search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கமலக்கண்ணன்
    X
    அமைச்சர் கமலக்கண்ணன்

    புதுச்சேரியில் ஜனவரி 4ந்தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் கமலக்கண்ணன்

    புதுச்சேரியில் ஜனவரி 4ந்தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மாமூல் வாழ்க்கை திரும்பி வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி முதல் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    புதுவையில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் ஜனவரி 4ந்தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    அனைத்து வகுப்புகளும் ஜன.4ந்தேதியிலிருந்து காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும். அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம்.

    புதுச்சேரியில் ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×