என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் வரும் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
புதுவை சாரதாம்பாள் நகர் மலர்கொடி (தையல் பயிற்சி ஆசிரியை):-
பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இது ஆபத்தானது. இறுதியாண்டு மாணவர்களை மட்டும் தான் கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களை வரவேற்கலாம். செலவழிக்க வழிஇல்லாமல் தான் அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கிறோம். தமிழக பாட திட்டத்தை பின்பற்றும் நிலையில் அங்கு இன்னும் பள்ளிகளை திறக்காதபோது இங்கு மட்டும் திறப்பது முரண்பாடானது. பெற்றோரிடம் கருத்து கேட்காமல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தடுப்பூசி வந்த பிறகு பள்ளிக்கூடங்களை திறப்பது நல்லது.
பூராணாங்குப்பம் பத்மாவதி (குடும்பத் தலைவி):-
எனது குழந்தை தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த கல்வியாண்டு முடிவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் நடத்த முடியுமா? என்பது சாத்தியமில்லாதது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வகுப்பு நடத்தலாம். கொரோனா தடுப்பூசி அல்லது மருந்து கிடைக்கும் வரை பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம்.
கோபாலன் கடை காஞ்சனா சக்திவேல்:
எனது பெண் குழந்தைகள் 6, 8-ம் வகுப்புகளில் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகிறார்கள். பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைத்து பாடங்களை நடத்தலாம். பள்ளிக்கூடங்களை திறப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த அறிவிப்பை அரசு பரிசீலிக்க வேண்டும்.
காந்திதிருநல்லூர் ராஜலட்சுமி (தனியார் பள்ளி ஆசிரியை):
நான் தனியார் பள்ளி ஆசிரியை. கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வியாக இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கும் இது மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
செந்தில்குமார், முதலியார்பேட்டை (எலக்ட்ரீசியன்):
எனது 3 பெண் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். கொரோனாவால் 9 மாதங்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் படிப்புத் திறன் குறைந்துள்ளது. ஆன்லைன் வகுப்பு, தேர்வு திருப்திகரமாக இல்லை. பள்ளிகள் திறப்பது நல்லது. குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதபோதும் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கு பள்ளிக்கு சென்றே படிக்கலாம். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேவதி லாஸ்பேட்டை (குடும்பத் தலைவி):
புதுவையில் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால் தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பள்ளிகளில் பொது கழிப்பறைகளை தான் மாணவர்கள் பயன்படுத்துவார்கள். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம். 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
தொடர் கனமழையால் புதுச்சேரியில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய அரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து படிப்படியாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளை திறக்கவும் அரசு முடிவு செய்து இளங்கலை, முதுகலை படித்து வரும் மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்க உள்ளன.
கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் வரும் ஜனவரி 4-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லலாம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து பாடங்களில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் முழுவதும் பணியில் இருப்பார்கள். இந்த நாட்களில் மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது.
அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் முழுநேரம் செயல்படும். மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற ஏற்பாடுகளை அந்தந்த கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரிகளை பொறுத்தவரை இளங்கலை மற்றும் முதுகலை படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இன்று (வியாழக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும். அங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் 121 மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.22 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் நேர்மையான முறையில் வெளியிடப்படும். எனவே யாரும் குறுக்கு வழியில் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் சனிபகவான் கோவில் உள்ளது. இங்கு வருகிற 27-ந் தேதி காலை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
சனிபெயர்ச்சி விழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் 3 கட்டமாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில் பக்தர்கள் முககவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். (ஆன்லைன் முகவரி - www.thirunallarutemple.org).
இந்த நடைமுறையானது, வருகிற 19-ந் தேதி முதல் 24-1-2021 வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், இலவச தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் (ரூ.1000, ரூ.600 மற்றும் ரூ.300) என அனைத்திற்கும், ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
விழாவின் போது பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது.
கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் அனைவரும் கோவில் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள், தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சனிபகவானின் நளன் குளத்தில், கொரோனா காலத்தை முன்னிட்டு பக்தர்கள் நீராட இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை சனிப்பெயர்ச்சி விழா முடியும் வரை நீடிக்கும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நளன் குளத்தில் தற்போது சிறிதளவே தண்ணீர் இருப்பதால், கோவில் நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி சில பக்தர்கள் குளித்து, தங்கள் ஆடைகளை குளத்தில் வீசி செல்வதால் பக்தர்கள் நீராடலை தவிர்க்கும் வகையில், தண்ணீரை முழுமையாக இறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இலவச தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனத்திற்காக கோவிலின் 4 வீதிகளிலும் பக்தர்கள் நடந்து செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, கம்பு மற்றும் தகறத்தால் ஆன, நீண்ட நிழல் பந்தல் அமைக்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவை போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கஞ்சனூரில் நடந்து வருகிறது.
நாள்தோறும் 100 போலீசார் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று காலை ஐ.ஆர்.பி.என்-க்கு சொந்தமான போலீஸ் பஸ்சில் சுமார் 50 போலீசார் செஞ்சி சென்றனர்.
விழுப்புரம் சாலையில் அரியூர் அருகே சென்றபோது திடீரென போலீஸ் பஸ்சின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ் வலதுபுறமாக இழுத்து சென்றது. அப்போது எதிரே வில்லியனூர் நோக்கி வந்த சரக்கு வாகனத்தின் மீது பஸ் மோதியது.
இதில், சரக்கு வாகனத்தின் முன்பக்கம் முழுவதுமாக நசுங்கியது. டிரைவர் இடிபாடுகளில் சிக்கினார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளை அகற்றி டிரைவரை மீட்டனர். ஒரு சில நிமிடங்களில் அவர் இறந்தார். விபத்தில் பலியான டிரைவர் கண்டமங்கலம் சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார்(25) என்பது தெரிய வந்தது.
இவர், வில்லியனூரில் தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை கியாஸ் குடோனில் சிலிண்டர் எடுப்பதற்காக வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
பஸ் மோதிய விபத்தில் பஸ்சில் பயணித்த 2 போலீசார் படுகாயமடைந்தனர். இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் ஜாக் என்ற ஜெகன். இவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்
ஜெகன் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அவர் ஜெகன் அடைக்கப்பட்டு இருந்த அறையில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு ஒரு செல்போன், பேட்டரி இருந்தது. அதனை பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை சிறையில் கைதிகளிடம் இருந்து அடிக்கடி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மாமூல் வாழ்க்கை திரும்பி வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி முதல் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
புதுவையில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் ஜனவரி 4ந்தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகுப்புகளும் ஜன.4ந்தேதியிலிருந்து காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும். அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம்.
புதுச்சேரியில் ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மாமூல் வாழ்க்கை திரும்பி வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி முதல் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கின்போது மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளன. தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்பட தொடங்கின. புதுவையிலும் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறக்கலாம் என்ற உயர் கல்வி துறையின் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி புதுவையில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை (வியாழக்கிழமை) முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கல்லூரி வகுப்புகள் 6 நாட்கள் நடத்தி, ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும். மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு, ஒருநாள் கல்லூரிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உயர்கல்வித்துறை இயக்குனர்(பொறுப்பு) ருத்ரகவுடு, அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்தனர்.
அவர்கள், தற்போது வகுப்புகள் தொடங்கினால் செமஸ்டர் தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, ‘கல்லூரி முதல்வர்களின் சந்தேகங்களை பல்கலைகழகத்திற்கு இ-மெயில் மூலம் அனுப்பி வையுங்கள். நாங்கள் அது தொடர்பாக ஆலோசனை நடத்தி உங்களுக்கு பதில் தெரிவிப்போம்’ என்று கூறினர்.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது.
கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 22 ஆயிரத்து 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99 லட்சத்து 6 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,750ஆக உயர்ந்துள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சனிபகவான் கோவில் வளாகத்தில் உள்ள நளன் குளத்தில், கொரோனா பரவலை முன்னிட்டு பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நளன்குளத்தில் தற்போது தண்ணீர் இருப்பதால், பக்தர்கள் சிலர் அதில் குளித்து, தங்களது ஆடைகளை குளத்தில் வீசி விட்டுச் செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் குளத்தில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இலவச தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனத்திற்காக கோவிலின் 4 வீதிகளிலும் பக்தர்கள் வரிசையாக நடந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களின் நலன் கருதி, சவுக்கு கட்டை மற்றும் தகரத்தால் நீண்ட நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.






