத்து நடக்கும் கிரீன் சர்க்கிள் பகுதியிலிருந்து சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் வரையும், அங்கிருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சர்வீஸ் லைன்கள் இப்போது உள்ள 5 மீட்டர் அகலத்தை 8.5 மீட்டராக அதிகரிக்கப்படும். இதனால், போக்குவரத்து எளிதாகும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்திருந்தார். கடந்த ஆகஸ்டு மாதமே அதற்கான பணிகள் தொடங்கும் என கூறியிருந்தார்.

    ஆனால், இன்று வரை அதற்கான எந்த பணிகளுக்கான முகாந்திரமும் தென்படவில்லை. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ''கிரீன் சர்க்கிள் அளவு குறைப்பது, சர்வீஸ் லைன் அகலத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு ஸ்கெட்ச் போட்டு தந்தோம். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (நகாய்) பங்கு வருகிறது. அதனால், அந்த திட்ட அறிக்கையை நகாய் ரீஜினல் ஆபீசருக்கு அனுப்பினோம். பலமுறை தொடர்ந்து இது குறித்து பேசி வருகிறோம்.

    வேலுார் வந்த மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சரிடமும் இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அவர் 'டெக்னிக்கல்' ரிப்போர்ட் வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உடனடியாக சாலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்க முயற்சித்து வருகிறோம்' என்றார்.

    • சின்ன காவனம் பகுதியில் ஏலியம்பேடு-பழவேற்காடு சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சாலை விரிவாக்கப்பணிக்கு வீடு, கோவில்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சின்ன காவனம் பகுதியில் ஏலியம்பேடு-பழவேற்காடு சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில் உள்ளபெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்ன காவனம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் 5 கோவில்கள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட இருக்கிறது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சாலை விரிவாக்கப்பணிக்கு வீடு, கோவில்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தில் இருந்து சிலர் வெளிநடப்பு செய்தனர்.  இதனால் கூட்டத்தில பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
    • கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமாக விளங்கி வருவது ஊட்டி.

    சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.

    கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை மிக குறுகலாகவும், சாலையின் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் வளர்ந்தும்,சாலை ஓரத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டும் காணப்பட்டு வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதனை சரிசெய்யும் விதமாக கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணியும், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி இயற்கை அழகை ரசித்து செல்லும் விதமாக இன்டெர் லாக் கற்களை பதிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது.

    தற்போது அந்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது
    • சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.

    கோத்தகிரி,

    கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் மழையால் கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது. இதனால் சாலை குறுகலாகி போக்குவரத்து ஆங்காங்கே பாதிப்படைந்தது. இதனை சரி செய்யும் விதமாக மண்சரிவுகள் ஏற்பட்ட மற்றும் குறுகலாக இருந்த சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல தொய்வு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் புதிதாக போடப்பட்டுள்ள வேகத்தடைக்கான பணிகளும் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்படைகிறது. எனவே இந்த இந்த சாலைகளில் நடைபெற்றிருக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.
    • கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் ஒன்றியம் கொட்டவாக்கம் ஊராட்சியில் கால்வாய் ஓரம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் 9 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். கடந்த 8 மாதத்துக்கு முன்பு பரந்தூர்-கம்மவார் பாளையம் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவெடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.

    இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாற்று இடம் அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இருந்தது.

    ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் 9 குடும்பத்தினருக்கும் இதுவரை வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்துடன் கிராம சேவை கட்டிடத்தில் தவித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடுகளை இழந்தவர்கள் இடிக்கப்பட்ட தங்களது வீட்டு முன்பு மாவட்ட நிர்வாகத்தையும், நெடுஞ்சாலைத்துறையினரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வீட்டை இழந்த சிவசங்கரி என்பவர் கூறியதாவது:-

    எங்கள் வீட்டை இடித்து தள்ளியதால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சேவை மைய கட்டிடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கி வருகிறேன். இங்கு உள்ளவர்களை திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள் வீட்டை இழந்ததால் தங்கள் கணவரை பிரிந்து சென்று விட்டனர்.

    வீடுகளை இழந்த குடும்பத்தினர் 45 பேரும் இரண்டு அறைகளில்தான் தங்கி உள்ளோம். பெண்கள் கழிவறை செல்வதற்கு கூட இடமின்றி தவித்து வருகிறோம். இங்கு சமையல் செய்யவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ போதிய வசதிகள் இல்லை.

    எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×