என் மலர்
செய்திகள்

புதுச்சேரி
புதுவையில் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் நாளை தொடக்கம்
புதுவையில் 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மாமூல் வாழ்க்கை திரும்பி வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி முதல் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கின்போது மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளன. தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்பட தொடங்கின. புதுவையிலும் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறக்கலாம் என்ற உயர் கல்வி துறையின் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி புதுவையில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை (வியாழக்கிழமை) முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கல்லூரி வகுப்புகள் 6 நாட்கள் நடத்தி, ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும். மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு, ஒருநாள் கல்லூரிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உயர்கல்வித்துறை இயக்குனர்(பொறுப்பு) ருத்ரகவுடு, அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்தனர்.
அவர்கள், தற்போது வகுப்புகள் தொடங்கினால் செமஸ்டர் தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, ‘கல்லூரி முதல்வர்களின் சந்தேகங்களை பல்கலைகழகத்திற்கு இ-மெயில் மூலம் அனுப்பி வையுங்கள். நாங்கள் அது தொடர்பாக ஆலோசனை நடத்தி உங்களுக்கு பதில் தெரிவிப்போம்’ என்று கூறினர்.

Next Story