என் மலர்
புதுச்சேரி
அயோடின் சத்து குறைந்தால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர் அறிவுறுத்தினார்.
காரைக்கால்:
ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி உலக அயோடின் கோளாறுகள் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காரைக்கால் மாவட்ட நலவழித்துறை ஊட்டச்சத்து பிரிவு சார்பில், காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அயோடின் குறைபாடுகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
டாக்டர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர் பால அரவிந்தன், சுகாதார மேற்பார்வையாளர் எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் டாக்டர் பால அரவிந்தன் பேசியதாவது:-
அயோடின் சத்து மனிதர்களின் உடல் ஆரோக்கியம், மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதனால் அனைவரும் அயோடின் சத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக அயோடின் சத்து குறைபாட்டால் முன் கழுத்து வீக்கம், உடல் சோர்வு, மந்தநிலை, எடை அதிகரித்தல், மனச்சோர்வு, முடி உதிர்வு, வறண்ட சருமம் போன்றவை ஏற்படும்.
குறிப்பாக கர்ப்ப காலத்தில் அயோடின் சத்து குறைவு ஏற்பட்டால் பெண்களுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம், மகப்பேறுக்கு முன் சிசு மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. பிறக்கும் குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி பாதிப்பு மற்றும் பிறவி ஊனம் கூட ஏற்படலாம்.
அயோடின் சத்துக்கள் நிறைந்த முட்டை, இறைச்சி, கீரை, மீன், பால், வாழைப்பழம் மற்றும் அயோடின் கலந்த உப்பு போன்றவற்றை உண்பதால் அயோடின் குறைபாடுகள் வராது.
இவ்வாறு அவர் பேசினார்.

கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களை கொன்றதாக ஆட்டோ டிரைவர் சுந்தரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் பகுதியில் உள்ள சுதந்திர பொன்விழா நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது.
200-க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருந்தன. இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளே பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென 10-க்கும் மேற்பட்ட நாய்கள் வாந்தி எடுத்தும், உயிருக்கு துடித்துக்கொண்டும் இருந்தன.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தண்ணீர், மருந்து கொடுத்துள்ளனர். இருந்தபோதும் 7 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அப்பகுதி மக்கள் இதுகுறித்து கோரிமேடு போலீசார் மற்றும் விலங்குகள் நல அமைப்பினருக்கும், தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அருகில் வசிக்கும் சிலர் நாய்களை கொல்லும் நோக்கிலேயே கோழி இறைச்சியில் செடிகளுக்கு பயன்படுத்தும் விஷத்தை (பூச்சிகொல்லி மருந்து) கலந்து கொன்றது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இந்த நாய்களை அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் விஷம் வைத்து நாய்களை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய 3 வயது ஆண் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.
இந்த ஆத்திரத்தில் கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களை கொன்றதாக சுந்தர் தெரிவித்தார். இதையடுத்து சுந்தரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகிற 25-ந்தேதி தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புதுவை அரசு சுகாதாரத்துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 25-ந் தேதி மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது கவர்னரின் அறிவுறுத்தலின்படி ‘நாங்க போட்டுக்கிட்டோம், நீங்க போட்டுக்கிட்டீங்களா’ என்ற கருவுடன் நடைபெறும். நாட்டில் இதுவரை கிட்டத்தட்ட 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போதைய நிலவரத்தின்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மட்டுமே நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும் தீவிர சிகிச்சை பெறும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே ஆவர்.
புதுச்சேரி மாநிலத்தில் சராசரியாக 70 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துள்ளனர். இன்னும் 30 சதவீத நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. 100 சதவீதம் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் தான் இந்த கொடிய நோயில் இருந்து நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு செல்ல முடியும்.
