என் மலர்
புதுச்சேரி
பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கான தாது உப்புக்கலவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்துவைத்தார்.
புதுச்சேரி:
அனைத்து வகையான மாடுகளுக்கு தாது உப்புக்கலவை கொடுப்பது அவசியமாகும். தாது உப்புக்கலவை என்பது சுண்ணாம்புச்சத்து, மணிச்சத்து போன்ற நுண்சத்துகள் அடங்கிய கலவையாகும். இந்த கலவையானது ஒவ்வொரு மண்ணின் தன்மைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடும்.
புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உணவியல் துறையின் மூலம் மண்வளம் மற்றும் தீவன பரிசோதனை அடிப்படையில் புதுச்சேரி மாடுகளுக்கான பிரத்தியேக தாது உப்புக்கலவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் 5 முதல் 10 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கும். கன்று ஈணும் இடைவெளியை குறைக்கும். இனப்பெருக்க திறன் மேம்படும். இது ஒரு கிலோ ரூ.55-க்கு கல்லூரியின் விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வடிவமாக பிளாஸ்டிக் அல்லாமல் மக்கும் திறன்கொண்ட பைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கால்நடை உணவியல் துறையின் சார்பாக தீவன அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பால் பண்ணையாளர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் என அனைவரும் எளிதில் பயன்படுத்தி மாடுகளின் எடை மற்றும் பால் உற்பத்தியின் அளவுக்கேற்ப சமச்சீர் தீவனத்தை அவரவர் இல்லத்திலேயே நிர்ணயித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த சமச்சீர் தீவனம் அளிப்பதன் மூலம் மாடுகளின் நலன் மற்றும் பால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும்.
இவற்றை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கல்லூரியின் புலமுதல்வர் டாக்டர் ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுவை கவர்னர் தமிழிசை மீண்டும் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். ரேஷன் கடைகள் மூலமாக தீபாவளி பண்டிகைக்காக 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்க அனுமதியளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் குடிமை பொருள் வழங்கல்துறை சார்பில் ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி, மழைக்கால நிவாரணம், பண்டிகைக்கால பரிசு பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வந்தது.
புதுவை மாநிலத்தில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் 317, பாப்ஸ்கோ வில் 35, தனியார் வசம் 25 என மொத்தம் 377 ரேஷன் கடைள் இயங்கி வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரொக்கம் செலுத்தப்பட்டது.
இதனால் மாநிலம் இயங்கி வந்த ரேஷன்கடைகள் மூடப்பட்டது. அதோடு ரேஷன் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சுமார் 40 மாதத்துக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இருப்பினும் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கியது. இதை விநியோகம் செய்ய ரேஷன்கடை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
ரேஷன் கடைகளை திறக்காமலேயே பூட்டிக்கிடந்த அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்காணிப்புடன் அரிசி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களை வழங்க ரேஷன்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
ரேஷன்கடை ஊழியர்களும் கடைகளை திறக்கவும், சம்பளம் வழங்கவும் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு புதிய அரசு ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கப்போவதாக அறிவித்தது. இதற்கான பூர்வாங்க பணியில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார் ஈடுபட்டார்.
டெல்லியில் மத்திய மந்திரியை சந்தித்து ரேஷன் கடைகளை திறக்க அனுமதி கோரினார். மத்திய அரசும் அனுமதி தருவதாக உறுதியளித்திருந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் ரேஷன்கடைகள் திறக்காத நிலையில் இந்த பொருட்கள் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி நிலவியது.
இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியை ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடைகளை திறந்து பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் புதுவை கவர்னர் தமிழிசை மீண்டும் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். ரேஷன் கடைகள் மூலமாக தீபாவளி பண்டிகைக்காக 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்க அனுமதியளித்துள்ளார். இதனால் பல ஆண்டுக்கு பின் மீண்டும் புதுவையில் ரேஷன்கடைகள் திறக்கப்பட உள்ளது.
