search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    விடிய விடிய கனமழை- காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

    காரைக்கால் பகுதியில் உள்ள பாரதியார் வீதி, காமராஜர்சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    காரைக்கால்:

    தெற்கு வங்கக்கடல் மத்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் புதுவை மாநிலம் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது.

    இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இன்று காலை 6.30 மணி அளவில் இடி-மின்னலுடன் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் உள்ள பாரதியார் வீதி, காமராஜர்சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. காரைக்கால் பகுதியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

    காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×