அதனால் இந்த தடுப்பூசி திருவிழாவில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று நம் புதுவை மாநிலத்தை 100 சதவீதம் தடுப்பூசி பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். மேலும் வாகன வசதி இல்லாதோரும், முதியோர்களும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமாயின் எங்களின் 24 மணிநேர 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் உங்கள் இல்லம் தேடிவந்து தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை ஒவ்வாமை போன்ற எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வரும் 25-ந்தேதி நடைபெறும் தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமில்லாது முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி சோப்புபோட்டு கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடல் வளத்தை பாதுகாக்கும் மாங்குரோவ் காடுகள் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளதை தடுத்து முறையாக பராமரிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்த்திட்டு, உப்பனாறு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் மாங்குரோவ் என அழைக்கப்படும் சதுப்பு நில தாவரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
கடல் அரிப்பையும், கடல் சீற்றத்தை தடுப்பதில் மாங்குரோவ் காடுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. உதாரணமாக கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது புதுவை நகரப்பகுதியில் பெரும் சேதம் ஏற்படாமல் இந்த மாங்குரோவ் காடுகள் தடுப்பு அரண் ஆக இருந்தது.
இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் இனப் பெருக்கத்துக்காக மாங்குரோவ் காடுகளுக்கு வந்து தங்கி விட்டுச் செல்கின்றன. சிறு நீர்வாழ் விலங்குகளின் வாழ்விடமாகவும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஏற்றதாக இருந்து வருவதே இதற்கு காரணம். புதுச்சேரியின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதிலும் மாங்குரோவ் காடுகள் முக்கியமானதாக விளங்குகின்றன.
இத்தனை சிறப்புமிக்க மாங்குரோவ் காடுகள் தற்போது அழிவை நோக்கி செல்கின்றன. அதாவது சிலர் மாங்ரோவ் காடுகளின் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி கற்களில் கட்டி கடலுக்குள் மூழ்கடித்து விடுகின்றனர். இதனால் இயற்கையாகவே கடலுக்குள் மரம் இருப்பதுபோல் காணப்படுவதால் அதை சுற்றி மீன்கள் அதிக அளவில் படையெடுக்கின்றன.
அதை பயன்படுத்தி வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் எளிதாக மீன்களை பிடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாக தெரியவந்துள்ளது.
மாங்குரோவ் மரங்களை வெட்டி புழுக்களை பிடித்து இறால் பண்ணைக்கு பயன்படுத்தி வந்தனர். இதனால் பல இடங்களில் மரங்கள் அழியும் நிலையில் இருந்தது. இதை தடுக்க 2015-ம் ஆண்டு புதுவை வனத்துறை புழுக்கள் வேட்டைக்கு தடை விதித்தது. தற்போது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் மாங்குரோவ் மரங்களை வெட்டி புழுக்கள் எடுக்கப்படுகிறது.
இதற்காக தேங்காய்த்திட்டு, உப்பனாறு பகுதிகளில் உள்ள மாங்குரோவ் காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் உள்ளவர்கள் வீடுகளில் சேரும் கழிவுகளை மாங்குரோவ் காடுகளில் நேரடியாக விடுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள், மதுபாட்டில்கள் மற்றும் மக்காத குப்பைகளும் இங்கு கொட்டப்படுகின்றன.
இயற்கைக்கு மாறாக இப்படி அதிக அளவில் குப்பைகள் தேங்குவதால் மரங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அவை பட்டுப்போய் காணப்படுகின்றன. அங்கு தேங்கி கிடக்கும் தண்ணீரும் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. கடல் வளம், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநில காடுகளை பாதுகாப்பதில் இனியாவது விழித்தெழுந்து முறையாக பராமரிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆன்மிக பூமியான புதுச்சேரியில் விபசார தொழிலை ஒழித்து கட்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
புதுச்சேரி:
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் தங்களது பொழுதை கழிக்க பல்வேறு இடங்கள் உள்ளன. கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம், படகுகுழாம், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.
புதுச்சேரியின் மதுபானத்துக்கு மது பிரியர்கள் மத்தியில் மவுசு அதிகம். இதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்கள், தொழிலதிபர்கள் வார இறுதிநாட்களில் புதுவை வந்து ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ‘குறி’ வைத்து விபசார தொழில் கொடி கட்டி பறக்கிறது. சொகுசு தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள் விபசாரத்துக்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகளை ஏற்பாடு செய்து கொடுக்கின்றன. இதற்காக பெரும் தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்கின்றனர். அழகு நிலையங்களில் விபசாரத்துக்கு அழைப்பதற்கு என்று பெண்களை வைத்துள்ளனர்.
செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தங்களது பேச்சில் மயக்க வைத்து அழகு நிலையங்களுக்கு வர வைத்து விபசாரத்தில் ஈடுபட வைக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்துக்கு தொகை நிர்ணயம் செய்து வசூல் செய்கின்றனர். இதில் வருமானம் குவிவதால் பெரிய அளவிலான கூட்டம் இந்த தொழிலில் களம் இறங்கியுள்ளது.
இந்த தொழிலுக்கு புதுவை போலீசாரின் ஆசி முழுவதுமாக உள்ளதாக கூறப்படுகிறது. பெயரளவுக்கு அவ்வப்போது ஒரு சில இடங்களில் சோதனை நடத்தி கணக்கு காட்டுவதோடு அவர்களது வேலை முடிந்து விடுகிறது.
விபசாரம், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளும் சில போலீசார் அவர்களிடம் இருந்து பெருந்தொகையை மாமூலாக வசூலித்து கொள்கின்றனர். இந்த விசுவாசமான போலீசார், உயர் அதிகாரிகள் சோதனைக்கு செல்வதை முன்கூட்டிேய சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தி விடுகின்றனர்.
எனவே பெரும்பாலான இடங்களில் சோதனைக்கு செல்லும் உயர் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்புகின்றனர்.
இதுமட்டுமின்றி சோதனைக்கு செல்லும் போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபடும் வெளியூர் நபர்களை பிடித்து அவர்கள் வைத்திருக்கும் பணம், நகையை பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
பெருமை வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அந்த நபர்கள் சபல புத்தியால் அவற்றை இழந்துவிட்ட நிலையிலும் வெளியில் தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி சொல்லாமல், கொள்ளாமல் புதுவையை விட்டு வெளியேறுகின்றனர்.
காவல்துறையில் உள்ள இத்தகைய போலீசாரை கண்டறிந்து அவர்களை களையெடுக்க வேண்டும். ஆன்மிக பூமியான புதுச்சேரியில் விபசார தொழிலை ஒழித்து கட்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டார்.
பாகூர்:
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு வடக்கு பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு (வயது 32). இவர் புதுவை ஐ.ஆர்.பி.என். பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் குமாரவேலுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் குமாரவேலு அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு 11 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமிக்கும், குமாரவேலு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சிறுமியின் தந்தை விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது குமாரவேலு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை சிறுமி தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, அரியாங்குப்பத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர்கள், தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு, குமாரவேலு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குமாரவேலு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அங்காடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புதுச்சேரி:
புதுவையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் சிறப்பு அங்காடி அமைக்கப்படுவது வழக்கம். ரோடியர் மில் திடல் அல்லது தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இந்த சிறப்பு அங்காடி செயல்படும்.
இந்த அங்காடியில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள், பட்டாசுகள் விற்பனை செய்யப்படும். பாப்ஸ்கோ நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்கியதன் காரணமாக இந்த சிறப்பு அங்காடியானது கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து, மீண்டும் தீபாவளி சிறப்பங்காடியை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.3 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அங்காடி அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இந்த ஆண்டு சிறப்பு அங்காடி செயல்பட உள்ளது. இதற்காக அங்கு பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வருகிற 24-ந்தேதி சிறப்பு அங்காடியை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்துவைக்க உள்ளார். தொடர்ந்து தீபாவளி வரை இந்த சிறப்பங்காடி செயல்பட உள்ளது.

நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்க வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாட்ஸ்-அப் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் தொடர் முடிந்து 2 மாதங்களாகியும் எந்த கோப்பும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. சட்டமன்ற அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. பாப்ஸ்கோ தீபாவளி பஜார் எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை.
நிதியை கையில் வைத்திருந்து அறிவித்திருக்க வேண்டும். நிதி பற்றாக்குறையை போக்க வருவாயை பெருக்கவில்லை.
