search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி கவர்னர்"

    • வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும்.
    • நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    புதுச்சேரி:

    மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2-வது சர்வதேச ஆன்மிக மாநாடு ஆரோவில் யூனிட்டி மையத்தில் நடந்தது.

    இந்த மாநாட்டில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாழ்வில் அமைதி பல நேரங்களில் ஒரு சக்தியை தருகிறது. அன்னை, அரவிந்தர் அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் அமைதியையும், வலிமையையும் நாம் பெற்று வருகிறோம்.

    கடலில் அலையானது எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது. அதே போல வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். அதனை பாறைகள் போல் உறுதியாக எதிர்கொள்ளவேண்டும்.

    தற்கால சூழலில் தற்கொலைகள் அதிகம் நிலவுகிறது. அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. முன்னோர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

    காலை தியானத்தோடு யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மனசக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும். இதைத் தான் ஆன்மிகம் சொல்கிறது.

    மகாபாரதம், அரவிந்தர், அன்னை ஆகியோரின் கதை, பேச்சுக்களை கேட்டால் தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு பெற முடியும். அதன் மூலம் நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.
    • மஹன்யா ஸ்ரீ ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    ஓசூர்:

    அயோத்தியில் ராமர் கோவில், மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர்.

    இந்த நிலையில், விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி மஹன்யாஸ்ரீ என்பவர், ராமர் பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார். இந்த பாடலை, தெலங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மாணவி மஹன்யா ஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர் உடன் இருந்தனர்.

    அப்போது, அங்கிருந்த டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.

    மேலும் மஹன்யா ஸ்ரீயை மிகவும் பாராட்டினார். மஹன்யாஸ்ரீ ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் வசித்து வரும் சிவராமன், ஜெயப்ரியா தம்பதியரின் மகள் ஆவார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
    • கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள 200 ஆண்டுகால பழமையான பிரெஞ்சு கட்டிடத்தில் கவர்னர் மாளிகை செயல்பட்டு வருகிறது.

    பழமையான பாரம்பரிய கட்டிடம் 2 நூற்றாண்டுகளை கடந்து விட்டதால் சேதம் அடைந்தது. இதை அவ்வப்போது சீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் கவர்னர் மாளிகையின் சில பகுதிகளின் மேல்பகுதிகள் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மாளிகையை காலி செய்தால்தான் முழுமையாக சீரமைக்க முடியும் என அரசின் பொதுப் பணித்துறை தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய புதிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    கடற்கரை சாலையில் பழமை மாறாமல் புதிதாக கட்டப்பட்ட மேரிஹால், பழைய சாராய ஆலையில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பான கோப்பும் கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய கவர்னர் தமிழிசை ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த 3 இடத்தில் எந்த கட்டிடத்தை அவர் தேர்வு செய்துள்ளார் என்ற விவரம் வெளியிடப் படவில்லை.

    இருப்பினும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.

    • 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
    • தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    புதுச்சேரியில் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா மூலமாக 4,000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

    இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.

    இது மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    • பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
    • மத்திய அரசு கொண்டுவர போகும் திட்டங்களால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


    காந்திமதி அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு கோவிலை சுற்றி வந்து நெல்லையப்பர் சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது கோவிலை சுற்றினாலே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எதுவும் வராது என்று அவர் கூறினார். தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்ற சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் இன்று மக்களோடு மக்களாக முகக்கவசமின்றி சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. அதிலும் நான் மருத்துவராக இருப்பதால் நம் நாட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.

    பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த பயணத்தின் போது இந்தியாவின் பெருமை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் தலைவர் உலகத் தலைவராக மாறி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இதுவரைக்கும் இல்லாத வளர்ச்சியை புதுச்சேரி பார்த்து வருகிறது. 13 வருடம் கழித்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கின்றோம். இதற்கு முன்பை விட ரூ. 2 ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல பல புதிய திட்டங்களை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நிறைவேற்றி இருப்பதாக பட்டியல் போடுகிறார். இதெல்லாம் ஆளுனரின் ஒத்துழைப்பால்தான் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் இன்னும் வாக்குறுதியாகவே உள்ளது. நாங்கள் 65 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உடனடியாக கொடுத்துவிட்டோம். இதெல்லாம் ஆளுனரும், முதல்-மந்திரி இணைந்து பணியாற்றியதால்தான் நடந்தது.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் அதை முற்றிலும் புறந்தள்ளவில்லை. அவர்களை நிரந்தரமாக்க முடியாது என்பதால் 3 மாதம், 3 மாதமாக பணி நீட்டிப்பு செய்கிறோம். இன்னும் சொல்லப்போனால் உயர்நீதிமன்றமே நேரடி நியமனத்திற்கு தடை உட்பட சில தடைகளை விதித்து இருக்கிறது. அதை பின்பற்றுவதில் தான் பிரச்சினைகள் வருகிறதே தவிர, இதில் ஆளுனர் அழுத்தம் இல்லை. மற்றுபடி புதுச்சேரி முதல்-மந்திரிக்கும் எனக்கும் உள்ள பிரச்சனையே அண்ணன்-தங்கை பிரச்சினைதான். வேறு எந்த பிரச்சனையும் கிடையாது.

    அதிகாரிகள் தரப்பில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வேகம் குறைவாக இருக்கலாம். நான் இதுவரை எந்த கோப்புகளையும் கையெழுத்திடாமல் கிடப்பில் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 1500 கோப்புகளை கையெழுத்திட்டேன். மார்ச் 31-ந் தேதி முழு நிதிநிலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இரவு 11.30 மணி வரை கையெழுத்திட்டேன். அதனால் தான் பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என்றார். நான் அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதப்படுத்த பாஸ்ட் புதுச்சேரி என்றேன்.

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தென் பகுதிக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்வட்ட பாதையை தூத்துக்குடி துறைமுக தேசிய நெடுஞ்சாலையோடு இணைப்பது, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என பல திட்டங்கள் வரப்போகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள். அதுமட்டுமல்ல தூத்துக்குடி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

    நான் தூத்துக்குடியில் போட்டியிட்ட போது புல்லட் ரெயில் விடப்போவதாக பேசினேன். அப்போது சாதாரண ரெயிலே இல்லை புல்லட் ரெயில் எப்படி கொண்டு வருவீர்கள் என்றார்கள். அது கனவு. தென்பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எனது கனவு தான் அது. ஆனால் தற்போது புல்லட் ரெயில் விடுவது தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

    • திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை மங்கள இசையுடன் தொடங்குகிறது.
    • புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    திருவையாறு:

    திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 6 மணிக்கு 176-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது.

    தியாகப்பிர்ம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து 10-ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

    விழா பந்தலில் காலை 8 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு ஆராதனை விழா பந்தலில் 500-க்கு மேற்பட்ட கர்நாட இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தனம் கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    அதை தொடர்ந்து 11.30 மணிக்கு சோபனா விக்னேஷ் பாடுகிறார். இரவு 10.30 க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி குறித்தும் விவாதித்தார்.
    • புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை தொடங்குவது குறித்தும் விவாதித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

    சந்திப்பின்போது, பல்கலைக்கழக ஒப்புதலுடன் புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போது உள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்வி தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது குறித்தும், புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி குறித்தும் விவாதித்தார்.

    புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை தொடங்குவது குறித்தும் விவாதித்தார். இதுதொடர்பான கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் அளித்துள்ளார்.

    துணைநிலை கவர்னரின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், மேலும் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    ×