அதோடு மேலும் சில கோப்புக்கும் கவர்னர் தமிழிசை அனுமதி வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவையில் உள்ள அனைத்து குடும்பத்துக்கும் ரேஷன்கடைகள் மூலமாக 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கும் முதல்-அமைச்சரின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் வருகிற 8-ந்தேதி முதல், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான கல்வித்துறையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் காரைக்கால் பகுதியில் அட்டவணை மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு 4-ம் கட்டமாக 83 வீடுகள் கட்ட மத்திய அரசின் பங்கு ரூ. 16.86 லட்சத்தை விடுவிக்கவும், புதுவையில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஜூன் 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை 3 மாதங்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக ரொக்கம் வழங்க ரூ.2.75 கோடிக்கும் அனுமதி வழங்கி உள்ளார்.

புதுவையில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் தர்மா புரியில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் அரசுக்கு தொல்லை கொடுக்க கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்பட்டார். எந்த திட்டத்தையும் செயல்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தோம். அப்போது மறுக்கப்பட்டது.
இப்போது புதிய அரசு செயல்படுத்துகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதியை பற்றி கவலைப்படவில்லை. சாலைகள் மோசமாக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் தகுதியானவர்ளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். ரங்கசாமிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை. அவரின் ஒரே குறிக்கோள் முதல்-அமைச்சர் நாற்காலி மட்டுமே. தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவில்லை. கூடுதல் நிதி பெற மத்திய அமைச்சர்களை சந்திக்கவில்லை.
இப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்கால் பகுதியில் உள்ள பாரதியார் வீதி, காமராஜர்சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
காரைக்கால்:
தெற்கு வங்கக்கடல் மத்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் புதுவை மாநிலம் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இன்று காலை 6.30 மணி அளவில் இடி-மின்னலுடன் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் உள்ள பாரதியார் வீதி, காமராஜர்சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. காரைக்கால் பகுதியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு விழா கண்ட புதுவை வ.உ.சி. பள்ளி கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளி 1887-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். நூற்றாண்டுகளை கடந்த இந்த பள்ளி கட்டிடம் தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த பள்ளி கட்டிடத்தை பிரெஞ்சு கலாசாரத்தின் அடிப்படையில் பழமை மாறாமல் புதுப்பிக்க புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.2 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கட்டிடத்தின் மீது வளர்ந்திருந்த மரங்கள், செடிகொடிகள் அகற்றப்பட்டு சுவரின் பூச்சுகள் சுரண்டப்பட்டுள்ளன.
கட்டிடத்தின் மேல்தளத்தினை தாங்கும் வகையில் ஆங்காங்கே இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டு தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைவாக முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 8-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சரான நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 8-ந்தேதி முதல் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அரைநாள் மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும்.
பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டும் சுழற்சி முறையில் இயங்கும். அதாவது, 1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும். இப்போது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது.
புதுச்சேரி அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பள்ளிகளில் பின்பற்றவேண்டும். தற்போது 90 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துநிலை ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை பள்ளி தலைமை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்களது சுய விருப்பத்தின்பேரில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம். மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயமல்ல. பள்ளிக்கு வராத மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது.
நகரப்பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், கிராமப்புற பகுதிகளில் காலை 9.30 மணிமுதல் மதியம் 1 மணிவரையிலும் பள்ளிகள் இயங்கும். மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அதை இறுதிசெய்த பின்னர் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
9-ம் வகுப்புக்கு மேல் முழுநேரமும் வகுப்புகளை நடத்த பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதுதொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும்.
பள்ளிக்கட்டணம் குறித்து ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளிகளில் 75 சதவீத கட்டணமே வசூலிக்கவேண்டும். அதற்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவைக்கு தனிக்கல்வி வாரியம் அமைக்க ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனை அமைப்பதுதான் அரசின் எண்ணம். அதற்கு போதிய நிதியில்லாததால் தனிக்கல்வி வாரியம் அமைக்கப்படாமல் உள்ளது.
புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இடத்தை பெறுவது தொடர்பாக விரைவில் மத்திய கல்வி மந்திரியை சந்தித்து பேசுவேன். மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவது தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
பேட்டியின்போது கல்வித்துறை செயலாளர் அசோக்குமார், இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.

புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.800 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
புதுச்சேரி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இது ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான அக விலைப்படி உயர்வுக்கான நிலுவைத்தொகை வருகிற நவம்பர் மாதம் வழங்கப்படும்.