ஜி.எஸ்.டி. இழப்பீடு இனி கிடைக்காது. ரூ. 1,250 கோடி வர வேண்டிய நிதி கிடைக்காமல் போவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற கருத்து உண்மையில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை ஏதும் இல்லை. மக்களை மாநில அரசு ஏமாற்றக்கூடாது. பஞ்சாலைகளை திறக்க ஆயத்த வேலையே நடக்கவில்லை.
அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி எடுக்கவில்லை. புதுவை அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எந்த வேலையும் நடக்கவில்லை.
தேர்தல் ஆணையருக்கு தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்க வேண்டும். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தேர்தல் ஆணையரை சந்தித்துள்ளார். அதற்கு அவசியம் என்ன?
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர் இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்ற 3 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டு பகுதியை சேர்ந்தவர் குமார் ஆனந்த். பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். அவர், பருத்திக்குடி பகுதியில் 4 வேலி நிலம் வாங்கி, தனது உறவினர் குணசேகரன் பராமரிப்பில் விட்டுள்ளார்.
இந்த நிலையில், நாகை மாவட்டம் சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் (73) என்பவர் கடந்த 20.5.2018 அன்று குமார் ஆனந்த் இறந்துவிட்டதாக கூறி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மும்முனி கிராமத்தில், போலியான இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் குமார் ஆனந்த் இறப்பதற்கு முன்னதாக தனக்கு பவர் ஆப் அத்தாரிட்டி கொடுத்துள்ளதாக மற்றொரு போலி ஆவணத்தை தயாரித்துள்ளார்.
இதன்பின் 7.9.2021 அன்று திருநள்ளாறு சார்பதிவாளர் அலுவலகத்தில், செருமா விளங்கை கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் (46) மனைவி விஜயா மற்றும் நெடுங்காடு வடமட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் (41) ஆகியோருக்கு அந்த நிலத்தை தேவராஜ் விற்றுள்ளார். இந்த பத்திர பதிவிற்கு, காரைக்காலைச் சேர்ந்த செய்யது முகமது முகைதீன் அப்துல் காதர் (45) உடந்தையாக இருந்துள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் குமார் ஆனந்த், இறந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குணசேகரன் திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தேவராஜ், பாஸ்கரன், செய்யது முகமது முகைதீன் அப்துல் காதர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளங்கோவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.48-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளது.
எனவே தற்போது தமிழகத்தில் இருந்து மட்டுமே காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தொடர் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக புதுவையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.20-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.40-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர கத்தரிக்காய் ரூ.40-க்கும், கேரட் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.35-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், உருளைக்கிழக்கு ரூ.30-க்கும், சின்ன வெங்காயம் ரூ.30-க்கும், முட்டைக்கோஸ் ரூ.12-க்கும், தேங்காய் பெரியது ரூ.25-க்கும், சிறியது ரூ.15-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘வடமாநிலம், தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக தற்போது காய் கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இதேபோல் சமையலுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பெரிய வெங்காயம் தற்போது கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை வருவதால் இன்னும் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

வில்லியனூர் பகுதியில் ஒரே நாளில் 44 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் பகுதியில் நாய், மாடு, பன்றிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதையடுத்து போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை ஆரியப்பாளையம் பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோர் என 20 பேரை துரத்தி துரத்தி கடித்தது.
பின்னர் வில்லியனூர் மார்க்கெட், தில்லைநகர், திருக்காமீஸ்வரர் நகர் பகுதிக்குள் புகுந்த அந்த நாய் மேலும் 24 பேரை கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த 44 பேரும் சிகிச்சை பெறுவதற்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படையெடுத்தனர்.
ஒரே நாளில் 44 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெறி நாயை பிடிக்கும் நடவடிக்கையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அனைத்து விதக் கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம்.
புதுச்சேரி:
புதுவை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
"புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஏற்கெனவே அக்.15-ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மேலும் அக்.31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இதே போல் தினசரி, சமுதாயப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும், அனைத்து நாட்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாகத் திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்.

திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அனைத்து விதக் கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகள், தேநீர்க் கடைகள், பழச்சாறு நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி இரவு 11 மணி வரை இயங்கலாம். மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம்.
படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக இயங்கலாம். திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் கொரோனா விதிகளைப் பின்பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம்".
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.