என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிமுதல்
    X
    செல்போன் பறிமுதல்

    புதுவை ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

    புதுவை ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் ஜாக் என்ற ஜெகன். இவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்

    ஜெகன் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக அவர் ஜெகன் அடைக்கப்பட்டு இருந்த அறையில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு ஒரு செல்போன், பேட்டரி இருந்தது. அதனை பறிமுதல் செய்தார்.

    இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவை சிறையில் கைதிகளிடம் இருந்து அடிக்கடி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×