இதன்மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.800 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பஞ்சப் படியை உயர்த்தி அரசாணை வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அதனை அமல்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட சகோதரர் ரஜினிகாந்தின் கலை உலக சாதனையை தமிழக மக்களைப்போலவே மத்திய அரசும் அங்கீகரித்து இருக்கிறது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட சகோதரர் ரஜினிகாந்தின் கலை உலக சாதனையை தமிழக மக்களைப்போலவே மத்திய அரசும் அங்கீகரித்து இருக்கிறது. இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. 6 மாத ஆட்சியில் அமைதி மாநிலம் என்ற நிலை மாறி புதுச்சேரி கொலை நகரமாகி வருகிறது என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி:
சமூக வலைதளத்தில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்த 6 மாத காலத்தில் மாநிலத்தின் அமைதி குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு, கடைகளில் பணம் பறித்தல், தொழிற்சாலைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களை மிரட்டி மாமூல் வசூல் போன்றவை தாராளமாக நடந்து வருகிறது.
கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின்போது சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தோம். தற்போது புதுவை மாநிலத்தில் பணிபுரிகின்ற இதே காவல்துறை அதிகாரிகள் தான் அப்போது மிக சிறப்பாக பணி செய்து சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறி மாநில மக்கள் அச்சத்திலும், பீதியிலும் வாழ வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வெளியே நடமாட முடியவில்லை. கடைகளுக்குள் புகுந்து ரவுடிகள் மிரட்டி செல்கின்றனர்.
கடந்த 6 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு காரைக்காலில் ஒருவர் கூலிப் படையால் கொலை செய்யப்பட்டுள்ளார். வாணரப்பேட்டையில் 2 பேர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்ந்து நடந்து வருகிறது. தொழிற்சாலை அதிபர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. அவர்களை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. அமைதியான மாநிலம் என்ற நிலை மாறி புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்க வேண்டும். வாணரப்பேட்டையில் நடைபெற்ற கொலை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்.
ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது, எவ்வாறு கட்சியின் பலத்தை வளர்த்து கொள்வது என்பதைத்தான் பார்க்கின்றனர். நிர்வாகத்தை பற்றியோ, மாநில மக்களை பற்றியோ கவலையில்லை.
இப்போதாவது விழித்துக்கொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தலைமை அதிகாரியும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய மந்திரிகளை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற நடவடிக்கை இல்லை. புதுவை மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பை முதல்-அமைச்சர் கொடுக்க வேண்டும்.
தற்போது விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணை விலைவாசி விஷம் போல் உயர்ந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இந்த விலையை உயர்த்துவதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அதற்கான தண்டனையை மத்திய அரசுக்கு இந்த நாட்டு மக்கள் விரைவில் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட உள்ளது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரையை சேர்ந்த தம்பதி கைக்குழந்தையுடன் பஸ்களுக்கிடையே சிக்கி உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரையை சேர்ந்த கணவன்-மனைவி தனது கைக்குழந்தையுடன் நேற்று முன்தினம் காலை புதுவைக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். கல்மண்டபம் என்ற இடத்தில் முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்த முயன்றனர். அப்போது எதிர்புறம் ஒரு பஸ் வந்தது.
இந்த 2 பஸ்களுக்கும் இடையில் ஸ்கூட்டருடன் தம்பதியர் சிக்கிக் கொண்டனர். இதை சைடு கண்ணாடியில் பார்த்த 2 பஸ் டிரைவர்களும் உடனடியாக பஸ்சை நிறுத்தினர். இருப்பினும் ஒரு பஸ்சின் மீது மோதி ஸ்கூட்டர் நின்றது. தக்க சமயத்தில் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தியதால் இடிபாடுகளுக்குள் சிக்கிய தம்பதியர் நூல் இழையில் உயிர் தப்பினர். அப்போது ஸ்கூட்டரில் வந்த பெண் தனது கணவரை வசைபாடினார்.
இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு மாதமாக அரசு ஊழியர்களுக்கான போனஸ் நடவடிக்கைகளில் நிதித்துறை மும்முரமாக ஈடுபட்டு வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து போனஸ் தொடர்பாக தனது முடிவினை நிதித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசு துறைகளில் பணிபுரியும் பி பிரிவு மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அரசிதழ் பதிவு பெறாத பி பிரிவு மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனசாக ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.ஆயிரத்து 200 வழங்கப்பட உள்ளது.
3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.ஆயிரத்து 184 வழங்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்கள் 15 ஆயிரம் பேர் பயனடைவர்.