search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    அறிவித்த திட்டங்களை நடைமுறைபடுத்த ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லை- நாராயணசாமி

    நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்க வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாட்ஸ்-அப் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் தொடர் முடிந்து 2 மாதங்களாகியும் எந்த கோப்பும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. சட்டமன்ற அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. பாப்ஸ்கோ தீபாவளி பஜார் எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை.

    நிதியை கையில் வைத்திருந்து அறிவித்திருக்க வேண்டும். நிதி பற்றாக்குறையை போக்க வருவாயை பெருக்கவில்லை.

    ஜி.எஸ்.டி. இழப்பீடு இனி கிடைக்காது. ரூ. 1,250 கோடி வர வேண்டிய நிதி கிடைக்காமல் போவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

    உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற கருத்து உண்மையில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை ஏதும் இல்லை. மக்களை மாநில அரசு ஏமாற்றக்கூடாது. பஞ்சாலைகளை திறக்க ஆயத்த வேலையே நடக்கவில்லை.

    அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி எடுக்கவில்லை. புதுவை அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எந்த வேலையும் நடக்கவில்லை.

    தேர்தல் ஆணையருக்கு தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்க வேண்டும். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தேர்தல் ஆணையரை சந்தித்துள்ளார். அதற்கு அவசியம் என்ன?

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    Next Story
    ×