என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

    முதலியார்பேட்டையில் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமலா (வயது42). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விமலாவின் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

    அதையடுத்து கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் லேம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த பெயிண்டர் தில்லைநடராஜன் (42) என்பவரை விமலா மறுமணம் செய்தார். தில்லை நடராஜனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை விமலா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தில்லை நடராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×