என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி அரசு மீது இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழல் புகார்- கவர்னரிடம் மனு அளித்தனர்
    X

    புதுச்சேரி அரசு மீது இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழல் புகார்- கவர்னரிடம் மனு அளித்தனர்

    • பத்திரப்பதிவு, நில அளவை, பொதுப்பணி என அரசுத் துறைகளில் ஊழல்கள் மலிந்துள்ளது.
    • காமாட்சி அம்மன்கோவில் நிலம் சூறையாடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சியினர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பத்திரப்பதிவு, நில அளவை, பொதுப்பணி என அரசுத் துறைகளில் ஊழல்கள் மலிந்துள்ளது. இதில் அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன்கோவில் நிலம் சூறையாடப்பட்டுள்ளது.

    சென்டாக் மாணவர் சேர்க்கையில் அயல்நாடுகளில் வாழும் இந்திய மாணவர்கள் சேர்க்கையிலும் முறைகேடு நடந்துள்ளது. வில்லியனூர், கருவடிக் குப்பத்தில் பா.ஜ.க. பிரமுகர்கொலையில் பின்புலமாக நில ஆக்கிரமிப்பும், கஞ்சா விற்பனையும் உள்ளது. இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. சட்டமன்ற கட்சிதலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், ம.தி.மு.க. செயலாளர் ஹேமாபாண்டுரங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×